இன்று முதல் இந்தியர்கள் விசா இல்லாமல் மலேசியா செல்லலாம்.. சுற்றுலா செல்ல சூப்பர் சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

கோலாலம்பூர்: டிசம்பர் 1ம் தேதியான இன்று முதல் இந்தியக் குடிமக்கள் விசாவே இல்லாமல் மலேசியாவுக்குச் செல்லலாம். அங்கு 30 நாட்கள் வரை தங்கி சுற்றிபார்க்க முடியும். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இந்த வசதியை மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கடந்த நவம்பர் 26ம் தேதி அறிவித்தார்.

மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் வேலை, வர்த்தகம் மற்றும் சுற்றுலா ஆகியவற்றில் பல ஆண்டுகளாக தொடர்பு உள்ளது. இந்தியர்கள் பலர் பல ஆண்டுகளுக்கு முன்பே பிழைப்பிற்காக சென்று குடியேறி அந்த நாட்டின் குடிமகன்கள் ஆகிவிட்டனர். இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த பலர் மலேசியாவில் இருக்கிறார்கள். மலேசியாவில் தமிழ் மொழி மூன்றாவது முக்கிய மொழியாக உள்ளது. மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரின் எண்ணிக்கை, சுமார் 27 லட்சம் ஆகும். இது மலேசிய மக்கள் தொகையில் சுமார் 9% ஆகும். இதில் 80 சதவீதம் பேர் தமிழர்கள் ஆவார். இதுதவிர இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்த சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் மலேசியாவில் தங்கி பணியாற்றி வருகிறார்கள்.

Indian citizens can visit Malaysia without a visa from today

இதன் காரணமாக மலேசியா இந்தியா இடையே வணிகம் மற்றும் சுற்றுலாவிற்காக தினமும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். மலேசியாவிற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில், இந்தியர்கள் ஆறாவது இடத்தில் இருக்கிறார்கள். 2018-இல் சுமார் 3.25 லட்சம் மலேசிய சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வந்தனர்.இந்நிலையில் மலேசிய அரசின் வெளியிட்ட தகவலின்படி, இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் இந்தியாவிலிருந்து 2,83,885 சுற்றுலாப் பயணிகள் மலேசியா சென்றுள்ளார்கள். 2019-ஆம் ஆண்டில், இதே காலகட்டத்தில், இந்தியாவில் இருந்து 3,54,486 சுற்றுலாப் பயணிகள் மலேசியாவிற்குச் சென்றுள்ளார்கள்.

இந்தியாவுடன் வர்த்தகம் புரியும் நாடுகளில், மலேசியா 13வது பெரிய நாடாக இருக்கிறது. 2018-19ஆம் ஆண்டில், இரு நாடுகளுக்கும் இடையே சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இதில் இந்தியா சுமார் 54,000 கோடியை ஏற்றுமதி செய்தது, சுமார் 90,000 கோடியை இறக்குமதி செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா, மலேசியாவிற்கு அலுமினியம், இறைச்சி, இரும்பு மற்றும் எஃகு, தாமிரம், ரசாயனங்கள், அணு உலைகள், கொதிகலன்கள் மற்றும் இயந்திரங்களை ஏற்றுமதி செய்கிறது. மலேசியாவில் இருந்து எண்ணெய், மின் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், விலங்கு மற்றும் காய்கறிக் கொழுப்பு, விறகு போன்றவற்றை இந்தியா இறக்குமதி செய்கிறது. இப்படி இந்தியா உடன் பல்வேறு வகையில் உறவில் உள்ள மலேசியா,டிசம்பர் 1ம் தேதியான இன்று முதல் இந்தியக் குடிமக்கள் விசாவே இல்லாமல் மலேசியாவுக்கு வரலாம் என்று அறிவித்துள்ளது. இனி மலேசியா செல்ல விசா எடுக்க தேவையில்லை.. 30 நாட்கள் வரை மலேசியாவில் விசா இல்லாமல் தங்க முடியும். இந்தியர்கள் மட்டுமின்றி சீனர்களுக்கும் இந்த அறிவிப்பினை மலேசியா வெளியிட்டுள்ளது. எற்கனவே, தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகள் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக இந்தியர்களுக்கு விசா இல்லாமல் தங்கள் நாடுகளுக்கு வரலாம் என அறிவித்துள்ளன.

இதனிடையே இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ளவர்கள் 19 நாடுகளுக்குச் செல்ல விசா தேவையில்லை.. அவற்றின் விவரம்

பார்படோஸ்
பூடான்
டொமினிகா
க்ரெனடா
ஹைதி
ஹாங்காங்
மாலத்தீவுகள்
மொரீஷியஸ்
மான்ட்செராட்
நேபாளம்
நுயே தீவு
செயின்ட் வின்சென்ட் மற்றும் தி க்ரெனாடின்ஸ்
சமோவா
செனகல்
செர்பியா
ட்ரினிடாட் மற்றும் டொபாகோ
தாய்லாந்து
இலங்கை
மலேசியா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+