Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூரியனை பார்க்க நீங்கள் தவமே இருக்க வேண்டும்.. தேனி பக்கத்தில் அருமையான இடம்.. எப்படி போகலாம்?

Subscribe to Oneindia Tamil

தேனி: சூரியனை பார்க்க நிச்சயம் நீங்கள் தவமே இருக்க வேண்டும்.. தேனி பக்கத்தில் அருமையான இயற்கை விரும்பிகளின் சுற்றுலா தலம் இருக்கிறது. தமிழகத்தில் உள்ள இந்த இடம் தான் கேரள மக்களுக்கு மிகவும் பிடித்த இடம் ஆகும்.. உலகின் மிக உயரமான தேயிலை தோட்டமான கொழுக்குமலை தான் அந்த இடம்.

கோடை வெயில் தமிழகத்தில் மிக கடுமையாக இருக்கிறது. இப்போது ஈரோடு, கரூர், சேலம், சென்னை, மதுரை, திருநெல்வேலி, விழுப்புரம், வேலூர் உள்பட பல இடங்களில் 105, 110 டிகிரி பாரன்ஹீட் வெயில் வந்து வாட்டி வதைக்கிறது. வெயில் கொடுமையை தாங்க முடியாமல் மக்கள் பலர் ஊட்டி, கொடைக்கானலுக்கு படை எடுக்கிறார்கள். ஏனெனில் தற்போதைய சூழலில் தமிழ்நாட்டிலேயே இந்த இரண்டு கோடைவாசல் தலங்கள் மட்டுமே இரவில் குளிரையும், பகலில் வெயில் மிக குறைவாக உள்ள பகுதிகளாகும்.

Kolukkumalai near Munnar instead of Ooty and Kodaikanal Paradise on the Theni side

மற்ற எந்த சுற்றுலா தலமும் வெயிலின் கோரப்பிடியில் தப்பவில்லை.. தமிழ்நாட்டை ஒட்டியுள்ள கேரள பகுதியான மூணாறில் கூட வெயில் கடுமையாக உள்ளது. சேலம் ஏற்காடு, வேலூர் ஏலகிரி என எந்த ஊரும் தப்பவில்லை. அதேநேரம் மரங்கள் அதிக அளவில் உள்ளதால், மூணாறு, ஏற்காடு, மேகமலை போன்ற சுற்றுலா தலங்கள் ஓரளவு வெயிலின் படியில் இருந்து தப்பி உள்ளன.

தற்போதைய நிலையில் கொடைக்கானல், ஊட்டி செல்வது என்பது சவாலான காரியம் ஆகும். அங்கு தங்கி சுற்றிபார்க்க வேண்டுமானால் பெரிய அளவில் கூட்டம் இருக்கும். அதேநேரம் ஊட்டி, கொடைக்கானலுக்கு பதில் வேறு ஏதாவது இடம் ஊட்டி, கொடைக்கானலுக்கு நிகரான குறைந்த வெப்பநிலை உள்ள பகுதி உள்ளதா என்று தேடிக்கொண்டிருக்கிறார்கள் மக்கள். அவர்களுக்கான இடம் தான் தேனி மாவட்டத்தில் உள்ள கொழுக்குமலை... இது தேனி மாவட்டத்தில் இருந்தாலும், இந்த இடம் தான் மூணாறின் இதயமாகும்.. மூணாறு சுற்றுலா செல்வோர் மிஸ் பண்ணவே மாட்டார்கள்..

தமிழ்நாட்டில் உள்ள பகுதி என்றாலும், நேரடியாக தமிழகத்தின் வழியாக போய்விட முடியாது. கேரளாவின் சூரியாநெல்லி வழியாக மட்டுமே போக முடியும். போடிமெட்டில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சூரியநெல்லி செல்ல வேண்டும். அங்கிருந்து தான் கொழுக்குமலைக்கு பயணிக்க முடியும். கொழுக்குமலையில் சூர்ய உதயம் தான் மிகவும் பிரபலம். கொழுக்குமலையில் சூரிய உதயத்தை காண தவமே இருக்க வேண்டும். சூரியநெல்லி சென்றால் அங்கு ஏரளமான தங்கும் விடுதிகள் உள்ளன. அங்கு தங்கியிருந்து அதிகாலை எழுந்து ஜீப்பில் சூரிய உதயத்தை காண செல்லலாம்.

