ஸ்கை சைக்கிளிங், டிரெக்கிங்! குறைந்த செலவில் சொர்க்கம்! அதுவும் திருப்பூருக்கு அருகே! புக் பண்ணுங்க!
பாலக்காடு: திருப்பூர், கோவைக்கு அருகே கேரளா மாநிலம் பாலக்காடு செல்லும் வழியில் தனிமா ஃபார்ம் லைஃப் எனும் சாகசங்கள் நிறைந்த சுற்றுலா தலம் உள்ளது.
கோடைக்காலம் வந்தாச்சு! குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை விட போகிறார்கள். இப்போதிலிருந்தே "சம்மர் வெகேஷனுக்கு எங்கப்பா கூட்டிட்டு போக போறீங்க" என குழந்தைகள் கேட்கிறார்கள். அது போல் கோடையை சமாளிக்க குளு குளு என எந்த இடத்திற்கு செல்லலாம் என குடும்பஸ்தர்களும் நண்பர்களும் பிளான் செய்து வருகிறார்கள்.

அவர்களுக்கு ஏற்ற ஸ்பாட் ஒன்றை நாங்கள் சொல்கிறேன். சரியாக திருப்பூர், கோவைக்கு அருகே பாலக்காடு செல்லும் வழியில் இருக்கிறது தனிமா ஃபார்ம் லைஃப் (Thanima Farm Life). அதாவது கிராமத்து சூழலை நினைவுக்கு கொண்டு வரும் வகையில் இந்த இடம் பண்ணை போல் அமைந்திருக்கும்.
இங்கு சில சாகச விளையாட்டுகளும் இருக்கின்றன. இங்கு ஒரு நாள் வந்து செல்ல ஒருவருக்கு ரூ 1185 வசூலிக்கப்படுகிறது (உணவு + வரி உள்பட) , இங்கேயே தங்கியிருப்பதற்கு கூட அறைகள் உள்ளன. ஒரு அறையில் இருவர் தங்கிக் கொள்ளலாம், அதற்கு உணவு, வரி உள்பட ரூ 10 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இங்கு வருவதற்கு முன்கூட்டியே புக்கிங் செய்திருக்க வேண்டும். நேராக வந்தால் இங்குள்ள சூழலை அனுபவிக்க முடியாமல் ஏக்கத்துடன் திரும்பி செல்ல வேண்டும். எனவே Thanima Farm Life என்ற இணையத்தில் சென்று அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் போன் எண்ணை தொடர்பு கொண்டு முன்கூட்டியே புக்கிங் செய்து கொள்ளலாம்.
முதலில் பண்ணை வாழ்க்கை குறித்து பார்ப்போம். சுமார் 32 ஏக்கர் நிலத்தில் நிறைய வகையான பழங்களின் மரங்கள், தேங்காய், நெல் வயல்கள், நீர் நிலைகள், கால்நடைகள், கோழிப்பண்ணை உள்ளிட்டவை பார்ப்பதற்கு கண்களுக்கு விருந்தாக அமையும். இதனால் நம் மனம் புத்துணர்ச்சி பெறும். சாகசங்களை விரும்புவோருக்கு ஸ்கை சைக்கிளிங், ஜிப் லைன், களிமண் வயல், மலை ஏறுதல் உள்ளிட்டவை புதுமையான அனுபவங்களை கொடுக்கும்.

இங்கு தங்குவதற்கு ப்ரீமியம் அறைகள் உள்ளன. அவை கேரளா பாரம்பரிய முறையில் இருக்கும். ஆனால் அத்தனை நவீன வசதிகளும் உண்டு. அது போல் பண்ணை வீட்டில் தங்கும் வசதி. பண்ணைகளுக்கு நடுவே 3 அறைகளுடன் கூடிய தங்குமிடம் இருக்கும். அது போல் வில்லா டைப் தங்கும் இடங்களும் உள்ளன. இது பெரிய குடும்பத்தினருக்கும் நண்பர்கள் வட்டாரத்திற்கும் ஏற்றதாக இருக்கும்.
நீச்சல் குளம், வாலிபால் விளையாட்டு, குதிரையேற்றம் உள்ளிட்ட விளையாட்டுகள் உள்ளன. பண்ணையில் வளர்க்கப்படும் கோழி இறைச்சி, மீன் இறைச்சியை கொண்டு சமையல் செய்து கொடுப்பார்கள். இங்கு 20க்கும் அதிகமான விளையாட்டுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஸ்கை சைக்கிள் அனுபவம் அற்புதமாக இருக்கும். இங்கு நாய், வாத்து, குதிரை, முயல் உள்ளிட்டவை வளர்க்கப்படுகிறது.



படங்கள்: தனிமா ஃபார்ம் லைஃப் இன்ஸ்டா பக்கத்தில் இருந்து எடுத்தவை!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications