அயோத்தி பால ராமர் முதல் புனித இடமான கயா வரை ஆன்மீக சுற்றுலாவுக்கு ரெடியா! குறைந்த விலைதான்!
சென்னை: குடும்பத்துடன் காசி- அயோத்தி போன்ற இடங்களுக்குச் செல்ல விரும்புகிறீர்களா, அப்படியென்றால் உங்களுக்கு ஐஆர்சிடிசி ஒரு சிறப்பு பேக்கேஜை அறிமுகம் செய்கிறது.
கோடை விடுமுறை விட்டாச்சு! இதனால் குழந்தைகள் எங்கு செல்லலாம் என பெற்றோரை நச்சரித்து வருகிறார்கள். பெரியவர்களுக்கும் எப்போதும் வேலை வேலை என்று இருக்கிறார்கள், அவர்களுக்கும் மைன்ட் ரிலாக்சேஷன் வேண்டும்.

சிலருக்கு தமிழகத்தில் உள்ள பெரும்பாலான இடங்களை பார்த்திருப்பார்கள். அதனால் மீண்டும் மீண்டும் அங்கேயே செல்வது என்றால் போர் அடித்துவிடும். அதனால் அவர்கள் புதிது புதிதான இடங்களை விரும்புவார்கள். ஆனால் அவை பட்ஜெட்டிற்குள் இருக்க வேண்டும்.
இதற்காக ஐஆர்சிடிசி ஒரு டூர் பேக்கேஜை அறிமுகம் செய்கிறது. தமிழகத்தில் இருந்து அல்லது தென் தமிழகத்தில் இருந்து வடமாநிலங்கள் செல்ல அதிக செலவாகும். இதனால் மக்கள் காசி, அயோத்தி செல்ல தயங்குகிறார்கள். அவர்களுக்காகவே புண்ய ஷேத்ரா எனும் பேக்கேஜை கொண்டு வந்துள்ளது.
இந்த பேக்கேஜ் மூலம் காசி விஸ்வநாதரையும் அயோத்தி பால ராமரையும் தரிசிக்கலாம். இதற்காக புண்ய ஷேத்ரா என்ற டூர் பேக்கேஜில் முன்பதிவு செய்ய வேண்டும். இந்த பேக்கேஜ் 10 பகல், 9 இரவுகளாக உள்ளது. இந்த பேக்கேஜில் காசி, பிரயாக்ராஜ், அயோத்தி, பூரி ஜெகன்னாதர் ஆலயம் என புகழ்பெற்ற தலங்களுக்கு செல்லலாம்.

பாரத் கவுரவ் டூரிஸ்ட் ரயில் மூலம் செகந்திராபாத்- பூரி- கோனார்க்- கயா- வாரணாசி- அயோத்தி- பிரயாக்ராஜ் ஆகிய இடங்களில் நீங்கள் ஏறிக் கொள்ளலாம், இறங்கலாம். இந்த பேக்கேஜில் 2 ஏசி, 3 ஏசி மற்றும் ஸ்லீப்பரில் பயணிக்கலாம். இந்த ஒரே பேக்கேஜில் நீங்கள் பல்வேறு இடங்களில் தங்குவதற்கான செலவும் உள்ளடங்கும். நீங்கள் காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவுக்கான வசதியை பெறுகிறீர்கள்.
இந்த பேக்கேஜில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக பயண காப்பீடு கிடைக்கும். அது போல் இந்த பேக்கேஜில் சுற்றுலா பயணி தேர்வு செய்யும் வகுப்புகளுக்கு ஏற்ப ஒரு நபருக்கு ரூ 16,525 முதல் ரூ 33,995 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
காசியில் காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது. இங்குள்ள கங்கை ஆற்றில் குளித்தால் பாவங்கள் போகும் என்பது ஐதீகம். அது போல் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். காசி விஸ்வநாதரை தரிசிக்கலாம். காசி சென்றாலே புண்ணியம் கிடைக்கும்.
அது போல் கயா பீகார் மாவட்டத்தில் உள்ளது. இங்குதான் ராமர், லட்சுமணர் ஆகியோர் தங்களது தந்தை தசரதருக்கு பிண்டத்தை வைத்து திதி கொடுத்ததாக ராமாயணத்தில் குறிப்பிடப்படுகிறது. இதனால் இந்த இடம் புனிதமான இடம். இங்கு புத கோயிலும் இருக்கிறது. பிரயக்ராஜ், உத்தரப்பிரதேசத்தில் உள்ளது. இங்கு யமுனை, கங்கை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகள் திரிவேணி சங்கமம் என்ற இடத்தில் கலக்கின்றன. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் கும்பமேளா இந்த திரிவேணி சங்கமத்தில் நடத்தப்படுகிறது.
அயோத்தி , உத்தரப்பிரதேசத்தில் உள்ளது. இங்குதான் ராமர் பிறந்ததாக சொல்லப்படுகிறது. தற்போது கடுமையான போராட்டத்திற்கு பிறகு ராமர் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இங்கு குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications