இனி பழைய மாதிரி இல்லை.. கோவாவிற்கே போட்டி.. மொத்தமாக மாற போகும் தமிழ்நாடு பீச்கள்.. திட்டம் ரெடி!
சென்னை: ₹1,675 கோடியில் கடலோர மேம்பாட்டு திட்டம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. என்ன மாதிரியான மாற்றங்களை சென்னை கடலோர பகுதிகள் சந்திக்க போகிறது என்று இதில் விளக்கமாக கொடுக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு கடற்கரை மறுசீரமைப்பு இயக்கத்தின் சார்பில் உலக வங்கி கடனுதவியுடன் ₹1,675 கோடியில் கடலோர மேம்பாட்டு புதிய திட்டங்களை அறிவித்தது தமிழ்நாடு அரசு. இதன் மூலம் தமிழ்நாடு முழுக்க உள்ள கடலோர பகுதிகள் மேம்படுத்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு கடலோர பகுதிகளை சீரமைக்கவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். தமிழ்நாடு கடலோர மறுசீரமைப்பு இயக்கத்தின் கீழ் அமைக்கப்படும் சில முக்கிய திட்டங்கள் இங்கே உள்ளன.
1.நாகப்பட்டினம் மற்றும் சென்னையில் கடல் ஆமை பாதுகாப்பு மையங்கள்
2. மனோரா, தஞ்சாவூரில் உள்ள சர்வதேச டுகோங் பாதுகாப்பு மையம்
3. பள்ளிக்கரணை பாதுகாப்பு மையம் மற்றும் சென்னையில் உள்ள சதுப்பு நிலத்தை மீட்டமைத்தல்
4. சதுப்புநிலங்கள், கடல் புல் மற்றும் நீல கார்பன் தீர்வுகள்
5. மன்னார் வளைகுடா கரியாச்சல்லி தீவுகளில் அரிப்பு கட்டுப்பாடு மற்றும் பவழ மறுசீரமைப்பு
6. ப்ளூ பிளாக் கடற்கரைகள்
7. கடல் பிளாஸ்டிக் மாசுபாட்டை குறைத்தல்.
8. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் ஸ்மார்ட் கடற்கரை கிராமங்கள்
9. எண்ணூர் சிற்றோடை மீட்பு ஆகிய பணிகளை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டங்கள் இந்த வருடமே நிறைவேற்றப்படும்.

புகைப்படங்கள் வெளியானது; கடலோர மேம்பாட்டு திட்டம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. என்ன மாதிரியான மாற்றங்களை சென்னை கடலோர பகுதிகள் சந்திக்க போகிறது என்று இதில் விளக்கமாக கொடுக்கப்பட்டு உள்ளது.
புதிய கடற்கரைகள்; சென்னை மற்றும் அதன் விரிவாக்கப்பட்ட பகுதிகள் என்று மொத்தம் 52 கிமீ கடற்கரையில் புதிதாக கடற்கரைகள் கொண்டு வரப்பட உள்ளன. இந்த பகுதி சுற்றுச்சூழலுக்கு உகந்த உள்கட்டமைப்புடன் கூடிய 20 கடற்கரைகளைப் பெற வாய்ப்புள்ளது;

. மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பு GCC ஆல் செயல்படுத்தப்பட்ட நிலையில் 2024 ஆம் ஆண்டில் பல மண்டலங்களில் கடற்கரைகளுக்கான திட்டங்கள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில்தான் புதிதாக பல கடற்கரைகள் தொடங்கப்பட உள்ளன. எண்ணூர், பெசன்ட் நகர், கோவளம், மெரினா ஆகிய பகுதிகளுக்கு கடலோர மேம்பாட்டுத் திட்டம் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலகத்தரம் வாய்ந்த பார்வையாளர் வசதிகளை மேம்படுத்த கடற்கரைகளுக்கு அருகில் உள்ள அரசு நிலங்கள் கண்டறியப்படும் அங்கே புதிய வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சுற்றுலா துறை: தமிழ்நாடு சுற்றுலாத் துறை கிழக்கு கடற்கரை சாலையில் பின்வரும் இடங்களை மேம்படுத்துகிறது. இதற்கான பணிகள் நடக்க தொடங்கி உள்ளன.
1. முதலியார்குப்பத்தில் புதிய கடற்கரை
2. புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்குடாவில் புதிய கடற்கரை
3. பிச்சாவரத்தை முக்கிய சுற்றுலாத் தலமாக மேம்படுத்துதல்
4. முத்துப்பேட்டை மாங்குரோவ் காடு மேம்பாடு
அதேபோல் இதில்தான் புதிதாக பல கடற்கரைகள் தொடங்கப்பட உள்ளன. எண்ணூர், பெசன்ட் நகர், கோவளம், மெரினா ஆகிய பகுதிகளுக்கு கடலோர மேம்பாட்டுத் திட்டம் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலகத்தரம் வாய்ந்த பார்வையாளர் வசதிகளை மேம்படுத்த கடற்கரைகளுக்கு அருகில் உள்ள அரசு நிலங்கள் கண்டறியப்படும் அங்கே புதிய வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications