10 கிமீ ஸ்தம்பித்த வாகனங்கள்.. காத்திருந்து கொடைக்கானல் போனால்.. அபிராமி.. அபிராமி!
கொடைக்கானல்: தொடர் விடுமுறையால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகிறார்கள். சாலை சீரமைப்பு பணிகள் நடந்து வரும் காரணத்தாலும் 10 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது. ஒரு வழியாக கொடைக்கானல் சென்று பார்த்தால், குணா படத்தில் கமல் எப்படி அபிராமி, அபிராமி என்று பரவசம் அடைவாரோ அப்படியான கிளைமேட் இருந்தது.
புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை காரணமாக தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் 'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமையான இன்று விடுமுறை என்பதால், நேற்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. கொடைக்கானலுக்கு கீழிருந்து மேலே வர மொத்தம் 3 பாதைகள் இருக்கின்றன.

இதில் முதல் மற்றும் பிரதான பாதை என்பது வத்தலக்குண்டு, காட்ரோடு வழியாக வரும் பாதை தான். இந்த பாதை மிகவும் அகலமாகவும், சர்வசாதாரணமாக இரண்டு பேருந்துகள் செல்லக்கூடிய வகையிலும் இருக்கும். சாலையும் மிகவும் தரமாக இருக்கும். இந்த பாதை திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் ஆரம்பித்து தேனி மாவட்டம் காட்ரோடு, கெங்குவார்பட்டி வழியாக மலைபாதையில் ஆரம்பித்து செல்லும்.
அடுத்ததாக பழனியில் இருந்து கொடைக்கானல் பாதை என்பது கோவை, உடுமலைப்பேட்டை, திருப்பூர் ஆகிய ஊர்களில் இருந்து வருவோர் அதிகம் விரும்பும் பாதையாகும். இந்த பாதை கொஞ்சம் ஆபத்து நிறைந்த பாதையாகும். இதில் அனுபவம் வாய்ந்த வாகன ஓட்டிகளே ஓட்டி வர முடியும்.. அதேபோல் மூன்றாவது பாதை, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து கும்பக்கரை வழியாக பெருமாள் மலையை நோக்கி செல்லும் பாதையாகும். இந்த பாதையில் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் மட்டுமே போக முடியும்.பராமரிப்பு பணிகள் சில இடங்களில் நடந்து வருவதால், வனத்துறை அனுமதி கிடைத்தால் தான் போக முடியும்.
பெரியகுளம் , வத்தலக்குண்டு, பழனி என எந்த பாதையில் கொடைக்கானல் வந்தாலும் பெருமாள் மலை வரை தான் வர முடியும். அதன்பிறகு ஒரே பாதையில் தான் கொடைக்கானலுக்குள் நுழைய முடியும். கொடைக்கானலின் நுழைவு வாயிலான வெள்ளி நீர் வீழ்ச்சி முதல் பெருமாள் மலை வரை சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் சாலை கொஞ்சம் குறுகலாகவே இருக்கும். அதேநேரம் இந்த பாதையில் தான் அனைத்து வாகனங்களும் வரும். இதுதவிர வெள்ளி நீர் வீழ்ச்சி முன்பு ஏராளமான வாகனங்கள் பார்க்கிங் செய்யப்படும். இதன் காரணமாக போக்குவரத்து அதிகமாக உள்ள நாட்கள், விடுமுறை நாட்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
இப்படியான சூழலில் கொடைக்கானலில் குளு, குளு சீசன் தொடங்க இருப்பதால் நெடுஞ்சாலைத்துறையினர் மலைப்பாதையில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக பெருமாள் மலையில் இருந்து வெள்ளி நீர்வீழ்ச்சி வரை உள்ள மலைப்பாதையில் சீரமைப்பு பணிகள் நேற்று நடந்தது. இதையொட்டி அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சாலையில் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. அந்த வாகனங்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இது ஒருபுறம் எனில், கொடைக்கானலில் நேற்று காலை முதல் இரவு வரை குளிர்ச்சியான சூழல் இருந்தது. இதனை சுற்றுலா பயணிகள் மகிழ்ந்து போனார்கள். இன்றுமே கிளைமேட் கொடைக்கானலில் அற்புதமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் அனுபவித்து மகிழ்ந்தனர்.
இதற்கிடையே தொடர் விடுமுறையையொட்டி கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரித்தபடி உள்ளது. நகரில் உள்ள தங்கும் விடுதிகளில் அறைகள் வழக்கத்தை விட மிக அதிக அளவில் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு நாட்களாக அடித்து வரும் வெயிலுக்கு நடுவே ஒரு வழியாக கொடைக்கானல் சென்று பார்த்தால், குணா படத்தில் கமல் எப்படி அபிராமி, அபிராமி என்று பரவசம் அடைவாரோ அப்படியான கிளைமேட் இருந்ததால் சுற்றுலா பயணிகள் நெகிழ்ந்து போனார்கள்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications