ஜூனுக்குள் போயிருங்க.. வெயிலில் எஸ்கேப் ஆக சேலத்தில் சூப்பர் ஸ்பாட் - ஏற்காட்டில் இவ்ளோ இருக்கா?
சேலம்: ஜூன் மாதத்தின் முதல் பாதியை தாண்டிய பிறகு தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், தமிழ்நாட்டின் வளர்ந்து வரும் மாநகராட்சியான சேலம் அருகே இருக்கும் ஜில்லான ஒரு மலைப்பகுதியான ஏற்காட்டைதான் நாம் தற்போது பார்க்க உள்ளோம்.
தமிழ்நாட்டில் சென்னை, சேலம், மதுரை, திருச்சி, தஞ்சாவூர் உட்பட பெரும்பாலான மாவட்டங்கள் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கோடை விடுமுறைகள் முடிந்து பள்ளிகள் தொடங்கி பிறகும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. இந்த கோர வெயிலில் இருந்து தப்ப ஆளுக்கு ஒரு பக்கம் குளிர் பிரதேசங்களை நோக்கி சென்று வருகின்றனர்.

விடுமுறை முடிந்துவிட்டாலும், வார விடுமுறை நாட்களில் மக்கள் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகிறார்கள். ஆனால், சீசன், செல்ல வேண்டிய ஸ்பாட்டுகள், முறையான வழிகாட்டுதல் இல்லாமல் செல்வதால் சுகமாக இருக்க வேண்டிய சுற்றுலாவும் சுமையாகிவிடுகிறது. உங்களுக்கு வழிகாட்டும் வகையில்தான் ஒன் இந்தியாவில் தொடர்ந்து சுற்றுலா வழிகாட்டி பதிவுகளை வெளியிட்டு வருகிறோம்.
அந்த வகையில் தமிழ்நாட்டின் கொங்கு மண்டலத்தின் மாம்பழ பிரதேசமான சேலம் மாவட்டத்தில் இருக்கும் முக்கிய சுற்றுலா தளமான ஏற்காடு பற்றிதான் பார்க்க உள்ளோம். ஏற்காட்டை பொறுத்தவரை பலரும் அறிந்திருக்கும் சுற்றுலா தளம்தான். தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் இங்கு சென்று வருகிறார்கள்.

ஆனால், முறையான வழிகாட்டுதல் இல்லாததால் முக்கிய இடங்களுக்கு செல்லாமலேயே மக்கள் திரும்பி விடுகின்றனர். ஏற்காடு என்பது ஊட்டி, மூணாறு போல் தேயிலை தோட்டங்களால் நிரம்பிய மலைப்பகுதி கிடையாது. மலைப் பகுதியின் மற்றொரு பரிணாமத்தை அது உங்களுக்கு காட்டும்.
ஜில்லென்றி ஏரிகளில் படகு சவாரி செய்யலாம். வித்தியாசமான நிலப்பரப்புகளை பார்த்து லயிக்கலாம். மலையேற்றம் செய்து ஏற்காட்டின் புதிய பாதைகளை, பழத்தோட்டங்களை கண்டு மகிழலாம். ஆரஞ்சு, பலா, ஏலக்காய், கொய்யா, கருப்பு மிளகு தோட்டங்கள் உங்கள் கண்களை பசுமையாக்கும். காபி தோட்டங்களும் அங்கு இருக்கின்றன.

அங்குள்ள தாவரவியல் பூங்காவுக்குள் சென்றாலே மரங்கள் மீதான உங்களின் காதல் மேலும் அதிகரிக்கும். அதில் எண்ணற்ற ஆர்க்கிட் வகைகளை காணலாம். இந்தியாவின் புகழ்பெற்ற ஆர்க்கிடேரியம் இதுதான். அந்த அனுபவத்தை தவறவிடாதீர்கள். ஏரிக்கரைக்கு சென்று படகுசவாரிக்கு முன்பதிவு செய்து நீரிலேயே மிதந்து விளையாடலாம்.
நகர பரபரப்புகளுக்கு மத்தியில் அந்த ஏரி நீரின் சலசலப்பு உங்களை சாந்தப்படுத்தும். குழந்தைகளுடன் சென்றால் அங்குள்ள பசுமையான புல் வெளிகளில் அவர்களுடன் விளையாடி மகிழலாம். இது அல்லாமல் ஏற்காட்டில் அண்ணா பூங்கா, லேடி சீட், ஆர்தர் இருக்கை, பகோடா பாயிண்ட், கரடிகள் குகை, கிளியூர் நீர்வீழ்ச்சி போன்ற இடங்களும் உள்ளன. மிஸ் பண்ணிறாதீங்க.

சேலத்தில் இருந்து வெறும் 28 கிமீ தொலைவில் ஏற்காடு அமைந்து இருக்கிறது. பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் இருந்து 32 கிமீ தொலைவாகும். ஏராளமான பேருந்து சேவைகள் ஏற்காடு - சேலம் இடையே உள்ளன. அதேபோல் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பேருந்து சேவைகள் உள்ளன.
அதே நேரம் எல்லா மாதங்களிலும் ஏற்காடு குளு குளுவென்று ரம்மியமாக இருக்காது. அதற்கென ஒரு சீசன் உள்ளது. அதுதான் அக்டோபர் முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டம். ஜூன் மாதம் முடிவடைய இன்னும் 15 நாட்களே உள்ளதால் உடனே பிளான் பண்ணி பெட்டியை கட்டி புறப்பட தயாராகுங்கள். அடுத்த சுற்றுலா பதிவில் சந்திப்போம்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications