ரூ 3000 வீக் என்ட்டை என்ஜாய் செய்யணுமா.. அப்போ "கோவாவுக்கு" சுற்றுலா போலாமே!
சென்னை: சென்னையிலிருந்து கம்மியான பட்ஜெட்டில் நல்லதொரு சுற்றுலா செல்ல வேண்டுமா, அதற்கு இத்தனை இடங்கள் இருக்கிறதே!
வாரத்தில் 5 அல்லது 6 நாட்கள் உழைக்கும் நமக்கு வார இறுதியில் விடுமுறை என்பது கட்டாயம் வேண்டும். அந்த இரு தினங்கள் வார விடுமுறையை நண்பர்களுடனும் குடும்பத்தினருடனு் ஜாலியாக கழிக்க வேண்டும்.

இதற்கு சுற்றுலா செல்வதுதான் ஒரு வகையான உற்சாகத்தை கொடுக்கும். ஆனால் வாராவாரம் டூர் செல்ல பட்ஜெட் வேண்டுமே! அதற்கு எங்கே போவது? அதிலும் சென்னைவாசிகள் பொதுவாக சென்னையிலிருக்கும் பெரும்பாலான இடங்களை பார்த்திருப்பார்கள்.
மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை என செல்வது போர் அடித்துவிடும். இதற்காக சென்னையை தவிர வேறு இடங்களை மக்கள் விரும்புகிறார்கள். அப்படி வெளியிடங்களுக்கு செல்ல அதற்கு பட்ஜெட் கூடுதலாகும். எனவே குறைந்த செலவில் எப்படி சுற்றுலா செல்லலாம் என்பதை பார்க்கலாம்.
சென்னையிலிருந்து ரூ 3000க்குள் ஏதாவது இடத்தை பார்த்துவிட வேண்டுமா. கவலையை விடுங்கள். இருக்கவே இருக்கு வர்க்கலா கடற்கரை! இது கேரள மாநில திருவனந்தபுரத்தில் உள்ளது. இதை குட்டி கோவா என்றும் அழைப்பார்கள். அரபிக் கடலை ஒட்டி அமைந்துள்ள இந்த கடற்கரை பாபநாசம் கடற்கரை என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த கடற்கரைக்கு அருகில் பாறைகளை கொண்டது. இங்கு செல்ல ஒருவருக்கு ரூ 3000 இருந்தால் போதும். சென்னையிலிருந்து வர்க்கலாவுக்கு செல்ல ரயிலில் 15 மணி நேரம் ஆகும். ரயிலில் டிக்கெட் விலையும் ரூ 500 அல்லது ரூ 600தான் இருக்கும். இங்கு கடற்கரைக்கு அருகிலேயே தங்கும் விடுதிகள் உள்ளன. இதில் ஒரு நாளைக்கு ரூ 500 முதல் 1000 வரை செலவாகும்.
இந்த கடற்கரையை சுற்றி நிறைய உணவகங்களும் சிற்றுண்டிகளும் உள்ளன. இங்கு பாறையின் உச்சியில் இருந்து சூரிய அஸ்தமனத்தை கண்டு களிக்கலாம். யோகா மற்றும் தியானம் செய்யலாம்., ஆயுர்வேத மசாஜ்களை எடுத்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால் பைக்கை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்லலாம்.
அது போல் இங்கு ஜனார்ததன சுவாமி கோயில் உள்ளது. 2000 ஆண்டுகள் பழமையானது. இந்த கோயில் 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம். இதன் கட்டடக் கலை அருமையாக இருக்கும். கோயிலுக்குள் நுழைந்ததும் ஒரு பழமையான ஆலமரம் இருக்கும். சதுர வடிவிலான மண்டபம் இருக்கும். அங்கு நவக்கிரகங்கள் உள்ளன.












Click it and Unblock the Notifications