அடிக்கிற வெயிலுக்கு குளுகுளுன்னு.. சென்னைக்கு பக்கத்துல ஏதாவது ஹில் ஸ்டேஷன் போகலாமா? இதோ லிஸ்ட்
சென்னை: சென்னையிலிருந்து ஒரே இரவில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள குளுகுளு மலை வாசஸ்தலங்களுக்கும் பயணிக்க முடியும். சென்னையிலிருந்து ரயில் -பேருந்து -கார் என எதில் பயணித்தாலும் பொழுது மறைந்து பொழுது விடிவதற்குள் மலைவாசஸ்தலங்களை அடைந்திட முடியும்.
ஒரு நாள் கேப் கிடைத்தாலும் கூட நீங்க மிஸ் பண்ணக்கூடாத 10 மலைவாசஸ்தலங்களை பற்றி பார்க்கலாம்.
ஏலகிரி மலை: சென்னையிலிருந்து 6 மணி நேர பயணத்தில் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அற்புதமான மலைவாசஸ்தலம் ஏலகிரி. இங்கு நவம்பர் முதல் பிப்ரவரி வரை சீஸன் களைகட்டும் என்பதால் வரும் நவம்பர் மாதம் ஏலகிரி டிரிப் செல்ல இப்போதே நீங்கள் திட்டமிடலாம். பட்ஜெட்டும் பெரியளவில் செலவாகாது என்பதால் ஒரு நாள் பயணமாக கூட இங்கு சென்று வரலாம்.

ஏற்காடு மலை: ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காடு மலையானது சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து 365 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த மலைவாசஸ்தலத்துக்கு ஒரு நாள் டிரிப்பாக சென்று வரலாம். செலவும் அதிகம் ஆகாது என்பது இந்த இடத்தின் கூடுதல் சிறப்பு. ஜூன் மாதம் இறுதி வரை ஏற்காட்டில் சீசன் களைக்கட்டும் என்பதால் இந்த வாரமே ஒரு டிரிப் புறப்பட்டு விடுங்க.
கொல்லிமலை: நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலையானது மூலிகைகளின் சங்கமமாக பார்க்கப்படுகிறது, அங்கு தவழும் மூலிகை காற்றை சுவாசிக்கவே பலரும் கொல்லிமலைக்கு படையெடுப்பது வழக்கம். சேலம், கரூர், திருச்சி உள்ளிட்ட ஊர்களுக்கு ரயிலில் சென்று அங்கிருந்து ஒரு மணி நேர பயணத்தில் கொல்லிமலையை அடையலாம்.
சிறுமலை: திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறுமலையானது டிரெக்கிங் செல்பவர்களுக்கு ஏற்ற மலை. சென்னையிலிருந்து ரயில், பேருந்து என எதில் பயணித்தாலும் ஓவர் நைட்டில் சிறுமலையை சென்றடைய முடியும். விவசாயம் நிறைந்த பகுதி என்பதால் பார்ப்பதற்கே ரம்மியமாகவும் மனதிற்கு இதமாகவும் இருக்கும்.

கொடைக்கானல் மலை: மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானல் மலையை பொறுத்தவரை தமிழகத்தின் முக்கிய சுற்றுலா பகுதிகளில் ஒன்றாகும். தற்போது பள்ளிவிடுமுறை முடியவுள்ளதால் கூட்டம் ஓரளவு குறையத் தொடங்கிவிட்டது. இதனால் பட்ஜெட்டை பற்றி கவலைகொள்ளாமல் ஜாலிய ஒரு டிரிப் புறப்படுங்க. கொடைக்கானல் மட்டுமின்றி அதைச்சுற்றியுள்ள மண்ணவனூர் ஏரி, பூம்பாறை கிராம, தாண்டிக்குடி கிராமம் என ஏராளமான மலை கிராமங்களும் பார்க்க வேண்டிய இடங்களாகும்.
தேக்கடி: இயற்கை எழில் கொஞ்சும் தேனி மாவட்டத்தை ஓட்டியுள்ள தேக்கடி மலைவாசஸ்தலமானது கேரளா மாநிலத்தில் அமைந்துள்ளது. இங்கு படகு சவாரி, யானை சவாரி என குழந்தைகளை குதூகலிக்க வைக்கலாம். இதனால் குழந்தைகளோடு டிரிப் செல்ல வேண்டும் என நினைத்தால் தாராளமாக தேக்கடிக்கு ஒரு விசிட் அடிக்கலாம். மதுரை அல்லது திண்டுக்கல் வரை ரயிலில் சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக இரண்டரை மணி நேரத்தில் சென்றடையலாம்.
மூணாறு: மூணாறை பற்றி அறிமுகம் கொடுக்கவே தேவையில்லை என கருதுகிறோம். அந்தளவுக்கு பிரபல சுற்றுலா தலமாக விளங்கும் மூணாறு கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது. பச்சைப் போர்வை போர்த்தியது போன்ற தேயிலை தோட்டங்களும், மாட்டுப்பட்டி அணையும் பார்ப்பதற்கு பரவசமாக இருக்கும். தேனி வழியாகவும் செல்லலாம், உடுமலைப் பேட்டை வழியாகவும் செல்லலாம்.
கூர்க்: கர்நாடக மாநிலத்தில் உள்ள கூர்க் மலைவாசஸ்தலமானது காஃபி எஸ்டேட்கள் நிறைந்த பகுதியாகும். டிரெக்கிங், ஜீப் சஃபாரி என அட்வென்சர் ரைடர்ஸ்க்கு ஏற்ற சுற்றுலாதலமாக கூர்க் விளங்குகிறது. பட்ஜெட்டை பொறுத்தவரை சற்று கையை மீறினாலும் அவசியம் பார்க்க வேண்டிய தலைக்காவிரி உட்பட இன்னும் பல இடங்கள் இருக்கின்றன.
வயநாடு: தமிழகம் கேரளா கர்நாடகா ஆகிய மூன்று மாநில எல்லைகளில் அமைந்துள்ள அற்புதமான சுற்றுலாதலம் வயநாடு. குருவா தீவு, பானசுரா சாகர் அணை, எடக்கல் குகை, லக்கிடி வியூ பாயிண்ட் என பார்க்க பார்க்க திகட்டாத பல இடங்கள் வயநாட்டில் இருக்கின்றன. எங்கு நோக்கினும் பச்சை பசேல் என காண்பதற்கே கண்கொள்ளாக் காட்சிகள் பல வயநாட்டில் உள்ளன.

மேகமலை: மேகமலையை பொறுத்தவரை தேனியிலிருந்து 54 கிமீ தொலைவில் உள்ள சுற்றுலா தலமாகும். அங்கு தங்குவதற்கு பெரியளவில் ஹோட்டல்களோ, ரிசார்ட்களோ இல்லாததால் காலை சென்றுவிட்டு மாலை தேனிக்கு திரும்பிவிடலாம். தேயிலைத் தோட்டங்களும், வளைந்து நெளிந்து காணப்படும் சாலைகளும் கண்களுக்கு விருந்தாக அமையும்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications