"சனி பிரதமர்" என ஆசை காட்டி விட்ட அமித்ஷா.. பிரதமர் கனவில் மிதக்கும் ஸ்டாலின்- தமிழிசை விமர்சனம்
Recommended Video

கோவை: சனி பிரதமர் என அமித்ஷா கான்பூர் கூட்டத்தில் கூறியதால் அந்த கனவில் திமுக தலைவர் ஸ்டாலின் மிதக்கிறாரோ என்னவோ என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் தமிழிசை சவுந்திரராஜன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் பாஜக வலுபெற்று வருகிறது. நல்ல கூட்டணி அமைத்து போட்டி போடுவோம். பா.ஜ.க வாக்கு சாவடி முகவர்களை உற்சாகப்படுத்த 12-ஆம் தேதி யோகி ஆதித்யநாத் திருநெல்வேலிக்கும் , 14- ஆம் தேதி அமித்ஷா ஈரோடுக்கும், 15-ஆம் தேதி நிதின் கட்கரி சென்னைக்கும் வர உள்ளார்கள்.
தேசிய கட்சியான பா.ஜ.க தமிழக அரசியலில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியே ஆக வேண்டும். ஸ்டாலின் ,இந்து மதத்தை சார்ந்தவர்களையும் அவர்கள் நடைமுறை பழக்கத்தையும் மிக மோசமாக கேவலமாக விமர்சனம் செய்யும் வீடியோ வெளியாகி வருகிறது.

தொகை அதிகரிப்பு
இந்துக்கள் இதனை சிந்தித்து பார்க்க வேண்டும். இடைக்கால பட்ஜெட் மூலம்,
தமிழகத்தில் 72 லட்சம் விவசாயிகள் பயன்பெற உள்ளனர். விவசாயிகளுக்கு வழங்க உள்ள 6 ஆயிரம் ரூபாய் பின்னர் அதிகரிக்கப்படும் என அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு
சாமானிய மக்கள் வீடு வாங்கும் கனவும் இந்த பட்ஜெட் மூலம் நிறைவேற உள்ளது.மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் தங்கள் மீதுள்ள வழக்கில் இருந்து வெளியே வந்தால்தான் தன்னால் ஆட்சிக்கு வர முடியும் என நினைக்கிறார். சாரதா சிட் பண்ட்ஸ் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சி.பி.ஐ அதிகாரி விசாரிக்க சென்றால், அதை எதிர்த்து மோசமான சூழலை அங்கு மம்தா பானர்ஜி உருவாக்கி வருகிறார்.

தீர்மானம்
2019 பா.ஜ.க வெற்றி பெறும், தமிழகத்தில் பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி காட்டும் சின்ன கூட்டம் பற்றி பாஜக கவலைப்படவில்லை. யானையை பார்த்து சுண்டெலி எப்படி தடுக்க முடியும்.

தமிழிசை கடும் விமர்சனம்
பா.ஜ.கவிற்கு ஜன்னி வந்துள்ளதாக முரசொலியில் வந்துள்ளது குறித்த கேள்விக்கு ஜன்னி யாருக்கு என்பதை ஸ்டாலின், வைக்கோ மற்றும் அதன் கூட்டணிகள் உணர வேண்டும். மேலும் பா.ஜ.கவிற்கு ஜன்னி என கூறியவர்களுக்கு தான் ஜன்னி பிடித்துள்ளது. சனி பிரதமர் என்று கூறியதால், ஸ்டாலின் பிரதமர் கனவில் இருக்கிறாரோ என்று தமிழிசை விமர்சனம் செய்தார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications