காலாண்டு தேர்வு விடுமுறை.. கடவுளே வாழ விரும்பும் பூமி.. தேனி ரயிலை மிஸ் பண்ணிடாதீங்க
தேனி: காலாண்டு தேர்வு விடுமுறை விரைவில் வரப்போகிறது.. இந்த முறை வாகமன், தேக்கடி, மூணாறு, இடுக்கி அணை, கொடைக்கானல், மேகமலை, கும்பக்கரை, குரங்கனி, சுருளி அருவி, சோத்துப்பாறை, கொழுக்குமலை, சாந்தாம்பாறை ஆகிய இடங்களுக்கு போக ஆசைப்பட்டால் தயவு செய்து தேனி ரயிலை மிஸ் பண்ணிடாதிங்க..
போடி ரயிலை பிடித்தால் போதும், இவ்வளவு இடங்களை எளிதாக சுற்றி பார்க்க முடியும். சென்னையில் இருந்து தேனிக்க வெறும் 390 ரூபாய் தான் ஸ்லீப்பர் ரயில் டிக்கெட். ரயிலில் ஏறி தூங்கி காலையில் எழும் போதே, மலைகளுக்கு நடுவில் ரயில் செல்வதை பார்க்க முடியும். ஆண்டிபட்டி கணவாயில் ரயில் செல்லும் அழகு, பார்ப்போரின் மனதை பறித்தவிடும்.

தேனியில் இறங்கி டிபனை முடித்துவிட்டு, சுற்றுலாவிற்கான வாகனத்தை எடுத்துக்கொண்டு அடுத்த இரண்டரை மணி நேரத்தில் வாகமன் போகலாம். போகும் வழியில் தான் சுருளி அருவி என்பதால் ஒரு மோது மோதி குளித்துவிட்டு அப்படியே மலையில் ஏறினால் தேக்கடி வந்துவிடும். கேரளாவில் யானை சபாரி, பார்க், டகு சவாரி என நிறைய விஷயங்கள் அதை முடித்துவிட்டு அப்படியே வாகமன் சென்றால், அங்கு ஏராளமான சுற்றுலா இடங்கள் இருக்கின்றன. வாகமன் பைன் காடு, மர்மலா நீர்வீழ்ச்சி, தங்கல் பாறை, தரிசு மலைகள், வாகமன் ஏரி,முண்டகாயம் காட், வாகமன் நீர்வீழ்ச்சி, குருசுமலை, வாகமன் புல்வெளிகள், முருகன் மலை, பைன் ஹில் ஆகியவற்றை வாகமனில் சுற்றி பார்க்லாம்.

அதை எல்லாம் பார்க்க ஒரு நாள் முழுக்க கண்டிப்பாக தேவை. அதை எல்லாம் பார்த்துவிட்டு, இரவு வாகமனிலோ அல்லது தேக்கடியிலோ தங்கலாம். அதன்பிறகு காலையில் இடுக்கி அணை சென்று பார்க்கலாம். அதன்பிறகு பூம்பாறை வரும் வரை ஏராளமான சுற்றுலா தளங்கள் இருக்கின்றன,. அதனை பார்த்து முடித்துவிட்டு மலையிலேயே பயணித்தால் மூணாறு வந்துவிடும். மூணாறில் இரவில் தங்கி காலையில் ஏராளமான மாட்டுப்பட்டி அணை முதல் டாப் ஸ்டேசன் வரை ஏராளமான இடங்களை சுற்றி பார்க்கலாம். அதன்பிறகு அப்படியே மீண்டும் மூணாறு திரும்பி, விருப்பம் உள்ளவர்கள் இந்தியாவின் உயரமான தேயிலை தோட்டமான சூரியநெல்லி அருகே உள்ள கொழுக்குமலை டீ எஸ்டேட் (தமிழ்நாடு பகுதி) போகலாம். அங்கு ஒரு நாள் இரவு தங்கினால் அற்புதமாக இருக்கும்.

அதன்பிறகுஅப்படியே மலையை விட்டு போடி மெட்டு வழியாக இறங்கினால் கீழே குரங்கணி அருவி இருக்கும். அங்கு குளித்து மகிழ்ந்துவிட்டு அப்படியே மீண்டும் தேனி வந்து ரயிலில் ஏறலாம்.விரும்பினால் அப்படியே கொடைக்கானல் ரூட்டில் பயணித்தால், கும்பக்கரை, சோத்துப்பாறை, அடுக்கம் ஆகிய பகுதிகளை பார்க்கலாம்.
டிரக்கிங் விரும்பிகளாக இருந்தால், கொடைக்கானல் சென்று அங்கிருந்து வட்டக்கானல் வழியாக வெள்ளகவி கிராமத்திற்கு டிரெக்கிங் போகலாம். இதுவும் அற்புதமான அனுபவத்தை தரும்.இல்லாவிட்டால் கொடைக்கானலில் நன்றாக சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளதால் அவற்றை சுற்றிப்பார்த்துவிட்டு அப்படியே திண்டுக்கல் சென்று மீண்டும் ரயில் ஏறிவிடலாம்.












Click it and Unblock the Notifications