அதிரவைத்த பெரம்பூர் நகைக்கடை கொள்ளை.. 4 மாத தேடுதல் வேட்டைக்கு பிறகு முக்கிய குற்றவாளி கைது! பரபர!
சென்னை: பெரம்பூர் நகைக்கடை ஷட்டரை துளையிட்டு 9 கிலோ தங்க நகைகள், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 4 மாதங்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்த கொள்ளையன் கௌதமை பெங்களூரில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை பெரம்பூரில் உள்ள பிரபல நகைக்கடையில் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி, ஷட்டரை துளையிட்டு, 9 கிலோ தங்க நகைகள், ரூ.20 லட்சம் மதிப்பிலான வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக, 9 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வந்தது.

கர்நாடகா, ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தனிப்படை போலீஸார் முகாமிட்டு, தகவல்களை சேகரித்து வந்தனர். கடந்த மார்ச் மாதம் பெங்களூரில் உள்ள ஒரு லாட்ஜில், 2 பேர் நகைகளைப் பங்கு பிரிப்பது தொடர்பாக மோதலில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில், அவர்கள் கங்காதரன், ஸ்டீபன் என்பதும், பல கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டதும் தெரியவந்தது.
அவர்களிடமிருந்த இரண்டரை கிலோ நகைகள் குறித்து விசாரித்த போது, தங்கள் கூட்டாளிகளுடன் பெரம்பூர் நகைக்கடையில் கொள்ளையடித்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும், இது குறித்து தமிழ்நாடு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, கர்நாடகாவில் முகாமிட்டிருந்த தமிழ்நாடு தனிப்படை போலீஸார், கங்காதரன், ஸ்டீபன் ஆகியோரது கூட்டாளிகள் கஜேந்திரன், திவாகர் ஆகியோரைக் கைது செய்து, சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கங்காதரன், ஸ்டீபன், கஜேந்திரன், திவாகர், அருண், கவுதம் ஆகிய 6 பேர் சேர்ந்து, கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதற்கு கங்காதரன் மூளையாக இருந்து செயல்பட்டுள்ளார். தொடர்ந்து அதிரடியாக தேடுதல் வேட்டை நடத்தி கஜேந்திரன், திவாகரன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, தலைமறைவாக உள்ள அருண், கவுதம் ஆகியோரைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
சில நாட்களில் அருணையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அருணிடம் இருந்து முக்கால் கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டன. அருண், பெரம்பூர் பகுதியில் பழைய வாகனங்கள் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்ததோடு, காவலாளி இல்லாத நேரம் பார்த்து நகைக்கடையை நோட்டமிட்டு, தனது கூட்டாளிகளுக்கு தகவல் சொல்லி கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் கங்காதரன், ஸ்டீபன், கஜேந்திரன், திவாகர், அருண் மற்றும் நகைகளை உருக்கிய கொள்ளையன் கங்காதரனின் மனைவி கீதா மற்றும் அவரது மைத்துனர் ராகவேந்திரா என 7 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். 8வது முக்கிய குற்றவாளியான கௌதமை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
கௌதம் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்து வந்த சூழலில், தனிப்படை போலீசார் பெங்களுரில் கைது செய்துள்ளனர். பெரம்பூர் நகைக் கடையின் ஷட்டரை துளையிட்டு ரூ. 6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 8வது நபராக கௌதம் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications