கோடை வந்தாச்சு! மேகமலை போற பிளானா? சென்னையிலிருந்து பஸ்ஸில் எப்படி போகலாம் தெரியுமா?
சென்னை: தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான மேகமலைக்கு சென்னையிலிருந்து பேருந்து வசதி இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்தில் அமைந்துள்ளது மேகமலை. பசுமையான இடம் என்பதால் இது ஒரு அழகிய சுற்றுலா தலமாகும். இங்கு தேயிலை தோட்டங்கள், காபி பயிர் தோட்டங்கள், ஆழமான பள்ளங்கள் உள்ளிட்டவைகள் இருக்கின்றன.

இங்கு மலைச் சிகரங்களும் ஒரு பள்ளத்தாக்கும் உள்ளது. இது மலைவாசஸ்தலங்களில் ஒன்றாகும். இங்கு தேயிலை தோட்டம் இருப்பதால் ஆங்கிலேயர்களால் தேயிலையை பறித்து பக்குவப்படுத்த தொழிற்சாலையும் உள்ளது.
நீர்மின்சக்தி: இந்த மலை பகுதியில் ஹைவேலிஸ் என்ற பகுதி உள்ளது. இந்த மலையில் வெண்ணியாறு, இரவங்கலூர், மகாராசாமெட்டு போன்ற பிற குடியிருப்பு பகுதிகளும் உள்ளன. இந்த மலை பகுதியில் உள்ள சுருளியாறு பகுதியில் அமைக்கப்பட்ட அணையிலிருந்து வெளியேறும் தண்ணீரிலிருந்து நீர் மின்சக்தி எடுக்கும் சுருளியாறு நீர்மின்சக்தி திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
மேகமலை என்ற பெயருக்கேற்ப மேகங்கள் தவழ்ந்து செல்லும் அற்புதமான இடம் இது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இது வன உயிரின சரணாலயமாக விளங்குகிறது. இங்கு அரிதான ஹார்ன்பில், சலீம் அலி வவ்வால், ஹூட்டன் பிட் வைபர் பாம்பு உள்ளிட்ட பறவைகள் இங்கு உள்ளன. மேகமலைக்கு செல்ல மோசமாக இருந்த சாலை தற்போதுதான் 4 ஆண்டுகள் கழித்து சீராகி உள்ளது. இங்கு 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.
தேயிலை தூள்: ஹைவேவிஸ் அணை, வெள்ளியாறு அணை, இரவங்கலாறு, தூவாணம் அணை, மணலாறு அணை உள்ளிட்ட அணைகள் உள்ளன. ஹைவேவிஸ் அணையில் பிடிக்கப்படும் மீன்களை அங்கேயே சூடாக சமைத்து கொடுப்பார்கள். இங்கு தேயிலை எப்படி தயாரிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். இதற்கு தனி கட்டணம் வசூலிக்கப்படும்.
ஹைவேவிஸ் அணையை தாண்டி சென்றால் இறைச்சல் பாறை இருக்கும். இங்கு தண்ணீர் வற்றாது. இது மருத்துவ குணம் கொண்டது. மேகமலையில் தேயிலை தோட்டம் இருப்பதால் யானைகள் அதிகமாக சுற்றி திரியும். யானை மட்டுமல்லாமல் காட்டு மாடுகளும் வரும். எனவே மேகங்களும் மறைத்துக் கொள்வதால் வாகனங்களை பார்த்து இயக்க வேண்டும்.
யானை கூட்டம்: வட்டப்பாறை பகுதியில் தினமும் காலை, மாலை யானைக் கூட்டத்தை பார்க்கலாம். யானைகள் மக்களோடு பழகியதால் அவை மனிதர்களை ஒன்று செய்யாது. ஆனால் மேகக் கூட்டங்களால் நாம் அவற்றின் மீது மோதிவிட்டால் விபரீதம் ஆகிவிடும். மேகமலையில் சுற்றுலா பயணிகள் தங்க தனியாக காட்டேஜ்கள் உள்ளன. பேரூராட்சியின் தங்கும் விடுதிகளும் உள்ளன.
மேகமலைக்கு எப்படி வர வேண்டும் தெரியுமா. சென்னையிலிருந்து தேனிக்கு பேருந்து மூலம் வர வேண்டும். தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமன்னூரில் இருந்து காலை , மாலை இரு வேளையும் பேருந்து வசதிகள் உள்ளன. அங்கிருந்து 34 கி.மீ. தூரம் உள்ள மேகமலைக்கு செல்லலாம். மகாராசாமெட்டு என்ற பெயர் போடப்பட்டிருக்கும்.
பேருந்தில் எப்படி செல்லலாம்: பேருந்து மட்டுமல்லாமல் சொந்த வாகனங்களில் கூட மேகமலைக்கு நிறைய பேர் வருகிறார்கள். இங்கு வர காலை 6 மணிக்கு மேலும் மாலை 6 மணிக்குள்ளும் மட்டும்தான் அனுமதி வழங்கப்படும். அதன் பிறகு இருட்டிவிடும் என்பதால் இந்த வனத்துறைக்கு சொந்தமான சாலையில் செல்ல முடியாது. சென்னையிலிருந்து தேனி செல்ல 505 கி.மீ தூரம் உள்ளது. செல்லும் காலம்- 9 மணி நேரமாகும். கோடை விடுமுறை தொடங்கவுள்ள நிலையில் சீக்கிரமே மேகமலை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல தயாராகுங்கள்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications