லட்சத்தீவு செல்வது எப்படி? லட்சத்தீவு சுற்றுலா குறித்து இந்தியா டூரிஸம் தென்மண்டல இயக்குநர் பேட்டி

Subscribe to Oneindia Tamil

மதுரை : கொச்சியில் இருந்து விமானத்தில் அகாட்டி தீவு சென்று லட்சத்தீவை அடையலாம் என்றும் சிறிய ஏர்போர்ட் என்பதால் செல்வதற்கு அனுமதி கட்டாயம் வேண்டும் என்றும் அனுமதி பெற்ற ஒரு மாதத்திற்குள் செல்லலாம் என்றும் இந்தியா டூரிஸம் தென்மண்டல இயக்குநர் வெங்கடேசன் தத்தாத்ரேயன் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் கேரளா வழியாக லட்சத்தீவுக்கு பயணித்து வந்தார். அவர் லட்சத்தீவிற்கு சென்ற போது, கடலில் நீச்சல் அடித்து, கடற்கரையை ரசித்தார். இதுபற்றிய புகைப்படங்கள், வீடியோக்களை அவரே சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அதன் பின்னர் கூகுளில் இந்தியா முழுவதும் அதிகம் தேடப்படும் இடமாக லட்சத்தீவு மாறியது.

How to go to Lakshadweep? India Tourism Southern Regional Director interview about Lakshadweep tourism

இதனிடையே லட்சத்தீவு அருகில் உள்ள நாடான மாலத்தீவு சுற்றுலாவையே பிரதான தொழிலாக கொண்ட நாடு ஆகும். பிரதமர் மோடியின் பயணத்தால் லட்சத்தீவு மிகப்பெரிய சுற்றுலா தலமாக மாறும் என்ற அச்சத்தில் மாலத்தீவை சேர்ந்த அமைச்சர்கள் சிலர் பிரதமர் மோடியை அநாகரிகமாக விமர்சித்தார்கள். இதனால் சமூக வலைதளத்தில் சர்ச்சையாக மாறியது

மாலத்தீவை புறக்கணிக்குமாறு சமூகவலைதளங்கள் வாயிலாக இந்தியாவின் பல்வேறு பிரபலங்கள் அழைப்பு விடுத்தனர். அவ்வளவு தான் மாலத்தீவு ஓட்டல்களில் பல ஆயிரம் முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டன. மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை இந்தியர்கள் அப்படியே மாலத்தீவினை கைவிட்டனர். பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவு சென்றது குறித்து செய்த தேவையற்ற விமர்சனத்தால் மாலத்தீவு தற்போது பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.

இது ஒருபுறம் எனில் இதனிடையே லட்சத்தீவு குறித்து பலரும் தேடி வருகிறார்கள். லட்சத்தீவு செல்வது எப்படி, லட்சத்தீவில் உள்ள கட்டுப்பாடுகள் என்ன என்று பலரும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக லட்சத்தீவிற்கு சுற்றுலா செல்வதற்கான விமான டிக்கெட் வரும் மார்ச் மாதம் வரை விற்றுத் தீர்ந்துள்ளது. இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட லட்சத்தீவு கேரளாவின் கொச்சி அருகே இருக்கிறது.

கேரள மாநிலம் கொச்சியிலிருந்து மட்டுமே லட்சத்தீவின் அகத்தி நகருக்கு விமானம் இயக்கப்படுகிறது. அலையன்ஸ் ஏர் நிறுவனம் மட்டுமே லட்சத்தீவுக்கு 70 பேர் பயணிக்கக் கூடிய விமானத்தை தினமும் இயக்கி வருகிறது. கொச்சி-அகத்தி, அகத்தி-கொச்சி இடையே ஒரு நாளைக்கு ஒரு விமானம் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் பயணம் காரணமாக, இந்தியர்கள் பலரும் லட்சத்தீவிற்கு செல்ல ஆர்வம் காட்டுகிறார்கள். இதன் காரணமாக லட்சத்தீவின் அகத்தி நகருக்கு செல்வதற்கான விமான டிக்கெட் வரும் மார்ச் மாதம் வரையில் விற்றுத் தீர்ந்துவிட்டது.

லட்சத்தீவினை பொறுத்தவரை தங்குவதற்ககோ, சுற்றிபார்க்கவோ பெரிய அளவில் வசதிகள் இல்லை.. சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு மொத்தமே சுமார் 100 அறைகள்தான் உள்ளதாக கூறப்படுகிறது.. லட்சத்தீவு செல்ல ஒரு நாளைக்கு ஒரேயொரு விமான சேவை தான் என்பதுடன் அந்த விமானத்திலும் மொத்தமே 60 இருக்கைகள்தான் இருப்பதால் எளிதாக போக முடியாது. அதேநேரம் கொச்சிக்கும் லட்சத்தீவுக்கும் படகு போக்குவரத்து இருக்கிறது. ஆனால் வெறும் இரண்டு படகுகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. லட்சத்தீவை மிகப்பெரிய சுற்றுலாத்தளமாக மாற்ற வேண்டுமென்றால் அதற்கு ஏராளமான மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. அதேநேரம் அங்கு செல்ல அனுமதி வாங்க வேண்டியது அவசியம்.. சுற்றுலா நிறுவனங்கள் வாயிலாக சென்றால் அனுமதி வாங்கத்தேவையில்லை..அந்த நிறுவனங்களே எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிடும்.. இதுபற்றி மதுரை வந்த இந்தியா டூரிஸம் தென்மண்டல இயக்குநர் வெங்கடேசன் தத்தாத்ரேயன் விளக்கம் அளித்துள்ளார்.