அதேநேரம் சூர்யநெல்லியிலிருந்து கொழுக்குமலைக்குச் செல்ல வேண்டுமென்றால் தனியார் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஜீப்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. ஒரு ஜீப்பில் 6 பேர் வரை பயணம் செய்ய அனுமதி தருகிறார்கள். ஜீப்பின் வாடகை 2,000 ரூபாய். அத்தொகையில் 300 ரூபாய் நுழைவுக் கட்டணமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. மீதமுள்ள 1,700 ரூபாய் ஜீப் டிரைவருக்கு வழங்கப்படுகிறது.

நீங்கள் கொழுக்குமலை செல்ல வேண்டும் என்றால், சூர்யநெல்லியில் இருக்கும் இடுக்கி மாவட்ட சுற்றுலாத்துறையின் பதிவு அலுவலகத்திற்கு போக வேண்டும். அங்கு தரப்படும் விண்ணப்பத்தில் நம் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்டவற்றை எழுதி பூர்த்தி செய்ய வேண்டும். கொழுக்குமலைக்கு 160 ஜீப்கள் தினசரி சென்று வருகின்றன. சாலைகள் சூரியா நெல்லியில் இருந்து கொழுக்குமலை வரை மிகவும் மோசமாக இருக்கும். சூர்யநெல்லியிலிருந்து கொழுக்குமலை 12 கிலோமீட்டர் தொலைவு ஆகும்.

கொழுக்குமலை சிங்கப்பாறையில் சூரிய உதயத்தைப் பார்க்க விரும்புவோர் அதிகாலை 4.30 - 5.30 மணிக்கெல்லாம் ஜீப்பில் செல்ல வேண்டும். அப்படி செல்ல முடியாது, கொழுக்குமலையிலேயே தங்க வேண்டும். அங்கு தங்கி சுற்றி பார்க்க வேண்டும் என்றால், அங்குள்ள டெண்ட் கேப்பிற்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும். சூரியா நெல்லியில் இருந்து அதிகாலை கிளம்பி கொழுக்குமலை வந்தால், அங்குள்ள அடிவாரத்தில் இறங்கிவிடுவார்கள். அங்கிருந்து சிறிது தூரம் மலையேற்றம் செய்து உச்சியை அடைந்தால் குரங்கணி, மூணாறு டாப் ஸ்டேஷன், போடி மெட்டு போன்ற இடங்களை பார்க்க முடியும். அங்குதான் சூரிய உதயத்தையும் காண முடியும். அங்குள்ள சிங்கப்பாறையில் அதிகாலையில் சூரிய உதயம் பார்ப்பது என்பது அற்புதமான அனுபவம் ஆகும். 16 முதல் 18 டிகிரி அளவில் நல்ல குளிர் இருக்கும்.

கொழுக்கு மலையில் உலகின் மிக உயரத்தில் அமைந்துள்ள பழைமையான தேயிலை தொழிற்சாலை செயல்படுகிறது. அதற்கு நுழைவுக்கட்டணம் மட்டுமே 900 ரூபாய் ஆகும்.. கொழுக்குமலையில் வெப்பநிலை எப்படி இருக்கும் என்றால், கொடைக்கானலை விட கொஞ்சம் அதிகமாக இருக்கும். பகலில் அதிகபட்சமாக தற்போது 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் இரவில் 16 டிகிரி செல்சியஸ் என்கிற அளவில் குளிராக இருக்கும். கிட்டத்தட்ட கொடைக்கானலுக்கு நிகரான கிளைமேட் இருக்கும். ஆனால் இங்கு மரங்கள் அதிகம் என்பதால் கொடைக்கானலை விட கடுமையான குளிரடிக்கும்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+