விஜயகாந்த் நலமாக உள்ளார்... விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் - மியாட் அறிக்கை

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமாக இருப்பதாகவும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

தேமுதிக தலைவா் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா இருவரும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இருவரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, மருத்துவமனையில் இருந்து அண்மையில் வீடு திரும்பினர்.

Vijaykanth is fine ... will be discharged soon says hospital

தொடர்ந்து, வீட்டுக் கண்காணிப்பில் இருந்து வந்த விஜயகாந்துக்கு, செவ்வாய்க்கிழமை மாலை உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவர் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், விஜயகாந்த் இரண்டாம் கட்டபரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார். வதந்திகளை நம்ப வேண்டாம். விஜயகாந்த் நலமுடன் உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+