இந்திய சுற்றுலாத்துறை சார்பில் மதுரை கீழக்குயில்குடி சமணர் மலையில் பொங்கல் விழா நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட இந்தியா டூரிஸம் தென்மண்டல இயக்குநர் வெங்கடேசன் தத்தாத்ரேயன் கூறுகையில், "லட்சத்தீவில் சுற்றுலா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த தீவிற்கு அரசு ஊழியர்கள் சென்று பணியாற்ற பர்மிட் தேவையில்லை. மற்றவர்கள் ஆன்லைனில் அனுமதி வாங்க வேண்டும்.

லட்சத்தீவு செல்வது எப்படி: 'சமுத்ரா பாக்கேஜ்' எனப்படும் திட்டத்தின் கீழ் கேரளாவின் கொச்சியில் இருந்து கப்பல்கள் கவரத்தி தீவுக்கு படகுகள் செல்கின்றன. அங்கிருந்து படகுகள் மூலம் லட்சத்தீவின் பல்வேறு தீவுகளுக்கு செல்லலாம். சுற்றுலா செல்ல விரும்புவோருக்கு டூர் ஆப்பரேட்டர்கள் மொத்தமாக அனுமதி பெற்று விடுவதால் கப்பலில் செல்லும் பயணிகளுக்கு தனி அனுமதி பெறத்தேவையில்லை. ஆனால் தனியாக செல்பவர்களுக்கு 'ஆன்லைன் மூலம்' அனுமதி பெற வேண்டியது அவசியம்.

லட்சத்தீவுக்கு விமானத்தில் செல்வது எப்படி: கேரளாவின் கொச்சியில் இருந்து விமானத்தில் அகாட்டி தீவு சென்று லட்சத்தீவின் பல்வேறு இடங்களுக்கு போக முடியும். லட்சத்தீவின் அகாட்டி தீவில் இருப்பது மிக சிறிய ஏர்போர்ட் என்பதால் செல்வதற்கு அனுமதி கட்டாயம். அனுமதி பெற்ற ஒரு மாதத்திற்குள் செல்ல முடியும். லட்சத்தீவில் நீர்விளையாட்டுகள், சாகச விளையாட்டுகள் என பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைய இருக்கிறது" இவ்வாறு கூறினார்.

இதனிடையே தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் சுற்றுலா திட்டங்கள் பற்றி பேசிய இந்தியா டூரிஸம் தென்மண்டல இயக்குநர் வெங்கடேசன் தத்தாத்ரேயன், 'ஏக் பாரத் ஸ்ரேஸ்தா பாரத்' திட்டத்தின் கீழ் மத்திய கல்வித்துறை மூலம் தமிழகம், காஷ்மீரை ஒருங்கிணைத்து கலை, கலாச்சாரத்தை பரப்ப திட்டமிட்டிருக்கிறோம். தமிழக இளைஞர்களுக்கு காஷ்மீர் பற்றிய அறிய வேண்டும் என்பதற்காக இப்படி திட்டமிட்டுள்ளோம், அதேபோல காஷ்மீரில் இருந்து வந்தவர்களுக்கு சென்னை கலாஷேத்ராவில் திருவிழா நடத்தி இருக்கிறோம்.

சுற்றுலா தலங்கள் பற்றி இளைஞர்கள் விழிப்புணர்வு பெறுவற்காக 'யுவா டூரிஸம்' குழுக்கள் உருவாக்கியுள்ளோம். இவர்கள் மூலம் சுற்றுலா தலங்களை சுத்தமாக வைத்திருப்பது, வெளிநாட்டினர், வெளிமாநிலத்தவர் வரும் போது நமது பெருமைகளை எடுத்துச் சொல்வது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். சுதேசி தர்ஷன் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மாமல்லபுரம், நீலகிரியில் மத்திய அரசின் நிதியின் கீழ் சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்தி இருக்கிறோம். வேளாங்கண்ணி, காஞ்சிபுரத்தை தொடர்ந்து கும்பகோணம் சுற்றியுள்ள 9 கோயில்களை ஒருங்கிணைத்து நவக்கிரகா திட்டத்திற்கான உள்கட்டமைப்பை உருவாக்க இருக்கிறோம்" இவ்வாறு கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+