தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா செல்வோருக்கு.. இலவச விமான டிக்கெட்.. அரசே அறிவித்த சூப்பர் திட்டம்
பாங்காங்: தாய்லாந்து நாட்டிக்கு சுற்றுலா செல்ல இந்தியர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். தாய்லாந்தை பொறுத்தவரை சுற்றுலாவை முக்கிய வருவாய் ஆதாரமாக கொண்ட நாடாக இருக்கிறது. இந்நிலையில் சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்ப்பதற்காக தாய்லாந்து அரசு 2025-ஆம் ஆண்டில் "Buy International, Free Thailand Domestic Flights" என்ற புதிய சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி சர்வதேச விமான டிக்கெட் வாங்கி தாய்லாந்து வந்தால், இலவசமாக உள்நாட்டு விமான டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது.
தாய்லாந்து அரசு "Buy International, Free Thailand Domestic Flights" என்னும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின்படி தாய்லாந்துக்கு சுற்றுலா வருபவர்கள், சர்வதேச விமான டிக்கெட் வாங்கி தாய்லாந்து நாட்டிற்குள் வந்தால், அந்த நாட்டுக்குள் இலவசமாக உள்நாட்டு விமான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் இந்த மாதம் (செப்டம்பர்) முதல் நவம்பர் மாதம் வரை நடைமுறையில் இருக்கிறது.

தாய்லாந்து திட்டம்
தாய்லாந்து அரசு இப்படி ஒரு இலவச விமான டிக்கெட் திட்டத்தை அறிவித்தன் பின்னணியில் சில காரணங்கள் உள்ளன. சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க வேண்டும் என்பது தான் தாய்லாந்து அரசின் திட்டமாக உள்ளது. மேலும் தாய்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலா இடங்களான பாங்காக், ஃபூக்கெட் ஆகியவற்றைத் தாண்டி, பிற முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் குறைந்த அளவு அறியப்பட்ட இடங்களுக்கு சுற்றுலா பயணிகளை பயணிக்க வைக்கவும், அதனை ஊக்கப்படுத்தவே இந்த உள்நாட்டு விமான டிக்கெட் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
நிபந்தனை என்ன
இந்ததிட்டத்தின் படி, தாய்லாந்துக்கு விமானம் மூலம் வரும் சர்வதேச சுற்றுலாப்பயணிகள் மட்டும் இலவசமாக உள்நாட்டு விமான டிக்கெட் பெற முடியும். சாலை மற்றும் கடல் வழியாக வருபவர்கள் இந்ததிட்டத்தில் பயன்பெற முடியாது.அதேபோல் ஒரு பயணிக்கு இரண்டு இலவச உள்நாட்டு விமான டிக்கெட் ( 2 trip or 1 Round Trip ) வழங்கப்படும் என்று நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஃப்ரிடி டிக்கெட் சலுகையுடன் 20 KG பாகேஜ் அனுமதியும் சேர்க்கப்பட்டிருக்கிறது.
எவ்வளவு மானியம்
பயணிகள் தங்களது சர்வதேச விமான டிக்கெட்டை ஏர்லைன் அதிகாரப்பூர்வ இணையதளங்கள், ஆன்லைன் டிராவல் ஏஜென்டுகள் அல்லது மல்டி-சிட்டி ஆப்ஷன்களை வைத்துப் பதிவு செய்தால் இந்த சலுகையை பெற முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலவச டிக்கெட்டுகளுக்கு அதிகபட்சமாக ஒரு வழிக்கான விலை 1,750 பாஹ்த் (சுமார் ₹4,800)-க்கு தாய்லாந்து அரசு மானியம் வழங்குகிறது; ரவுண்ட் ட்ரிப்புக்கு 3,500 பாஹ்த் (9,723 ரூபாய்) மானியம் வழங்குகிறது.
எங்கே செல்ல முடியும்
இந்த திட்டம் எப்படி என்றால், வழக்கமாக சுற்றுலா பயணிகள் அதிகம் பயணிக்கும பாங்காக், புகேட் போன்ற முக்கிய இடங்களைத் தவிர, இஸான், சுகோதை, ஆயுத்தயா போன்ற இடங்களுக்கு செல்லவே இலவச விமான டிக்கெட் திட்டத்தை அறிமுகம் செய்து தாய்லாந்து ஊக்குவித்துள்ளது. இந்த சலுகையை இந்தியா உள்ளிட்ட அனைத்துத் தேசங்களைச் சேர்ந்த பயணிகள் தகுதியுடன் இந்த சலுகையை பெற முடியும். சுமார் 2 லட்சம் வெளிநாட்டு பயணிகளுக்கு இந்த இலவச உள்நாட்டு விமான டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளன
எப்படி விண்ணப்பிப்பது?
உங்களது சர்வதேச விமான டிக்கெட் பதிவு செய்த பின், அங்குள்ள விமானங்களின் (Thai Airways, Thai AirAsia, Bangkok Airways, Nok Air, Thai Lion Air, Thai Vietjet) மூலம் இலவச பயண சலுகை வசதியை பெற முடியும். தாய்லாந்தின் சுற்றுலாத் துறைக்கு புத்துணர்ச்சி அளிக்கவும், அங்குள்ள உள்ளூர் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் இந்த திட்டம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதற்கு வரவேற்பும் அதிகமாக உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications