சென்னை டூ கொடைக்கானல்.. மிக குறைந்த கட்டணத்தில் சுற்றுலா சென்று வருவது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இருந்து கொடைக்கானல் சுற்றுலா செல்ல விரும்புவோர் ரயில், பேருந்து, விமானம் என எதில் வேண்டுமானாலும் சென்று எளிதாக போய்விட முடியும். ஆனால் மிக குறைந்த கட்டணத்தில் கொடைக்கானலை சுற்றி பார்க்க வேண்டும் என்றால், அதற்கு சில யுக்திகளை கையாள வேண்டும்.. சில தியாகங்களை செய்வது, சில தவறுகளை செய்யாமல் இருப்பதன் மூலம் கொடைக்கானலை குறைந்த கட்டணத்தில் தங்கி சுற்றி பார்க்க முடியும். அதனை பற்றி பார்ப்போம்.

சென்னையில் உள்ளவர்கள் வெயிலை தாக்குப்பிடிக்க முடியாமல் கோடைக்காலங்களில் மலை வாசஸ்தலங்களுக்கு சுற்றுலா செல்வது வழக்கம் ஆகும். அதில் பலருக்கும் கொடைக்கானல் மிகவும் பிடிக்கும். காரணம்... மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அற்புதமான சுற்றுலா தலமான கொடைக்கானலில் ஆண்டு முழுவதும் காலநிலை அருமையாக இருக்கும்...கொடைக்கானலில் சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன. குளுகுளுவென நிலவும் காலநிலையை தாண்டி, அங்குள்ள பசுமையான காடுகள், கண்களுக்கு விருந்தளிக்கும் பல்வேறு பகுதிகள் உள்ளன.

tour Kodaikanal Chennai

கொடைக்கானலில் மஞ்ச மூட்டம் என்று அழைக்கப்படும் பனி மூட்டம் அடிக்கடி கடந்து செல்லும். அது உங்களை ஒரு முறை கடந்து சென்றால், அதில் இருந்து வெளியே வர நீண்ட நேரம் ஆகும்.. அந்த அளவிற்கு உங்களுக்கு பிடிக்கும். அடிக்கடி மலையும், குளுகுளுவென காற்றும், நல்ல சாப்பாடும், மனதிற்கு பிடித்தவர்களுடன் ஜாலியான உரையாடல்களும், ஆட்டம் , பாட்டம், கொண்டாட்டம் என்று கொடைக்கானல் மலை உங்களை ஏங்க வைக்கும். கொடைக்கானலுக்கு பட்ஜெட்டில் சுற்றுலா சென்றுவர வேண்டும் என்றால், அதற்கு முன்பே திட்டமிடுங்கள்..

குடும்பத்துடன் மே மாதம் சுற்றுலா செல்ல போகிறீர்கள் என்றால், இப்போது ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்.. திண்டுக்கல் வரை ரயிலில் சென்று அங்கிருந்து கொடைக்கானலுக்கு பேருந்து மூலம் செல்லலாம்.. இல்லை ரயிலில் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால், பேருந்தில் செல்லாம். ஆம்னி பேருந்துகள் சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கே உள்ளன. அதில் பயணிக்கலாம். அதேநேரம் தேனி செல்லும் அரசு பேருந்துகளிலோ அல்லது தனியார் பேருந்துகளில் ஏறி வத்தலக்குண்டு சென்று இறங்கி கொண்டு, அங்கிருந்து பேருந்தில் ஏறி சென்றால் கட்டணம் மிக குறைவாக இருக்கும். ஏனெனில் நேரடியாக கொடைக்கானல் வரை செல்லும் பேருந்துகளில் கட்டணம் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.

