கோவை டூ ஊட்டி.. பர்லியாரில் நடக்க போகும் சூப்பர் விஷயம்.. வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி
ஊட்டி: தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற கோடை வாசஸ்தலமான நீலகிரி மாவட்டத்தின் ஊட்டிக்கு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்பட தென்மாநிலங்களிலும் இருந்து, வடமாநிலங்களிலும் இருந்தும் பலரும் வருகிறார்கள். ஊட்டிக்கு சுற்றுலா வரும் பெரும்பாலான வாகனங்கள் கோவை-நீலகிரி மாவட்ட எல்லையான பர்லியார் வழியாகவே வருகின்றன. அந்த இடத்தில் சாலை குறுகலாக உள்ளது. அந்த இடத்தினை ஐ.ஐ.டி. குழு மூலம் ஆய்வு செய்து சாலையை விரிவாக்கம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி என்பது சர்வதேச அளவில் புகழ் பெற்ற கோடைவாசஸ்தலமாக இருக்கிறது.இங்கு ஆண்டு முழுவதும் குளுகுளுவென கால நிலை இருக்கும். டிசம்பர் , ஜனவரி மாதங்களில் கடுமையான உறைபனி இருக்கும். அந்த இரண்டு மாதங்களை தவிர மற்ற மாதங்களில் சுற்றுலா பயணிகள் மகிழும் வண்ணம் கிளைமேட் இருக்கும்.

ஹனிமூன் ஜோடிகளுக்கு பிடிக்கும்
கிளைமேட்டை தாண்டி, பார்த்தால், பசுமையான வனப்பகுதிகள், ஏரிகள், அடர்ந்த காடுகள், வனவிலங்கள், படகு சவாரி, குடும்பத்துடன் மகிழ்ச்சியான நடைபயணம் மேற்கொள்ள பூங்காக்கள், சிறுவர்களுக்கு பிடித்த ஏராளமான விளையாட்டுக்கள், காதலர்கள், திருமணமான ஜோடிகளுக்கு பிடித்த தனிமையான இடங்கள் அதிகமாக இருக்கிறது. இதனால் எப்போதுமே சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பார்கள்..
குன்னூர் சாலை
அப்படி வரும் சுற்றுலா பயணிகள் கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்து கூடலூர் வழியாகவும், கோவை உள்பட தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து குன்னூர், கோத்தகிரி சாலை வழியாகவும் வாகனங்களில் வருகிறார்கள். இதில் பெரும்பாலான வாகனங்கள் ஊட்டி-குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை வழியாகவே வருகின்றன. இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை நல்ல அகலமான சாலை என்றாலும், மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலும், குன்னூர் முதல் ஊட்டி வரையிலும் ஒரு சில இடங்களில் சாலை அகலம் குறைவாக உள்ளது.
சாலை அகலம் இல்லை
இந்த பகுதிகளில் சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதில் சிக்கலான இடம் என்றால் கோவை-நீலகிரி மாவட்ட எல்லையான பர்லியார் சோதனைச்சாவடி அருகே உள்ள சாலை தான். இங்கு தான் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாத நிலை இருக்கிறது. இங்கு தான் விபத்து ஏற்படும் அபாயமும் அதிகம் உள்ள பகுதியாக இருக்கிறது
ஊட்டி மேட்டுப்பாளையம் சாலை
ஊட்டி-மேட்டுப்பாளையம் சாலையை பொறுத்தவரை நீலகிரி-கோவை மாவட்ட எல்லையான பர்லியார் சோதனைச்சாவடியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் 100 மீட்டர் தூரத்திற்கு சாலை மிகவும் குறுகலாக இருக்கிறது. இதனால் வாகனங்கள் ஒன்றுக்கு ஒன்று உரசி விபத்து ஏற்படும் அபாயம் அடிக்கடி ஏற்படுகிறது. சில நேரங்களில் வழிவிட முடியாமல் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்பதையும் காண முடியும்.
10 மீட்டர் அகலமான சாலை
வெளிமாநிலத்தை சேர்ந்த புதிய வாகன ஓட்டிகள், இங்கு கிராஸ் செய்துவிட முடியும் என்கிற நம்பிக்கையில் கடக்கிறார்கள்... ஆனால் கடைசியில் சிக்கி கொள்கிறார்கள். அப்போது ஏற்படும் போக்குவரத்து பாதிப்பால் எந்த வாகனமும் செல்ல முடியாத நிலை ஏற்படுவது உண்டு. இரவு நேரங்களில் இந்த பிரச்சினை அதிகமாக இருந்து வந்தது. ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை 7 மீட்டராக இருந்த சாலை 10 மீட்டர் அகல சாலையாக மாற்றப்பட்டுவிட்டது.ரூ.62 கோடியில் இந்த பணிகள் நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications