குற்றாலம் போக முடியலயா.. கோவை பக்கத்துல ஒரு குற்றால அருவி இருக்கே! குறைந்த செலவில் நிறையும் மனசு
கோவை: குற்றாலம் சீசன் தொடங்கி அருவியில் தண்ணீர் கொட்டி வரும் நிலையில் அவ்வளவு தூரம் எங்களால் செல்ல முடியாது என்று சொல்லும் மேற்கு மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்காக கோவை குற்றாலம் உள்ளது. அப்படி எங்கு என்ன இருக்கிறது? எப்படி செல்வது? விரிவாக பார்ப்போம்.
இயற்கையின் மெகா அடையாளமான மேற்கு தொடர்ச்சி மலைக்கு உட்பட்ட சிறுவானி மலைத் தொடர் கோவை மக்களுக்கு சிறுவானி ஆற்றை மட்டும் வழங்கவில்லை. அழகிய நீர் வீழ்ச்சிகளையும் சுற்றிப் பார்ப்பதற்காக இயற்கை எழில் கொஞ்சும் அசத்தலான இடங்களையும் பெற்று உள்ளது.

வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வரும் இவ்வளவு அழகான அருவிக்கு கோவை மக்கள் எளிதில் சென்றுவிடலாம். கோவைக்கு அருகில் இருக்கும் ஒரே அருவி இது என மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கிறது. அதாவது கோவையில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் கோவை குற்றாலம் இருக்கிறது.
பேருந்து நிலையத்தில் இருந்து 32 கிலோ மீட்டர் தொலைவிலும், ரயில் வழியாக 30 கிலோ மீட்டர் தொலைவிலும், கோவை விமான நிலையத்தில் இருந்து 43.8 கிலோ மீட்டர் தூரத்திலும் இந்த விமான நிலையம் உள்ளது. கோவையின் உக்கடம், காந்திபுரம் பகுதிகளில் இருந்தும் கோவை குற்றாலம் செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.

அடர்ந்த வனப்பகுதியில், திரும்பும் திசையெல்லாம் பச்சை பசேலென்று காட்சித் தரும் சூழலுக்கு மத்தியில் அழகாய் கொட்டும் இந்த கோவை குற்றாலத்தில் ஒரு முறையாவது குளித்து மகிழ வேண்டும் என்பது பலரது ஆசையாக இருக்கும். அந்த அளவிற்கு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத எழில் கொண்டது கோவை குற்றாலம்.
கோவை குற்றால அருவியில் குளிப்பது மட்டும் மகிழ்ச்சியல்ல.. அதை நோக்கி செல்லும் பாதையில் கானும் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் அனைத்துமே உங்கள் கண்களுக்கு குளிர்ச்சியூட்டும். மாதம்பட்டி செக் போஸ்ட்டை தாண்டி கோவை குற்றாலம் செல்லும் வழியில் உள்ள ஒவ்வொன்றையும் நீங்கள் ரசித்து மகிழ்லாம்.

மரங்கள், காடு, விலங்குகள் போன்றே அமைக்கப்பட்ட கட்டிடங்கள் உங்களை பிரம்மிப்பூட்டும். செக் போஸ்டில் நுழைவு கட்டணம், கேமரா எடுத்து செல்ல கட்டணம், பராமரிப்பு கட்டணம் போன்றவை வசூலிக்கப்படும். செக் போஸ்டில் இருந்து 3 கிமீ கடந்தவுடன் அப்படியே வாகனத்தை நிறுத்திவிட்டு வனத்துறை வாகனத்தில் ஏறலாம். அதில் இருந்து இறங்கி ஒன்றரை கிமீ நடக்க தொடங்கி இயற்கையோடு கலந்திடுங்கள்.
பெண்களுக்கு உடை மாற்றும் அறை, முறையான படிக்கட்டுகள், சிறுவர்கள் குளிப்பதற்கென தனி குளம் என ஏராளமான வசதிகள் இங்கு உள்ளன. ஆடைகளை மாற்றிவிட்டு சிறுவானி மலை உச்சியில் இருந்து கொட்டும் அந்த அருவியில் குளிக்கத் தொடங்கினால், உங்களை நீங்களே ஒப்படைத்துவிடுவீர்கள். அந்த அளவுக்கு மூலிகை வாசம் மணக்க மணக்க மனம் மகிழ இந்த ஒரு நாள் ட்ரிப்பை அனுபவிக்கலாம்.

சிறுவானி ஆற்று நீர் சுவையாக இருக்கும் என்று கோவை மக்கள் சொல்லி கேட்டது உண்டு. அதன் தோற்றுவாய்களில் ஒன்றான இந்த கோவை குற்றால நீரில் குடித்து பாருங்கள். பாதுகாப்பு காரணங்களால் காலை 10 மணி முதல் 3.30 மணி வரை இங்கு நுழைய அனுமதிக்கப்படுகிறது. திங்கட்கிழமைகளிலும் இங்கு செல்ல அனுமதி கிடையாது. எனவே இதை வாசித்த வேகத்தில் கோவை குற்றாலத்துக்கு புறப்பட்டு விடாதீர்கள்.
பெரியர்களுக்கு ரூ.60, சிறுவர்களுக்கு ரூ.25, நுழைவுக் கட்டணமாகவும், பைக்குகளுக்கு ரூ.20, கார்களுக்கு ரூ.50, வேன், பேருந்துகளுக்கு ரூ.100 பார்க்கிங் கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது. ஒருமுறையாவது நீங்கள் சென்று அனுபவித்து வரவேண்டிய செலவு குறைவான சுற்றுலா தலம் இந்த கோவை குற்றாலம்.
பின்குறிப்பு: இயற்கை கொடுத்த இந்த அழகிய பகுதியை எதிர்கால தலைமுறையினரும் நம்மைபோல் அனுபவிக்க அங்கு பிளாஸ்டிக் கவர்களை தூக்கிவிசிவிட்டு வருவது, சோப், ஷாம்பு போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications