லட்சத்தீவால் மாலத்தீவுடன் போட்டி போட முடியுமா.. அங்கே கொட்டி கிடக்கும் சொகுசு விடுதிகள்! அப்போ இங்கே
டெல்லி: மாலத்தீவு உடனான பிரச்சினைக்குப் பிறகு இப்போது பலரும் லட்சத்தீவுக்கு செல்ல விரும்புகிறார்கள். ஆனால், உண்மையில் மாலத்தீவுடன் போட்டிப் போடும் அளவுக்கு லட்சத்தீவில் உட்கட்டமைப்பு இருக்கிறதா என்பதே பலரது கேள்வி.. அதற்கான விடையைப் பார்க்கலாம்.
மாலத்தீவு அமைச்சர்கள் பிரதமர் மோடி குறித்து சர்ச்சை கருத்துகளைக் கூறிய நிலையில், பலரும் மாலத்தீவை புறக்கணித்துவிட்டு லட்சத்தீவுக்கு சுற்றுலா செல்ல ஆர்வம் காட்டுகிறார்கள்.
கூகுள் டிரெண்டிங் தொடங்கி ஹோட்டல் புக்கிங் தேடல் வரை இப்போது லட்சத்தீவு டிரெண்டாகி வருகிறது. ஆனால், இப்போது நம்மிடம் இருக்கும் மிகப் பெரிய கேள்வி ஒன்று தான்.. மாலத்தீவுக்கு மாற்றாக இப்போது லட்சத்தீவு இருக்கிறதா? இந்த கேள்விக்கு இல்லை என்பதே பதில்.

லட்சத்தீவு: லட்சத்தீவுகளை பொறுத்தவரை அது ஒரு தீவுக்கூட்டம்.. ஒரு தீவைக் கடல் விழுங்கிய நிலையில், அங்கே இப்போது மொத்தம் 35 தீவுகள் உள்ளன. இந்த 35 தீவுகளில் 10இல் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். அங்கே மொத்த மக்கள்தொகை 65,000 ஆகும். திப்பு சுல்தான் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த இந்த தீவுகள் பிரிட்டிஷ் ஆட்சியின் போது மெட்ராஸ் பிரசிடென்சியுடன் இணைக்கப்பட்டது., பின்னர் 1956இல் யூனியன் பிரதேசமாக மாறியது.
மாலத்தீவை நேரடியாகச் சுற்றுலாத் துறையில் லட்சத்தீவுகளால் இப்போது எதிர்கொள்ள முடியாது. இதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம். மாலத்தீவுக்கு இருக்கும் மிகப் பெரிய பிளஸ் என்றால் அங்கே ஈஸியாக இந்தியர்கள் சொல்லலாம். இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து மாலத்தீவுக்கு விமானம் இருக்கிறது. அவ்வளவு ஏன் அங்கே செல்லும் போது இந்தியர்களுக்கு விசா கூட தேவையில்லை.
மாலத்தீவு: அந்தளவுக்கு மாலத்தீவு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் தங்கள் கொள்கைகளை மாற்றியுள்ளது. மேலும், மாலத்தீவில் இப்போது 172 ரிசார்ட்டுகள் உள்ளன, உலகின் மிகப்பெரிய சொகுசு விடுதிகள் எல்லாம் மாலத்தீவில் இருக்கிறது. மாலத்தீவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் 1,200க்கு மேற்பட்ட அம்சங்கள் உள்ளன. அங்கே 152 சஃபாரி கப்பல்கள், 883 கேஸ்ட் ஹவுஸ்கள், 13 ஹோட்டல்கள் மற்றும் 172 ரிசார்ட்கள் உள்ளன.
இந்தப் பக்கம் நாம் லட்சத்தீவை பார்த்தால் அங்கே ஐந்து நட்சத்திர ரிசார்ட் ஒன்று கூட இல்லை. இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவனம் அங்குள்ள சுஹேலி மற்றும் கத்மத் தீவுகளில் இரண்டு தாஜ் ரிசார்ட்டுகளை கொண்ட வரத் திட்டமிட்டுள்ளது. ஆனால் அதற்குக் குறைந்தது ஐந்து வருடங்கள் ஆகும்.
சாத்தியமே இல்லை: மாலதீவுகள் பல ஆண்டுகளாகவே சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் தனது பாலிசிக்கலை மாற்றியுள்ளது. அங்குள்ள 172 ரிசார்ட்டுகளுக்கும் மாலே ஏர்போர்ட்டில் இருந்து ஸ்பீட் போட் அல்லது சிறு கடல் விமானங்கள் மூலம் செல்லலாம். அதாவது மாலத்தீவில் நாம் எங்கு வேண்டுமானாலும் எளிதாகச் செல்ல முடியும். விரும்பும் ரிசார்ட்டுகளுக்குச் செல்லலாம். ஆனால் லட்சத்தீவில் அது சாத்தியமில்லை. ஏனென்றால் அங்கு ரிசார்களே பெரிதாக எதுவும் இல்லை.
மேலும், சுற்றுச்சூழல் காரணங்களால் லட்சத்தீவில் மது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் லட்சத்தீவுக்கு சென்றாலும் மது குடித்து சில் செய்ய எல்லாம் முடியாது. அதேநேரம் மாலத்தீவு இஸ்ஸ்லாமிய நாடாக இருந்தாலும் அங்கே சொகுசு விடுதிகள், ரிசார்ட்களில் மது அருந்துவதற்கு எந்தத் தடையும் இல்லை. மேலும், நீங்கள் மாலத்தீவில் இன்று விமான டிக்கெட் புக் செய்து நாளை அங்கே தரையிறங்கலாம்.
கட்டுப்பாடுகள்: ஆனால், லட்சத்தீவுக்கு அப்படி இல்லை. இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினர் என அனைவருக்கும் போலீஸ் க்ளியரன்ஸ் முதல் ஸ்பெஷல் பெர்மிட் வரை அனைத்தையும் பெற வேண்டும், அப்படி ஸ்பெஷல் பெர்மிட் பெற்றாலும் வெளிநாட்டினரால் அகட்டி, பங்காரம் மற்றும் காத்மத் தீவுகளுக்கு மட்டுமே செல்ல முடியும். இந்தியர்களால் மட்டுமே அனைத்து தீவுகளுக்கும் செல்ல முடியும்.
தனிமை தான் சிறப்பு: மாலத்தீவு முழுக்க முழுக்கா சுற்றுலாவை நம்பி இருக்கும் நாடாகும்.. ஆனால், லட்சத்தீவு அப்படி அல்லது. அதன் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் பழங்குடி வாழ்க்கை முறையைப் பாதுகாப்பதில் இந்திய அரசு சிறப்புக் கவனம் செலுத்துகிறது. அதுவே லட்சத்தீவின் சிறப்பாகவும் இருக்கிறது.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications