எச்சில் ஊறுதே.. உலகின் 3வது பெஸ்ட் சிக்கன் டிஷ் இந்தியாவுடையதாம்! 50 சிறந்த சிக்கன்களை பார்க்கலாமா?
சென்னை: உலகளவில் தலை சிறந்த 50 சிக்கன் உணவுகளை பட்டியலிட்டு இருக்கும் டேஸ்ட் அட்லஸ் நிறுவனம் அதில் 3 வது இடத்தை இந்தியாவை சேர்ந்த சிக்கன் உணவுக்கு வழங்கி உள்ளது. என்ன டிஷ் அது? விரிவாக பார்ப்போம்.
டேஸ்ட் அட்லஸ் என்ற இணையதளம் உலகளவில் தலை சிறந்த உணவு வகைகள் குறித்து தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் உலகளவில் தலை சிறந்த சிக்கன் உணவுகளை பட்டியலிட்டு உள்ளது அந்த இணையதளம். அதில் ஈரானை பாரம்பரியமாக கொண்ட ஜுஜே கபாப் முதலிடம் பிடித்து இருக்கிறது.

2 வது இடத்தை தென் கொரியாவை சேர்ந்த தக் கல்பி பிடித்து இருக்கிறது. 3 மற்றும் 4 வது இடங்களை இந்தியாவை சேர்ந்த சிக்கன் டிஷ்கள் பிடித்து உள்ளன. 3 வது இடத்தை முர்க் மகானி எனப்படும் பட்டர் சிக்கனும், 4 வது இடத்தை சிக்கன் டிக்காவும், 19 வது இடத்தை இந்தியாவை சேர்ந்த தந்தூரி முர்கும், 25 வது இடத்தை இந்தியாவை சேர்ந்த, குறிப்பாக தமிழ்நாட்டுக்கு சொந்தமான சிக்கன் 65 பிடித்து இருக்கின்றன.
3 வது இடத்தை பிடித்து இருக்கும் பட்டர் சிக்கன் இந்திய தலைநகர் டெல்லியில் அறிமுகமான உணவு வகையாகும். தற்போது தமிழ்நாடு உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள உணவகங்களிலும் இந்த பட்டர் சிக்கன் உணவு வகை கிடைக்கிறது. போன்லெஸ் சிக்கனில் தயிர், முந்திரி பேஸ்ட், நெய், பிரெஷ் கிரீம், கஸ்தூரி மேத்தி, மசாலா கலந்து தயாரிக்கப்படும் இந்த பட்டர் சிக்கன் அறுசுவையை நாக்கில் தவழ வைக்கும்.

4 வது இடத்தை பிடித்த சிக்கன் டிக்கா என்பது தயிரில் நன்றாக ஊற வைத்து கபாப் போன்று கம்பியில் சொருகி, கரி நெருப்பில் சுட்டு எடுக்கப்படும் உணவாகும். இதுவும் இந்தியாவில் உதயமானதுதான். 19 வது இடத்தை பிடித்து இருக்கும் தந்தூரியும் நன்றாக ஊற வைத்த கோழியை நேரடியாக நெருப்பில் சுட்டு எடுப்பதாகும்.
25 வது இடத்தில் இருக்கும் சிக்கன் 65 பற்றி நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை. இந்திய உணவு என்று டேஸ்ட் அட்லஸ் பட்டியலிட்டு இருக்கும் அது, அக்மார்க் தமிழ்நாடு தயாரிப்பாகும். சென்னையில் பல்வேறு கிளைகளை கொண்டு செயல்பட்டு வரும் புஹாரி என்ற உணவகம்தான் இந்த சிக்கன் 65 ஐ அறிமுகம் செய்தது.
1951 ஆம் ஆண்டு சென்னை அண்ணா சாலையில் தொடங்கப்பட்ட இந்த புஹாரி உணவகத்தில், கடந்த 1965 ஆம் ஆண்டு கோழி வறுவல் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் பெறும் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்த அது அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டுடன் சேர்ந்த சிக்கன் 65 என்று பெயரிடப்பட்டது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications