சம்மர் டூர் போறீங்களா.. உங்கள் பயண செலவை பாதியாக குறைக்கும் விடுதிகளை பற்றி தெரிஞ்சுக்கங்க!
சென்னை: கோடைக்காலம் துவங்கி விட்ட நிலையில், பலரும் சுற்றுலா தளங்களுக்கு செல்கிறார்கள், அப்படி செல்பவர்கள், குறைந்த விலைகொண்ட தங்கும் விடுதிகள் எங்கு இருக்கிறது, அதேநேரத்தில் அந்த தங்கும் விடுதிகள் தரமான வசதிகளுடன் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அப்படி ஆசைப்படுபவரக்ளுக்கு பயண செலவை பாதியாக குறைக்கும் ஐந்து இடங்களை பற்றி பார்ப்போம்.
ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, மூணாறு, மணாலி, டார்ஜ்லிங், சிக்கிம், வடகிழக்கு மாநிலங்கள் என உங்கள் வசதிக்கு ஏற்றப்படி எங்க வேண்டுமானாலும் டூர் போங்க.. அப்படி டூர் போற இடத்துல , எந்த வசதியும் இல்லாத டுபாக்கூர் ரூம்களுக்கு ஆயிரக்கணக்கில் கொடுத்து ஏமாந்துறாதீங்க..

உங்களுக்கு குறைஞ்ச வாடகையில, நல்ல வசதிகளோட தங்கும் விடுதிகள் வேண்டுமா, இந்த கட்டுரையை பாருங்க..
ஹோட்டல் தமிழ்நாடு : ஹோட்டல் தமிழ்நாடு அப்படீன்றது தமிழ்நாடு சுற்றுலாத் துறை நடத்துற ஹோட்டல். ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, கன்னியாகுமரி, மகாபலிபுரம்னு தமிழ்நாட்டில் மொத்தம் 22 இடங்களில் இந்த ஹோட்டல் தமிழ்நாடு உள்ளது. இந்த ஹோட்டல்ல எப்படின்னா தனியார் ரிசார்ட்டில் இருக்கும் எல்லா வசதிகளுமே இங்கேயே இருக்கும்.
24 மணி நேர ரூம் சர்வீஸ், ஷவர், பார், வைஃபை, டிரை க்ளீன் என எல்லா வசதிகளும்கொண்ட இந்த தமிழ்நாடு ஹோட்டலில் ஓர் இரவு தங்க, 500 ரூபாய் போதும். 1,500 ரூபாய் இருந்தால் 4 நபர்கள் தங்கக்கூடிய ஓர் அறையும், இலவச காலை உணவும் கிடைக்கும். சூட் ரூம் புக் செய்தால்கூட ஓர் இரவுக்கு 3,000 ரூபாய் என்கிற அளவில் தான் இருக்கும். இதே மற்ற ஹோட்டல்களில் தங்க ஐந்தாயிரம் ரூபாய் கூட ஆகும். என்ன ஒரு சிக்கல் என்றால், சனி ஞாயிறு வெள்ளி போன்ற விடுமுறை தினங்களில் இந்த ஓட்டலில் புக்கிங் செய்வது சிரமம். ஆன்லைனில் புக்கிங் ஓபன் செய்தாலே அறைகள் ஹவுஸ்புல்லாகவே இருக்கும். சரியான திட்டமிடல் இருந்தால் உங்களுக்கு அறைகள் புக்கிங் செய்துவிட்டு வரலாம்.

அடுத்ததாக யூத் ஹாஸ்டல்: இந்தியா முழுவதுமே சுற்றுலா பயணிகள் விரும்பும் முக்கியமான தங்கும் விடுதிகளில் யூத் ஹாஸ்டல் பெரிய இடத்தை பிடித்துள்ளது. . இந்தியாவில் மட்டும் மொத்தம் 51 இடங்களிலும், உலகம் முழுவதும் 4,500-க்கும் அதிகமான இடங்களிலும் இந்த யூத் ஹாஸ்டல் இருக்கிறது. ஏதாவது ஓர் இடத்துக்குப் போவதாக இருந்தால், அங்கு யூத் ஹாஸ்டல் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு தங்கலாமா என்பதை முடிவு செய்யுங்கள். ஏனென்றால், இங்கு ஏசி ரூமில் ஒரு படுக்கைக்கு 320 ரூபாய் என்கிற அளவில் கூட குறைவாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. 4 பேர் தங்கக்கூடிய அறை என்றால், வெறும் 975 ரூபாய் என்கிற அளவில் கூட ரூம் கிடைக்கும்.
வேதாந்தா வேக் அப் ஹாஸ்டல்: வயநாடு, மூணாறு, தேக்கடி, எர்ணாகுளம், கொச்சின் உள்பட கேரளாவில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு செல்பவர்கள் வேதாந்தா வேக் அப் ஹாஸ்டலில் ரூம் இருக்கிறதா என்று தேடி பார்த்துட்டு செல்லுங்கள். ஏனென்றால், குடும்பத்தோடு அங்கு தங்க 1,500 ரூபாயில் ரூம்களும், சோலோ டிராவலர்களுக்கு 300 ரூபாயில் கூட படுக்கைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் ஹோம் ஸ்டே விரும்பிகளாக இருந்தால் வேதாந்தா வேக்அப் மிகவும் பிடிக்க வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டிலும் ஊட்டியில் வேதாந்தா வேக் அப் ஹாஸ்டல் இருக்கிறது. தேடி பாருங்கள் உங்களுக்கு தேவையான நாட்களில் அறைவாடகை குறைவாக கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

ஜோஸ்டல் : யூத் ஹாஸ்டல் போலவே ஜோஸ்டல் (zoste) ஹாஸ்டல்கள் டெல்லி, ஜெய்ப்பூர், மும்பை, கோவா, ஊட்டி என இந்தியாவில் 29 இடங்களில் இருக்கின்றன நண்பர்கள் சேர்ந்து குழுவாக டிராவல் ப்ளான்போடுவதாக இருந்தால், இந்த இடம் சிறப்பாக இருக்கும். 600 ரூபாய்க்கு கூட தனியாக சமையலறை, wifi, விளையாட்டு அறை, லாக்கர், 24 மணி நேர ஹவுஸ்கீப்பிங், இலவசமாக டீ/காபி என சகல வசிதியும் இந்த ஜோஸ்டலில் கிடைக்கும். அதுவும் கோவா மாதிரியான இடங்களில்கூட ஜோஸ்டலில் மிக குறைந்தவிலையில் ஹாஸ்டல்கிடைக்க வாய்ப்பு உள்ளது. தேடி பாருங்கள்.

பேக்பேக்கர் பாண்டா : இந்தியாவில் பல்வேறு சுற்றுலா தளங்களில் காணப்படும் பேக்பேக்கர் பாண்டாவில் 300 ரூபாய்க்குப் படுக்கையும், 800 ரூபாய்க்கு தனியறையும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பேக்பேக்கர் பாண்டாவின் விடுதிகள் இந்தியாவில் மொத்தம் 31 இடங்களில் இருக்கின்றன. எத்தனை பேர்கொண்ட குழுவாக இருந்தாலும் இங்கு தங்கலாம். ஆனால், 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை. ஆன்லைனிலேயே முன்பதிவு செய்யலாம். இதுதவிர பெங்களூரின் சோசியல் ரீகேப் சென்டர் , கோவாவில் ரெட் டோர் ஹாஸ்டல் போன்ற இடங்களில் குறைந்த வாடகையில் படுக்கைகள் கிடைக்கும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications