Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2 தேனியில் இருக்கு.. ஆனால் கேரளா தான் என்ட்ரி பாய்ண்ட்.. வாழ்க்கையில் தவறவிடவே கூடாத இடங்கள்

Subscribe to Oneindia Tamil

தேனி : தமிழ்நாட்டில் கேரள எல்லையை ஒட்டி உள்ள தேனி மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலா தளங்கள் உள்ளன. இதில் டாப் ஸ்டேசன், கொழுக்குமலை, சதுரங்கபாறை போன்ற சில சுற்றுலா தளங்களுக்கு கேரளா வழியாக மட்டுமே போக முடியும்.

இதில் உள்ள சாந்தாம்பாறையை பற்றித்தான் இப்போது நாம் பார்க்க போகிறோம். கேரளமாநிலம் மூணாறில் இருந்து 42 கிலோ மீட்டர் தூரத்தில் பூப்பாறை அருகே உள்ள பஞ்சாயத்து கிராமம் தான் சாந்தாம்பாறை. சாந்தாம்பாறை பகுதியிலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் அழகிய சுற்றுலா தளம் தான் சதுரங்க பாறை. இந்த இடமானது தமிழ்நாட்டுக்கு சொந்த இடமாக கருதப்படுகிறது.

Kerala to Tamil Nadu tour : Have you been to kolukkumalai and Chaturangaparai in Theni?

இங்கிருந்து தமிழ்நாட்டில் உள்ள தேனி மாவட்டம் மாவட்டத்தை அப்படியே பார்க்கலாம். மலைகளை சுற்றிலும் பசுமை நிறைந்து இருக்கும். அங்கு நிறுவப்பட்ட காற்றாடிகளும் அங்கு உள்ள இயற்கை அமைப்பு கால நிலையும் பார்க்கும் சுற்றுலா பயணிகள் இந்த இடத்தை விட்டு செல்ல மனம் இல்லாமல் அங்கேயே நின்றுவிடுவார்கள்.

சதுரங்கப்பாறை: சதுரங்கப்பாறை தமிழ்நாட்டுக்கு சொந்த இடம் தான். ஆனால அங்கே சென்றடைய கேரளா எல்லைக்குள் சென்று அதன் வழியாகத்தான் செல்ல முடியும் இதன் காரணமாகவே அது சுற்றுலாத்தலமாக மாற்றப்படாமல் இருக்கிறது. அதேநேரம் ஜீப் மூலம் சபாரி செல்ல முடியும். பூம்பாறை கிராமத்தில் இருந்தும் சூரிய நெல்லியில் இருந்து ஜீப் மூலமாக போகலாம்.

பூப்பாறையில் தங்கும் விடுதிகள் உள்ளன. அங்கிருந்து சில கிலோ மீட்டர் தூரம் குமுளியை நோக்கி பயணித்தால் சாந்தாம்பாறை அருகே சதுரங்கப்பாறையை அடைய முடியும். சதுரங்கப்பாறையை நோக்கி பயணித்தால் பசுமையான பகுதிகள் நம்மை அங்கிருந்து போகவிடாது. இதன் அருகில் தான் ராமக்கல் மேடு என்ற இடமும் உள்ளது. இதுவும் சிறப்பான ஒரு இடம் ஆகும்.

Kerala to Tamil Nadu tour : Have you been to kolukkumalai and Chaturangaparai in Theni?

மீண்டும் பூப்பாறை நோக்கி வந்து சூரிய நெல்லி சென்றால், அங்கிருந்து ஜீப் மூலம் கொழுக்கு மலை போகலாம். அதுவும் தமிழ்நாட்டிற்கு சொந்தமான பகுதி தான். ஆனால் கேரளா வழியாக மட்டுமே போக முடியும். வாழ்க்கையை அனுபவிக்க விரும்புகிறவர்கள் மிஸ் பண்ணக்கூடாத இடம் என்றால் அது கொழுக்கு மலை தான். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

கொழுக்குமலை: கொழுக்குமலை கடல் மட்டத்திலிருந்து சுமார் 7130 அடி உயரத்தில் அமைந்துள்ளது மற்றும் மூணாறிலிருந்து சுமார் 32 கிமீ தொலைவில் அமைந்துள்ளது கொழுக்குமலையின் தேயிலைத் தோட்டங்கள் உலகிலேயே மிக உயரமானவைகளில் ஒன்று. இந்த இடத்தில் ஒரு இரவு தங்கி காலையில் சூர்ய உதயத்தை நீங்கள் பார்த்தால் தான், நீங்கள் இந்த உலகில் பிறந்ததற்கான அர்த்தம் தெரியும்.

அவ்வளவு அழகு. மூணாறில் இருந்து 32 கிலோமீட்டர் தூரத்தில் இந்த இடம் அமைந்துள்ளது. இங்கு அறை எடுத்து தங்க அதிக ஓட்டல்கள் இல்லை. ஒரே ஒரு தங்கும் விடுதி தான் உள்ளது. இந்த இடத்தில் புக்கிங் செய்தவர்கள் தான் தங்க முடியும். வாழ்க்கையை இயற்கையோடு வாழ விரும்புவர்கள் போய் பாருங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+