தீபாவளியை முன்னிட்டு நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் டூர் போறீங்களா? இந்த வீடியோ பாருங்க
சென்னை: தீபாவளியை முன்னிட்டு நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் சுற்றுலா செல்லும் நண்பர்கள் மிக கவனமாக செல்ல வேண்டும். சாலைகளில் நீண்ட தூரம் செல்லும் போது சிறு தவறும் விபத்துக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. இந்த வீடியோவை பாருங்கள்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி பலரும் இருசக்கர வாகனங்களில் சுற்றுலா செல்ல ஆர்வம் காட்டுகிறார்கள். 96 ராம் போல் பலரும் வாகனங்களில் மலை பிரேதங்கள், கடற்கரைகள், அருவிகள் என தொலைதூர பயணங்களுக்கு செல்கிறார்கள். சென்னையில் இருந்து கன்னியாகுமரி, சென்னையில் இருந்து ஊட்டி, சென்னையில் இருந்து கொடைக்கானல், சென்னையில் இருந்து மூணாறு என தொலைதூரங்களுக்கு நண்பர்களுடன் பலரும் இருசக்கர வாகனத்தில் செல்கிறார்கள்.

இரு சக்கர வாகனத்தில் தொலைதூர பயணம் செய்யும் இளைஞர்கள், எந்த காரணம் கொண்டும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. அதேபோல் பைக் டூர் செல்வோர் கண்டிப்பாக தலைகவசம் அணிந்தபடியே செல்ல வேண்டும். நீண்ட தூர பயணம் செல்வோர் அடிக்கடி இடையில் ஓய்வு எடுப்பது நல்லது.
மேலும் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது வாகனம் சரியாக உள்ளதா, தொலைதூர பயணங்களுக்கு ஏற்ற வகையில் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். பிரேக் சரியில்லை. டயர் சரியில்லை என்றால் அதை சரி செய்த பின்னரே பயணிக்க வேண்டும். வாகனத்தில் பிரச்சனைகளுடன் பயணிக்கும் போது, ஏதாவது ஒரு இடத்தில் தவறுகள் நடந்து சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது..
தொலைதூர பயணம் செல்வோர், அதிகாலை அல்லது பகலில் பயணம் செய்வது நல்லது, மாலை அல்லது இரவு நேரங்களில் வாகன பெருக்கம் அதிக அளவில் இருக்கும் என்பதால் அது சில நேரங்களில் ஆபத்துகள் ஏற்படலாம். இரவில் நீண்ட நேரம் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் போது, சாலைகளில் உள்ள பள்ளம் நமக்கும் தெரியாமல் போக வாய்ப்பு உள்ளது. எனவே விபத்தில் சிக்கும் நிலை ஏற்படலாம்.. எனவே முடிந்த வரை பகலிலேயே பயணித்து செல்லுங்கள்.
தீபாவளியை முன்னிட்டு நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் சுற்றுலா செல்லும் நண்பர்களுக்கு.. pic.twitter.com/jt3tx2aO11
— கோயம்புத்தூரான் (@Coimbatoraan) November 10, 2023
அதேபோல் தொலைதூர பயணம் செல்வோர், இருசக்கர வாகனங்களில் சாகசங்களில் ஈடுபட வேண்டாம். அப்படி சாகசத்தில் ஈடுபடுவதும் சிக்கலில் மட்டுமல்ல, விபரீதத்தில் முடிய வாய்ப்பு உள்ளது. மலை பிரதேசங்களில் கவனமாக செல்ல வேண்டும். சமீபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் விபத்தில் சிக்கினார்கள். அந்த வீடியோவை பாருங்கள்.












Click it and Unblock the Notifications