கொடைக்கானலில் பற்றி எரியும் மலைகள்.. சுற்றுலா பயணிகள் செல்ல அதிரடி தடை.. எங்கெல்லாம் தெரியுமா?
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலின் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூம்பாறை, கூக்கால், பாரிகோம்பை, வெம்படி, சந்தனப்பாறை உள்ளிட்ட வனப்பகுதிகளில் காட்டுத்தீ பற்றி எரிகிறது. இதன் காரணமாக பூம்பாறை, மன்னவனூர் உள்ளிட்ட மேல்மலை கிராமங்களுக்கு சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு வழக்கத்தைவிட கோடைவெயில் மிக கடுமையாக இருக்கிறது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசுகிறது. 100 முதல் 110 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பல இடங்களில் பதிவாகி வருகிறது. இதனால் வெயிலை தாக்குபிடிக்க முடியாமல் மக்கள் பலர் கோடைவாசல் தலங்களை நோக்கி படை எடுக்கிறார்கள். ஊட்டி, கொடைக்கானலுக்கு தமிழ்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளனர். தமிழக முதல்வர் ஸ்டாலினே தற்போது கொடைக்கானலில் தான் ஓய்வுக்காக தங்கி உள்ளார்.

கொடைக்கானலை பொறுத்தவரை பெரிய அளவில் கோடை மழை இன்னமும் ஆரம்பிக்கவில்லை.. வழக்கமாக கோடைமழை சித்திரை பிறந்தது முதலே பெய்யும். வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்வது இயல்பு.. ஆனால் கொடைக்கானலில் இன்னமும் பெரிய அளவில் மழை இல்லை.. இதனால் கொடைக்கானலை ஒட்டிய பகுதியில் உள்ள மக்கள் அங்கு அவதிப்பட்டு வருகிறார்கள்... வெயிலும் கடுமையாக உள்ளதால் வனப்பகுதிகளில் அடிக்கடி காட்டுத்தீ ஏற்படுகிறது.
கொடைக்கானலின் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூம்பாறை, கூக்கால், பாரிகோம்பை, வெம்படி, சந்தனப்பாறை உள்ளிட்ட வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பரவி வருகிறது, வனத்துறையினர் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக வனத்துறை, தீயணைப்புத்துறையினரின் வாகனங்கள், தண்ணீர் டேங்கர் லாரிகள், தீயணைப்பு வாகனங்கள் அந்த பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. ஆனால் ஆள் பற்றாக்குறை மற்றும் கடுமையான வறட்சி காரணமாக பணிகள் அங்கு பெரும் சவாலாக உள்ளது, ஹெலிகாப்டர்களில் சென்று காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்றால் ஓரளவு பயனுள்ளதாக இருக்கும் என்று உள்ளூர் மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
இதையொட்டி பூம்பாறை சந்திப்பு முதல் மன்னவனூர் மற்றும் கூக்கால் சாலைகளில் சுற்றுலா வாகனங்கள், கனரக வாகனங்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே காட்டுத்தீயை அணைக்கும் பணி அந்த பகுதிகளில் இன்றும் தொடர்ந்து நடக்கிறது. எனவே இன்றும் மேற்கண்ட பகுதியில் சுற்றுலா வாகனங்கள், கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் உள்ளூர் மக்களின் வாகனங்களுக்கு தடையில்லை என்று திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
இது ஒருபுறம் எனில் காட்டுத்தீ பரவலால் உயர்மின்பாதை தடைபட்டு கொடைக்கானலின் மேல்மலையில் உள்ள 20 கிராமங்களுக்கு மின்தடை ஏற்பட்டு இருந்தது. கடந்த இரண்டு நாள்களாக மின்பாதை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. தற்போது சில கிராமங்களுக்கு மட்டும் மின்விநியோகம் சீராகி உள்ளது. இன்னும் ஒரு சில கிராமங்களுக்கு மின் விநியோகம் சீராகவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனிடையே கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகையை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இ-பாஸ் முறை வரும் மே 7 முதல் ஜூன் 30-ம் தேதி வரை அமல்படுத்தப்பட உள்ளது. சொந்த வாகனங்களில் அல்லது வாடகை வாகனங்களில் கொடைக்கானல் செல்ல வேண்டும் என்றால் அனைவரும் இ-பாஸ் பெற்றே வர முடியும். அதேநேரம் பேருந்துகள் மூலம் வருவதற்கு எந்த தடையும் இல்லை என்றே சொல்கிறார்கள்.இதுபற்றி முழு அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications