முதுமலையில் கர்நாடகா தம்பதி.. நொடிப்பொழுதில் ஆக்ரோஷமான யானை.. உறைந்த வாகன ஓட்டிகள்
ஊட்டி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து முதுமலை வழியாக மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் இரவு நேரங்களில் செல்வது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் யானைகள் சர்வ சாதாரணமாக உலாவரும். இந்த சூழலில் நேற்று முன்தினம் இரவு,
முதுமலையில் காட்டு யானை திடீரென விரட்டியதால் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு தம்பதி தப்பி ஓடினர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து முதுமலை வழியாக கர்நாடக மாநிலம் மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதேபோல் கேரளாவில் இருந்து கூடலூர் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் சென்று வருகின்றன. இங்குள்ள முதுமலை வனப்பகுதியில் காட்டு யானைகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் இருக்கின்றன. இதனால் வனவிலங்குகள் முதுமலையை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலையை அடிக்கடி கடப்பது வழக்கமாகும். இதன் காரணமாக வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் வார விடுமுறை என்பதால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் கூடலூர் வழியாக ஊட்டிக்கு சுற்றுலா சென்று விட்டு மாலையில் சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது முதுமலை புலிகள் காப்பக சாலையோரம் காட்டு யானைகள் கூட்டமாக நின்றிருந்தன. அந்த சமயத்தில் மோட்டார் சைக்கிள்கள், கார்களில் சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் கூடலூர் வழியாக கர்நாடகாவுக்கு சென்று கொண்டிருந்தனர். சாலையோரம் நின்றிருந்த காட்டு யானை ஒன்று திடீரென வாகனங்களை விரட்டியது.
இதை கண்டு இருசக்கர வாகனத்தில் வந்த கர்நாடகாவை சேர்ந்த தம்பதி அச்சம் அடைந்தனர். தொடர்ந்து இருசக்கர வாகனத்தை நடுரோட்டில் போட்டு விட்டு தப்பி ஓடினர். இதை கண்ட வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை சாலையின் இருபுறமும் சற்று தொலைதூரத்தில் நிறுத்தினார்கள். காட்டு யானை வந்த வேகத்தில் சாலையில் கிடந்த இருசக்கர வாகனத்தை பார்த்தது. சிறிது நேரம் அங்கேயே நின்றது. பின்னர் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.
இதையடுத்து அந்த தம்பதியினர் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தங்களது ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. காட்டு யானையிடமிருந்து தம்பதியினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் முதுமலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications