Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எந்த தந்தைக்கும் இந்த நிலைமை வரக்கூடாது.. மரித்துப்போன மனித நேயம்.. தேனி சுற்றுலாவில் சோகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேனி மாவட்டம் சுருளி அருவிக்கு சுற்றுலா சென்ற இடத்தில் மகள் இறந்துபோன நிலையில் , உடலை போராடி சொந்த ஊரான சென்னைக்கு கொண்டு வந்துள்ளார் தந்தை. அதற்கு அவர் பட்ட கஷ்டத்தை கேட்டால், உண்மையில் எந்த தந்தையும் இந்த நிலைமை வரக்கூடாது என்று தோன்றும். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.

சென்னை நீலாங்கரையில் வசிக்கும் நிக்சன், கிருஷ்ணம்மாள் தம்பதியின் மகள் பெமினா, இவர் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கோடை விடுமுறை காரணமாக சுற்றுலா செல்ல திட்டமிட்டு நிக்சன் தனது குடும்பத்துடன், தேனிக்கு காரில் சென்றுள்ளார். சுருளி அருவியில் குளித்து மகிழ சென்ற நிக்சன் குடும்பத்திற்கு அங்கு பெரும் துயர் காத்திருந்தது.

Daughter dies while visiting Theni Suruli Falls: A hardship no father should have to face

கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால், ஏமாற்றத்துடன் திரும்பிய போது, வனப்பகுதியில் இருந்த மரத்தின் கிளை உடைந்து பெமினாவின் தலையில் விழுந்தது. மூக்கிலும் வாயிலும் ரத்தம் வர, சுற்றுலா சென்ற இடத்தில் யாரை உதவிக்கு அழைப்பது என்று தெரியாமல் திகைத்து போய் உள்ளார் நிக்சன்.

இதுபற்றி நிக்சன் கூறும் போது, "அப்போது 20 நிமிடமாக தனது மகளை மடியில் வைத்து அழுது கொண்டிருந்தேன், அங்கிருந்த நான்கு இளைஞர்கள் ஓடிவந்து உதவினார்கள். அரை மணி நேரமாக அங்கிருந்த வனத்துறையினர் யாருமே உதவிக்கு வரவில்லை" என்றார்.

இதனிடையே சிலஇளைஞர்களின் உதவியுடன் கம்பம் அரசு மருத்துவமனைக்கு தன் மகளை கொண்டு சென்ற நிக்சனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பெமினா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.

சுற்றுலா சென்ற இடத்தில் மகளை இழந்துவிட்டோம் என்று நிக்சனும், கிருஷ்ணமாலாவும் கதறி உள்ளனர். மருத்துவமனையில் நடந்தது குறித்து கூறிய நிக்சன், 15 வயது சிறுமியான எனது மகளின் உடலை விரைவில் தன்னிடம் ஒப்படைக்கும்படி மருத்துவமனை அதிகாரிகளிடம் கேட்டேன். ஆனால் மருத்துவமனை தரப்பில் சரியான பதில் தரப்படவில்லை.

Daughter dies while visiting Theni Suruli Falls: A hardship no father should have to face

போலீசார் எங்களை அங்கும் இங்கும் கூட்டிச்சென்று அலைகழித்தனர். என் மனைவுயும் குழந்தையும் நடுநேராட்டில் தவித்தனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் உடலை ஒப்படைக்க முடியாது என்று கூறி அழைக்கழித்துக் கொண்டே இருந்தனர். குளிர்சாதன பெட்டி வசதி கூட இன்றி, ரத்தம் வழிந்த நிலையில் என் மகள் உடல் சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது.

இறுதியான நான் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் என் மகளின் உடலை சென்னைக்கு கொண்டு செல்ல முயன்றேன். அதற்கும் அனுமதி கிடைக்கவில்லை.. இதனால் திருச்சி வரை ஒரு ஆம்புலன்ஸ், அதன்பிறகு விழுப்புரம் வரை ஒரு வாகனம் என நான்கு வாகனங்களில் மாற்றி மாற்றி மகளின் உடலைசென்னைக்கு எடுத்து வந்தேன் என்று நிக்சன் வேதனையுடன் தெரிவித்தார்.

10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றது கூட தெரியாமல் மகள் பெமினா இறந்துவிட்ட நிலையில், மகள் 11ம் வகுப்பில் சேர மூன்று பள்ளிகளில் விண்ணப்பம் வாங்கி வைத்திருந்திருந்தோம் என்று கதறி அழுதபடி கூறினார் தாய் கிருஷ்மாலா.

உடலை சிரமப்பட்டு தான் கொண்டு வந்தோம் என்றும்,குழந்தைக்கு செய்ய வேண்டிய கடைசி காரியங்களை கூட செய்ய முடியவில்லை என்றும் உடனே அடக்கம் செய்ய வேண்டிய நிலைவந்தது என்றும் வேதனை தெரிவித்தார் தாய் கிருஷ்ணமாலா. மகள் இறந்ததைவிட, மகளை சரியாக அடக்கம்கூட செய்ய முடியவில்லையே என்பது தான் நிக்சன் கிருஷ்ணமாள் தம்பதிக்கு ஆறாத வடுவாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+