அதேபோல் தனியாக நீங்கள் மட்டும் கொடைக்கானல் செல்ல முடிவு செய்து விட்டால், 500 ரூபாய் முதல் 1000 ரூபாய்க்கு கூட ரூம்கள் கிடைக்கும். ஆனால் அதனை முன்கூட்டியே உறுதி செய்துகொண்டு செல்லுங்கள். ஹேம் பயர், பல்வேறு விஷயங்களுடன் சுற்றிப்பார்க்க விரும்பினால் சுற்று கூடுதலாகஇருக்கும்.. ஆனால் முன்கூட்டியே திட்டமிட்டால் கட்டணம் குறைவாகவே இருக்கும். கடைசி நேரத்தில் முன்பதிவு செய்தால் அல்லது நேரில் சென்று முன்பதிவு செய்தால் கட்டணம் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.அல்லது ரூம்கள் கிடைக்காமல் போகக்கூட வாய்ப்பு உள்ளது. அதேபோல் கூகுளில் உள்ள படங்களை நம்பியோ அல்லது மற்றவர்கள் கொடுத்துள்ள ரேட்டிங்கை நம்பியோ ஓட்டல்களை முன்பதிவு செய்ய வேண்டாம். சரியான ஓட்டல்களை அறிய ஏற்கனவே கொடைக்கானல் சென்று வந்தவர்களிடம் அல்லது அங்குள்ள உள்ளூர் மக்களிடம் கேட்டு அறியலாம்.

கொடைக்கானலை பொறுத்தவரை சுற்றுலா வாகனங்கள் அதிகமாக உள்ளன. எனவே அங்கு சென்று பிடித்த இடங்களை எல்லாம் சுற்றி பார்க்கலாம். மொத்தமாக குழுவாக செல்வர்களை ஏற்றி செல்வதற்கு என்றே வேன்கள் உள்ளன. அவற்றில் 12 இடங்கள் , 8 இடங்கள் , 16 இடங்கள் என்று சுற்றிக்காட்ட ஒருவருக்கு இவ்வளவு கட்டணம் என்று கேட்பார்கள். சீசனை பொறுத்து கட்டணம் மாறுபடும். ஆனால் இப்படி தேர்வு செய்தால் கட்டணம் மிக குறைவாக இருக்கும். குடும்பத்துடன் சுற்றிப்பார்க்க எளிதாக இருக்கும்.

தெரிந்த நண்பர் ஒருவர் இரண்டு மாதம் ஒருமுறை கொடைக்கானல் சென்று வருவார். அவர் பழனி எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்வார். அங்கிருந்து பேருந்தில் ஏறி சென்று சுற்றுலா செல்வார்.. அவர் தனி ஒருவராக சென்று ஜாலியாக சுற்றி பார்த்து வர ஆகும் செலவு என்று கேட்டால் 3000 ரூபாய் தான் ஆகும் என்பார். அவர் சுற்றிபார்க்க அரசு பேருந்துகளை அதிகம் விரும்புவார். அங்குள்ள அரசு பேருந்துகளில் ஏறி, பிடித்த இடங்களை பார்த்துவிட்டு, அப்படியே அதே பேருந்திலோ அல்லது அதற்கு அடுத்து வரும் பேருந்துகளியே ஏறி வருவாராம்.. இப்படியும் சிலர் சுற்றுலா செல்கிறார்.

கொடைக்கானலில் உள்ளூர் மக்களிடம் கேட்டால் எங்கு சாப்பாடு தரமாக இருக்கும் என்பதையும், எங்கு ஓட்டல்களில் கட்டணம் குறைவு என்பதையும் தெளிவாக கூறுவார்கள. எனவே அங்கு நேரில் சென்று அவர்களிடம் கேட்டால் தரமான ஓட்டல்களை கண்டுபிடித்து சாப்பிடலாம்.. கொடைக்கானலை பொறுத்தவரை சுற்றி பார்க்க விரும்புவோர் சரியான டிராவல்ஸ் நிறுவனங்களை அணுகி, நல்ல பேக்கேஜ்களை கேட்டு வாங்கி சுற்றிப்பார்க்கலாம். அதுவும் சிறப்பான ஆப்சனாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+