Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொடைக்கானல் to கும்பக்கரை.. யாரும் அறியாத ரூட்.. இப்படி டிரக்கிங் போயிருக்கீங்களா?

Subscribe to Oneindia Tamil

கொடைக்கானல்: சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை வருகிறது. இந்த இரண்டு நாட்கள் ட்ரெக்கிங் போக உங்களுக்கு ஆசையாக உள்ளதா? அதுவும் யாருமே அதிகம் போகாத இடமாக இருக்க வேண்டும், செலவும் ஆகக்கூடாது என்று நினைக்கிறீர்களா, அப்படி என்றால் கொடைக்கானல் வெள்ளகவி கிராமத்திற்கு செல்லுங்கள்.

சென்னை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் ஐடி வேலையில் இருக்கும் பலருக்கும் மிகவும் மனஅழுத்தம் இருக்கும். அவர்கள் வார இறுதியில் கணிணியை அடியோடு வெறுத்து இயற்கையோடு வாழ விரும்புகிறார்கள்.

Do you know vellagavi the heart of Kodaikanal? Life time settlement if you show better trucking than this

அதற்காக என்ன விலை என்றாலும் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். வார இறுதியை கொண்டாடுகிறார்கள். அப்படி கொண்டாடுபவர்கள் மலைவாசல் தளங்களை நோக்கி பயணிக்கிறார்கள். அவர்கள் போகாத இடங்கள் கொஞ்சமாகத்தான் இருக்கும்.

பலருக்கும் மலைகளில் டிரெக்கிங் போக மிகவும் பிடிக்கும். அப்படி போகும் இடம் யாரும் அதிகம் போகாத இடமாக இருக்க வேண்டும். அந்த இடம் பூலோகத்தின் சொர்க்கமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். இதேபோல் பணமும் குறைவாக செலவாக வேண்டும் என்று நினைப்பார்கள்.அப்படிப்பட்டவர்கள் தாராளமாக கொடைக்கானல் அருகே உள்ள வெள்ளகவி கிராமத்திற்கு போகலாம்.

Do you know vellagavi the heart of Kodaikanal? Life time settlement if you show better trucking than this

அங்கு எப்படி செல்லலாம்: கொடைக்கானல் சென்று அங்கிருந்த வட்டக்கானலுக்கு ஜீப்பில் அல்லது காரில் போக வேண்டும். அங்கிருந்து மலையில் இறங்கும் பாதையில் நடக்க வேண்டும். வானத்தில் மிதக்கும் மேகம் பூமியை மறைத்து இருப்பதை உங்களால் அங்கு பார்க்க முடியும்.

Do you know vellagavi the heart of Kodaikanal? Life time settlement if you show better trucking than this

கொடைக்கானல் எப்படி இருக்கும் என்று யாருக்கும் சொல்லத்தேவையில்லை. ஆனால் வட்டக்கானலை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அங்கு பெரிய அளவில் உணவகங்கள் இருக்காது. எனவே கொடைக்கானலிலேயே வேண்டும் அளவிற்கு சாப்பிட்டு விடுங்கள். உங்களுக்கு தேவையான உணவினையும் வாங்கி கொள்ளுங்கள். கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 6 கிலோமீட்டர் பயணித்தால் தான் வட்டக்கானல் வரும். அங்கிருந்து இன்னொரு 6 கிலோ மீட்டர் நடந்து சென்றால் தான் வெள்ளகவி வரும்.

Do you know vellagavi the heart of Kodaikanal? Life time settlement if you show better trucking than this

முன்னதாக வட்டக்கானல் போகும் போது சனி ஞாயிறுகளில் போக்குவரத்து நெரிசல் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். எனவே அதற்கும் தயராகவே காலை நேரத்திலேயே செல்லுங்கள். டால்பின்னோஸை தாண்டும் போதே நீங்கள் வெள்ளகவி ஊராட்சி என்ற போர்டை பார்க்க முடியும். உங்களுக்கு தேவையான பொருட்களை (வாட்டர் பாட்டில் சினாக்ஸ்) போன்றவற்றை வாங்கி கொள்ளுங்கள். அதற்கு பிறகு எங்குமே கிடைக்காது.

டால்பின் நோஸ் இல் இருந்த ஐந்து நிமிடம் நடந்தால் மிகச்சிறந்த வியூ பாய்ண்ட் காத்துக்கொண்டிருக்கும். அதை பார்த்துவிட்டு நடந்து சென்றால் அங்கு ஒரு பைப் வெள்ளகவி நோக்கி செல்லும். அந்த பைப் வழியாக நடந்து சென்றால் நேராக வெள்ளகவி கிராமத்தை அடைந்துவிடலாம். அங்கு ஓல்ட் கோடை (Old kodai cafe) டென்ட்டில் தங்க ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளுங்கள். அங்கு சென்று இரவு முழுவதும் தங்க முடியும்.சாப்பாடு மற்றும் தங்கும் வசதிகள் சிறப்பாக இருக்கும்.

இந்த வெள்ளகவி கிராமம் கொடைக்கானல் உருவாவதற்கு 400 வருடம் முன்பே உருவான கிராமம் ஆகும். இந்த கிராம மக்கள் பயணத்திற்கு குதிரை தான் ஒரே போக்குவரத்தாக உள்ளது . அதில் தான் வேண்டிய பொருட்களை கொடைக்கானல் கொண்டு வந்து அங்கிருந்து வெளியில் கொண்டு செல்வார்கள்.

Do you know vellagavi the heart of Kodaikanal? Life time settlement if you show better trucking than this

வெள்ளகவியில் இருந்து பெரியகுளத்திற்கும் போக முடியும். ஆனால் 8 கிலோமீட்டர் தூரம் நடந்து கும்பக்கரை அருவிக்கு வர வேண்டும். அங்கிருந்து நீங்கள் 7 கிலோ மீட்டர் தூரம் வாகனங்களில் பயணித்தால் தேனி மாவட்டம் பெரிய குளத்தை அடைய முடியும். வெள்ளக்கவி எப்படி இருக்கிறது என்று வார்த்தைகளில் சொன்னால் புரியது. போய் பாருங்கள். பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

Do you know vellagavi the heart of Kodaikanal? Life time settlement if you show better trucking than this

கொடைக்கானலில் இருந்து வெள்ளகவி டிரெக்கிங் பிரச்சனை இருக்காது. ஆனால் வெள்ளகவியில் இருந்து பெரியகுளம் வருவது எளிதாக இருக்காது. ஏனெனில் வனவிலங்குகள் உள்ள பகுதியாகும்.வனத்துறை அனுமதியும் தேவைப்படலாம். எனவே விசாரித்து அதற்கு தகுந்தாற் போல் முடிவு செய்து கொள்ளுங்கள்.

Do you know vellagavi the heart of Kodaikanal? Life time settlement if you show better trucking than this

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்தோ அல்லது கும்பக்கரை அருவியில் இருந்தோ வெள்ளகவிக்கு பயணிப்பது மிகவும் கடினமாக இருக்கும். ஏனெனில் மலையில் மேல்நோக்கி 8 கிலோமீட்டர் ஏற வேண்டும். ஆனால் கொடைக்கானலில் இருந்து வந்தால் 6 கிமீ தூரம் கீழே இறங்கி வரும் வகையில் இருக்கும். நடக்கவும் எளிதாக இருக்கும். எனவே இதையும் பார்த்து முடிவெடுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+