இதில் பயணிப்பதே தனி "டூர்" தான்.. இந்தியாவில் ஓடும் டாப் 5 தொலைதூர ரயில்கள்! தமிழ்நாட்டில் இத்தனையா?
சென்னை: காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை வரும் ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் உள்பட பல ரயில்கள் இந்தியாவில் நாள் கணக்கில் பயணம் செய்து இலக்கை அடைகின்றன. இந்த ரயில்களில் பயணம் செய்வதே தனி டூர் தான் என்று சொல்லும் அளவுக்கு இதில் பயணம் செய்வது இருக்கும். அப்படியான 5 ரயில்களை இங்கே காணலாம்.
பயணம் செய்வது என்றாலே சிலருக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதிக செலவு பிடிக்கும் என்பதால் அதை கனவாகவே வைத்து இருப்பார்கள். அதிலும் தற்போது எல்லாம் கார்கள், பைக்குகளில் தொலை தூரம் பயணித்து அதை வீடியோவாக யூடியூப்களில் பலரும் போட்டு வருகிறார்கள். தங்கள் பயண ஆசையை இப்படி நிறைவேற்றிக்கொள்வதோடு வருமானமும் ஈட்டிக்கொள்கிறார்கள்.

அந்த அளவுக்கு எல்லாம் நமக்கு வசதியும் இல்லை.. நேரமும் இல்லை என்று நினைக்கும் பலரும் ரயில் பயணத்தையே விரும்புவார்கள். தொலைதூரங்களுக்கு செல்ல வேண்டும் என்றாலும் கூட குறைந்த கட்டணத்தில் சென்றுவிடலாம். அந்த வகையில், ரயில் பயணமே மினி டூர் போல தொலை தூரங்களுக்கு செல்லும் ரயில்கள் இந்தியாவில் பல ஓடுகின்றன. அதில், டாப் 5 ரயில்களை பற்றி இங்கே பார்ப்போம்.
விவேக் எக்ஸ்பிரஸ்: இந்தியாவிலே நீண்ட தூரம் செல்லும் ரயில் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில்தான். அசாமின் திப்ருகரில் இருந்து தமிழ்நாட்டின் கன்னியாகுமரி வரை இந்த ரயில் செல்கிறது. 9 மாநிலங்களை கடந்து செல்கிறது விவேக் எக்ஸ்பிரஸ் ரயில். அதாவது 4,273 கி.மீ இந்த ரயில் இயங்குகிறது. இந்த ரயிலின் மொத்த பயண நேரம் 80 மணி நேரம் 15 நிமிடம். அதாவது கிட்டத்தட்ட 4 நாட்கள் இந்த ரயில் பயணம் செய்கிறது.

சில்சர் எக்ஸ்பிரஸ் ரயில்: இந்த பட்டியலில் 2-வது இடம் வகிக்கும் ரயில் திருவனந்தபுரம் - சில்சர் இடையே இயக்கப்படும் சில்சர் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகும். இந்த ரயில் கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்து அசாமின் சில்சார் நகரம் வரை இயக்கப்படுகிறது. கேரளாவில் இருந்து கோவை, ஈரோடு, சேலம், ஜோலார் பேட்டை, பெரம்பூர் வழியாக ஆந்திராவின் விஜயவாடா வழியாக ஒடிசா, ஜார்க்கண்ட் வழியாக அசாம் செல்கிறது.
வடகிழக்கு ரயில்வே மூலம் இயக்கப்படும் இந்த ரயிலில் வட இந்திய புலம் பெயர் தொழிலாலர்கள் அதிகம் பயணிப்பதை காண முடியும். 3,932 கிமீ தூரத்தை இந்த ரயில் 76 மணி நேரத்தில் கடக்கும். 54 ரயில் நிலையங்களில் நிற்கும்.

12 மணி மாநிலங்கள் வழியாக: இந்தியாவின் தென்கோடி எல்லையான கன்னியாகுமரியில் இருந்து வட எல்லையான ஜம்மு காஷ்மீர் வரை ரயில் இயக்கப்படுகிறது. கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் இருந்து காஷ்மீரின் கத்ரா வரை இயக்கப்படும் இந்த ரயில் இந்தியாவின் தொலை தூர ரயில்களின் வரிசையில் 3-ஆம் இடம் வகிக்கிறது. ஹிம்சகார் எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் இந்த ரயில் 12 மணி மாநிலங்கள் வழியாக செல்கிறது. இதன் மொத்த பயண தூரம் 3,790 கி.மீட்டர் தூரம் ஆகும்.

4வது இடத்தில் எந்த ரயில்?: நீண்ட தூரம் செல்லும் ரயில்களின் பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கும் ரயில் எதுவென்றால், ஜம்மு எக்ஸ்பிரஸ் ரயில் ஆகும். நெல்லையில் இருந்து ஜம்முவின் கத்ராவில் வரை செல்லும் இந்த ரயில் 62 ரயில் நிலையங்களை கடந்து செல்கிறது. இதன் மொத்த பயண தூரம் 3,630 கிலோ மீட்டர் ஆகும்.

3,600 கிலோ மீட்டர் தூரம்: இந்த பட்டியலில் 5-வது இடத்தில் நவ்யுக் எக்ஸ்பிரஸ் உள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து ஜம்மு வரை செல்லும் இந்த ரயில் செல்கிறது. 12 மாநிலங்கள் வழியாக 3,600 கிலோ மீட்டர் தூரம் இந்த ரயில் பயணம் செய்கிறது. இந்த ரயிலின் மொத்த பயண தூரம் 68 மணி நேரமாகும்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications