கொடைக்கானலில் இரவில் இப்படி ஒரு காட்சியா.. வழக்கத்திற்கு மாறானது.. ஸ்தம்பித்த சுற்றுலா பயணிகள்
கொடைக்கானல்: புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என ஐந்து நாட்கள் தொடர்விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களை நோக்கி படைஎடுத்த வண்ணம் உள்ளனர். இதில் குறிப்பாக ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்துள்ளனர். கொடைக்கானல் நகரில் பல இடஙகளிலும் இரவு நேரத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.கொடைக்கானல் நகரில் இரவில் பொதுவாக நெரிசலே இருக்காது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக கடும் நெரிசல் இருந்தது.
ஆயுத பூஜை பண்டிகை பொதுவாக அக்டோபர் 2ம் வாரங்களில் வரும். ஆனால் இந்த முறை ஆயுத பூஜை, தசரா பண்டிகை அக்டோபர் 1, 2ம் தேதிகளில் வந்துள்ளது. இது காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் வந்துள்ளதால், பெற்றோர்களும் சொந்த ஊருக்கு செல்வதுடன், சுற்றுலா தலங்களுக்கும் செல்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

அக்டோபர் 1, 2, 3, 4, மற்றும் அக்டோபர் 5 ஆகிய ஐந்து நாட்கள் தொடர்விடுறை அரசு ஊழியர்களுக்கு விடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கும் தொடர்விடுமுறை ஏற்கனவே காலாண்டு தேர்வை ஒட்டி விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, கோவை உள்பட பல்வேறு பெரிய நகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு போய்விட்டார். அதேபோல் பலர் ஊட்டி, கொடைக்கானல்,மூணாறு, வாகமன், ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்கு சென்றுள்ளார்கள்.
பொதுவாக விடுமுறை நாட்களில் ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள். அந்த வகையில் தற்போது தசரா பண்டிகையையொட்டி தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநில பயணிகள் ஊட்டிக்கு படையெடுத்து வருகிறார்கள். இதுவழக்கமாக நடப்பது தான்.

அதேபோல் கொடைக்கானலுக்கும் பல்வேறு மாவட்ட பயணிகள், வெளிமாநில பயணிகள் அதிக அளவு சுற்றுலா வருவார்கள். குறிப்பாக சென்னையில் இருந்து ஏராளமானோர் கொடைக்கானலுக்கு அடிக்கடி சுற்றுலா சென்று வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்துள்ளனர். கொடைக்கானல் நகரில் பல இடஙகளிலும் இரவு நேரத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.கொடைக்கானல் நகரில் இரவில் பொதுவாக நெரிசல் இருக்காது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக கடும் நெரிசல் இருக்கிறது.

கொடைக்கானல் மாநகரின் நுழைவு வாயிலான வெள்ளி நீர் வீழ்ச்சி தொடங்கி, மூஞ்சிக்கல், நட்சத்திர ஏரி, பேருந்து நிலையம் வரை அந்த பகுதியின் இருபகுதியிலும் நெரிசல் அதிகமாக உள்ளது. ஏராளமான வாகனங்கள், கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் திரும்பி செல்வதால், அந்த பகுதியில் நெரிசல் அதிகமாக உள்ளது.
அதேபோல் தங்கும் விடுதியில் முன்பதிவு செய்தவர்கள் பேருந்து நிலையத்தில் இருந்து மூஞ்சிக்கல் வரும் வழியிலும் வந்த வண்ணம் இருந்ததால் அங்கும் நெரிசல் அதிகமாக இருந்தது. ஒரே நேரத்தில் பலரும் வந்திருப்பதால், கொடைக்கானல் நகரமே விளக்குகளால் ஜொலிக்கிறது. கொடைக்கானலில் கிளைமேட் தற்போது அருமையாக உள்ளது. நாளை பலரும் பல்வேறு சுற்றுலா இடங்களை காண வேண்டும் என்ற ஆர்வமுடன் குவிந்து வருகிறார்கள். இதனால் தான் வழக்கத்திற்கு மாறாக நெரிசல் இரவில் கூட கொடைக்கானலில் அதிகமாக உள்ளது.












Click it and Unblock the Notifications