இந்திய பயணிகளுக்கு இலவசம்.. பிரபல விமான நிறுவனம் கொடுத்த ஆஃபர்! உடனே டிக்கெட்டை போடுங்க
டோக்கியோ: சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம், சர்வதேச பயணிகளுக்கு இலவசமாக விமானத்தில் பயணம் செய்யும் சலுகையை அறிவித்துள்ளது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கு இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
சுற்றுலாப் பயணிகளை கவர பல்வேறு நாடுகளும் ஏராளமான சலுகைகளை அளித்து வருகின்றன. தாய்லாந்து, மலேசியா, இலங்கை, நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இன்றி பயணிக்கலாம். உலகின் பல்வேறு நாடுகளும் சுற்றுலா வருவாயை ஊக்குவிக்க இப்படியான சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் ஜப்பானும் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக இலவச விமான பயண திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தியர்களுக்கும் இந்த இலவச பயண சலுகை உண்டு என ஜப்பான் கூறியுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:

ஜப்பானை சேர்ந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தங்கள் உள்நாட்டு பயணத்திற்கு இலவச பயண சலுகையை அறிவித்துள்ளது. இந்தியா, அமெரிக்கா, தாய்லாந்து, சிங்கப்பூர், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, பெய்ஜிங், ஷாங்காய், தைபே உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இலவச பயணம் என்றால் ஜப்பானுக்கே இலவசமாக செல்ல முடியாது.
அங்கேதான் ட்விஸ்ட் இருக்கிறது. ஜப்பான் ஏர்லைன்ஸில் டிக்கெட் புக்கிங் செய்யும் சுற்றுலாப் பயணிகள் முழுக்கட்டணத்தையும் செலுத்த வேண்டும். அதேவேளையில், ஜப்பானுக்குள் 24 மணி நேரம் எங்கு சென்றாலும் உள்ளூர் விமானத்தில் பயணிக்க கட்டணம் கிடையாது. இந்த சலுகையை பெற பயணிகள் ஜப்பான் சர்வதேச விமானத்தில் டிக்கெட் புக்கிங் செய்யும் போதே, உள்நாட்டு பயணத்திற்கான டிக்கெட்டையும் புக் செய்தால் எந்த வித கட்டணமும் இன்றி இலவசமாக புக்கிங் செய்ய முடியும்.
ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் இயக்கும் விமானத்தில் மட்டுமே இந்த சலுகை பொருந்தும். சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்லாத சுற்றுலா தலங்களையும் பிரபலப்படுத்தும் விதமாக இந்த முயற்சியை ஜப்பான் மேற்கொண்டுள்ளது. உதாரணமாக, ஜப்பானின் டோக்கியாவிற்கு நீங்கள் ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பயணம் செய்தால், அங்கிருந்து ஹோக்கிடோ போன்ற இடங்களுக்கு விமானத்தில் கட்டணம் இன்றி பயணிக்கலாம்.
ஜப்பான் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் புதுடெல்லியில் இருந்துதும் டோக்கியோவிற்கு விமானங்களை இயக்கி வருகிறது. நியூயார்க், உள்ளிட்ட பிற முக்கிய நகரங்களுக்கும் ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவன விமானங்கள் இயக்கப் படுகின்றன. ஜப்பானை பொறுத்த வரை கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ளது. சுமார் 12 கோடி மக்கள் தொகை கொண்ட நாடாக ஜப்பான் உள்ளது. ஆயிரக்கணக்கான தீவுக்கூட்டங்களை கொண்ட ஜப்பான் சுற்றுலாப்பயணிகள் அதிகம் விரும்பி செல்லும் நாடாகவும் உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications