சென்னையில் இருந்து மலேசியாவுக்கு சென்று வர விமான டிக்கெட் 7000 ரூபாய் + ரயில் கட்டணம் 1000 ரூபாய்
சென்னை: சென்னையில் இருந்து மலேசியாவுக்கு சென்று வர விமான டிக்கெட் 7000 ரூபாய் + ரயில் கட்டணம் 1000 ரூபாய். ஆக, 8000 இருந்தால் மலேசியாவுக்கு சென்று வரலாம்.. எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல பலரும் ஆர்வம் காட்டுவார்கள் .. குறிப்பாக மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு சுற்றுலா செல்ல விரும்புவார்கள். வரும் ஜூன் தொடக்கத்தில் மாதத்தில் மலேசியா செல்ல விரும்புவோர் வெறும் 7000 ரூபாய் கட்டணத்தில் சென்றுதிரும்ப முடியும்.. இது எப்படி என்கிறீர்களா? அதை இப்போது பார்ப்போம்.

ஸ்கை ஸ்கேனர் ஆப் என்ற ஒரு ஆப் இருக்கிறது. இதற்கு இணையதளமும் இருக்கிறது. இந்த இணையதளத்தில் என்ன விஷேசம் என்றால், இந்தியாவில் எந்த இரு நகரங்களுக்கு இடையே மிக குறைவான கட்டணத்தில் விமானத்தில் பயணிக்க முடியும் என்பதை அறிய முடியும். வெறும் 500 ரூபாயில் இந்தியாவின் இரண்டு பெரிய நகரங்களுக்கு விமானத்தில் பயணிக்க முடியும். அதேபோல் சில ஆயிரங்களிலேயே நீங்கள் விரும்பும் வெளிநாடுகளுக்கு போய் திரும்பி வர முடியும். அதை பற்றியும் ஸ்கை ஸ்கேனர் இணையதளத்தில் அறிய முடியும்.
இந்தியாவில் இருந்து மலேசியாவின் கோலாலம்பூர் சென்று திரும்ப வெறும் 7000 ரூபாய் போதும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? உண்மை தான்... அது எப்படி என்பதை பார்ப்போம். முதலில் https://www.skyscanner.co.in/ என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். அதில் from என்ற ஆப்சனில் இந்தியா என்ற செலெக்ட் செய்யுங்கள்.. அதன்பிறகு போகும் இடத்திற்கு மலேசியாவின் கோலாலம்பூர் நகரை செலக்ட் செய்யுங்கள். போகும் மாதம் மற்றும் வரும் மாதம் என இரண்டையும் ஜூன் மாதத்தில் செலக்ட் செய்யுங்கள்.. அப்படி செலக்ட் செய்தால் ஜூன் மாத தொடக்கத்தில் மிக குறைவான கட்டணமே காட்டும். விசாகப்பட்டினம், புவனேஸ்வர் நகரில் இருந்து வெறும் 3500 ரூபாயில் கோலாலம்பூர் சென்றுவிடலாம். உதாரணமாக நீங்கள் ஜூன் 2ம் தேதி விசாகப்பட்டினத்தில் இருந்து மலேசியாவின் கோலாலம்பூர் புறப்பட்டு சென்று , ஜூன் 7ம் தேதி திரும்பி வரலாம். இதுபோல் உங்களுக்கு கட்டணம் குறைவான நாட்களை செலக்ட் செய்யலாம்..
அப்படி செய்த பின்னர் எந்த இணையதளம் குறைவான கட்டணத்தில் டிக்கெட் புக்கிங் குறைவாக செய்ய முடியும் என்பதை ஸ்கை ஸ்கேனர் இணையதளம் காட்டும். அதன் பின்னர் குறிப்பிட்ட இணையதளம் சென்று புக்கிங் செய்யலாம். அதேநேரம் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் டிக்கெட்டை செக் செய்யுங்கள். மிக பிரபலமான இணையதளங்களில் டிக்கெட் முன்பதிவு செய்வது நல்லது.. பெயர் தெரியாத டிராவில் நிறுவனங்களில் புக்கிங் செய்ய வேண்டாம். பிரபலமான டிராவல் நிறுவனங்கள் நீங்கள் வைத்துள்ள கிரிடிட் கார்டுக்கு கூடுதல் ஆஃபர் தருவார்கள்..

அதை பயன்படுத்தி உங்கள் கட்டணத்தை குறைக்கலாம். இதன் மூலம் வெறும் 7000க்கும் குறைவாகவே விசாகப்பட்டினம் டூ மலேசியா சென்று திரும்ப முடியும். சரி சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் எப்படி போக முடியும் என்கிறீர்களா.. விசாகப்பட்டினம் செல்ல, சென்னையில் இருந்து நிறைய ரயில்கள் உள்ள, வெறும் 500க்குள் தான் டிக்கெட் கட்டணம் எளிதாக டிக்கெட் எடுத்து விசாகப்பட்டினம் செல்லுங்கள். அங்கிருந்து திரும்ப வரும் போதும் 500 தான் கட்டணம் வரும்.. இந்த தகவலை நெட்டிசன் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஒருவேளை உங்களுக்கு சென்னையில் இருந்து கோவை மதுரை போன்ற நகரங்களுக்கு குறைவான டிக்கெட்டில் பயணிக்க வேண்டும் என்றாலும் முடியும். ஆனால் குறைந்தது 6000 ரூபாய்க்கு குறைவாக டிக்கெட்டுகள் தற்போது இல்லை..
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications