காஷ்மீர் போய் பியூட்டிஃபுல் காஷ்மீர்னு பாடணுமா? இதோ ஐஆர்சிடிசியின் டூர் பேக்கேஜ்! டிக்கெட் எவ்வளவு?
டெல்லி: குறைந்த செலவில் காஷ்மீரை சுற்றி பார்க்கணுமா. இதற்காக ஐஆர்சிடிசி நிர்ணயித்துள்ள டூர் பேக்கேஜ் விலை எவ்வளவு தெரியுமா?
புத்தாண்டு பிறக்க இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் மக்கள் புத்தாண்டை வரவேற்க எந்த சுற்றுலா தலங்களுக்கு செல்லலாம் என தேடி வருகிறார்கள். அதற்கு செலவு செய்யும் காசு கையை கடிக்காத வகையில் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.

இவர்களுக்காகவே ஐஆர்சிடிசி ஒரு அற்புதமான டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கு தெரியுமா காஷ்மீருக்குத்தான்! காஷ்மீர் பூமியின் சொர்க்க லோகம் என அழைக்கப்படுகிறது.
இந்த காஷ்மீருக்கு உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். அத்துடன் இங்கு பூக்கும் குங்குமப்பூ, தூலிப் மலர்கள், காய்க்கும் ஆப்பிள் உள்ளிட்டவைகளை பார்க்கவும் ஆர்வம் காட்டுகிறார்கள். பனி மலைகள், தால் ஏரி, வைஷ்ணவி தேவி ஆலயம், அமர்நாத் பனிலிங்கம் உள்ளிட்வைகளை பார்க்கலாம்.
மேலும் ஸ்ரீநகரில் உள்ள லே பகுதிக்கும் செல்லலாம். லடாக் பகுதிக்கு சென்று வரலாம். பனிப்பொழிவுகளுக்கு மத்தியில் காஷ்மீரில் புத்தாண்டை கொண்டாட விரும்புவோருக்கு ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் வரப்பிரசாதம் ஆகும். ஐஆர்சிடிசி வெளிநாடுகளுக்கும் சுற்றுலா பேக்கேஜ்களை கொண்டுள்ளது.
இந்த டூர் பேக்கேஜ்களில் சுற்றுலா பயணிகளுக்கான உணவு, தங்குமிடம் உள்ளிட்டவை இலவசம். மலிவான இந்த டூர் பேக்கேஜை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. 5 இரவுகள், 6 பகல்களுக்கான டூர் பேக்கேஜ் சென்னையிலிருந்து தொடங்குகிறது. இதன் பெயர் காஷ்மீர் ஹெவன் ஆன் எர்த். இந்த பேக்கேஜில் குல்மார்க், பஹல்காம், ஸ்ரீநகர் மற்றும் சோன்மார்க் ஆகிய இடங்களை காணலாம்.
மேலும் தால் ஏரியை பார்க்கலாம். இந்த பேக்கேஜ் அடுத்த மாதம் மார்ச் 25 மற்றும் மார்ச் 26 அன்று தொடங்குகிறது. இதற்கான முன்பதிவை ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ பக்கத்தின் மூலம் முன்பதிவு செய்யலாம். இதற்கான கட்டணம் தனியாக பயணித்தால் ஒரு நபருக்கு ரூ 53,500 கட்டணம் ஆகும். இரண்டு பேருடன் பயணித்தால் ஒரு நபருக்கு 49,500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அது போல் இந்த டூர் பேக்கேஜில் 3 பேருடன் பயணம் செய்தால் ஒருவருக்கு ரூ 47,500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.
5 வயத முதல் 11 வயதுக்குள்பட்ட குழந்தைகள் பயணித்தால் அவர்களுக்கான கட்டணம் ரூ 39 ஆயிரம் ஆகும். 2 வயது முதல் 4 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு ரூ 36,500 கட்டணம் ஆகும்.












Click it and Unblock the Notifications