குற்றலாம் சீசன் 2023: சுற்றுலா பயணிகளே உஷாரா இருங்க.. உங்களுக்கு முக்கியமான அப்டேட்
தென்காசி: தென்மேற்கு பருவ மழை இப்போது தான் கேரளாவில் தொடங்கி உள்ளது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து வரத்தொடங்கி உள்ளது. இந்த வருடம் விரைவில் சீசன் களைகட்டும் என்ற எதிர்பார்பபு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவியில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களைகட்டும். இதனை அனுபவிக்க இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள். இந்த மூன்று மாதமும் குற்றாலத்தில் இதமான கிளைமேட் நிலவும். நல்ல குளிர், அடிக்கடி மழை, இயற்கை வனம், அதேநேரம் அவ்வப்போது வெயில் என பார்க்கவே ரம்மியமாக இருக்கும்.

நன்றாக கறி விருந்து சாப்பாட்டுடன், மூன்று நேரமும் மக்கள் குளித்து மகிழ்வார்கள், இரவில் கூட மக்கள் அருவிகளில் உற்சாகமாக குளிப்பார்கள். 24 மணி நேரமும் குற்றால அருவிகளில் மக்கள் கூட்டம் அலை மோதும்.
கடந்த 2020, 2021, ஆகிய வருடங்களுக்கும் மேலாக கொரோனா தொற்று காரணமாக சுற்றுலாத் தலமான குற்றால அருவிகளில், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை இருந்தது. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர் மேலும் இதனை நம்பி இருந்த வியாபாரிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2021 டிசம்பருக்கு பிறகு தான் நிலைமை சரியானது. 2022ல் சீசன் ஓரளவு சிறப்பானதாக இருந்தது. இந்த ஆண்டு இன்னமும் முழுமையாக சீசன் தொடங்க்வில்லை. கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நீரின்றி வறண்டு காணப்பட்டது.
இந்தநிலையில் தென்மேற்கு பருவமழை கேரளாவில் மிகத்தாமதமாகவே தொடங்கி உள்ளது. தனைத் தொடர்ந்து மலைப்பகுதியில் சாரல் மழை தான் பெய்து வருகிறது. பிரதான அருவி, குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் நீர்வரத்து சரிவர இல்லை. அதேநேரம் எப்போது வேண்டுமானாலும் குற்றாலத்தில் சீசன் ஆரம்பிக்க வாய்ப்பு உள்ளது.

இந்த வாரத்திற்குள் குற்றாலத்தில் நல்ல மழை பெய்து சீசன் களை கட்ட தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனிடையே குற்றாலத்தில் சீசன் துவங்கிவிட்டதாக வீடியோ ஒன்று வெளியானது. இந்த வீடியோவை தொடர்ந்து பலர் குற்றாலத்திற்கு வர முயற்சி செய்கிறார்கள். உண்மையில் குற்றாலத்தில் சீசன் இன்னமும் தொடங்கவில்லை.
ஜூன் மாதம் 10 நாட்களுக்கு மேலாகியும் குற்றாலத்தில் சீசன் துவங்காத போதிலும் கடந்த சில தினங்களாக குற்றாலம் பகுதியில் அதிகளவில் காற்று வீசுகிறது. கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு பெய்த சாரல் மழை காரணமாக பாறைகளாக காட்சியளித்து வந்த குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் விழ தொடங்கி உள்ளது. ஐந்தருவியில் 4 கிளைகளிலும், மெயின் அருவியில் ஓரமாகவும் தண்ணீர் விழுகிறது. ஆனால தண்ணீர் குளிக்கும் அளவிற்கு இல்லை என்று தகவல்கள் வருகின்றன.
இதனிடையே வெயில் அடித்தாலும் குளிர்ந்த காற்று வீசி வருவதால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை நீடிக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால் மேலும் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்தும் விரைவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

குற்றால அருவிகள் எத்தனை உள்ளது என்பதையும் இந்த பதிவில் பார்ப்போம்:
பேரருவி - மெயின் அல்லது பெரிய குற்றால அருவி என்று அழைப்பார்கள். 288 அடி உயரத்தில் இருந்து பொங்குமாங்கடல் என்ற ஆழமான ஒரு துறையில் விழுந்து பொங்கி பரந்து விரிந்து கீழே விழுகிறது.
சிற்றருவி - இது நடந்து செல்லும் தூரத்தில் பேரருவிக்கு மேல் அமைந்துள்ளது.
செண்பகாதேவி அருவி - பேரருவியில் இருந்து மலையில் 2 கிமீ தூரம் நடைப்பயணத்தில் செண்பகாதேவி அருவியை அடையலாம். இந்த அருவி தேனருவியிலிருந்து இரண்டரை கி.மீ. கீழ்நோக்கி ஆறாக ஓடி வந்து 30 அடி உயரத்தில் அருவியாக விழுகிறது. அருவிக்கரையில் செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது. சித்ரா பவுர்ணமி நாளில் இந்த கோவிலில் சிறப்பான விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
தேனருவி - செண்பகாதேவி அருவியின் மேல் காணப்படுகிறது. இந்த அருவி அருகே பல தேன்கூடுகள் அமைந்துள்ளதால் இந்த இடம் அபாயகரமானது. இந்த அருவிக்கு சென்று குளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
ஐந்தருவி - குற்றாலத்தில் இருந்து சுமார் 5கிமீ தூரத்தில் உள்ளது. திரிகூடமலையின் உச்சியில் இருந்து 40 அடி உயரத்திலிருந்து உருவாகி சிற்றாற்றின் வழியாக ஓடிவந்து 5 கிளைகளாக பிரிந்து விழுகிறது. இதில் பெண்கள் குளிக்க ஒரு அருவி கிளைகளும், ஆண்கள் குழந்தைகளுக்கு 3 கிளைகளும் உள்ளன. இங்கு சபரிமலை சாஸ்தா கோயிலும், முருகன் கோயிலும் அமைந்துள்ளது.
பழத்தோட்ட அருவி (வி.ஐ.பி. பால்ஸ்) -இது ஐந்தருவியில் இருந்து 3 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும்தான் குளிக்க அனுமதி தருகிறார்கள்.
புலியருவி -குற்றாலத்தில் இருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
பழைய குற்றாலம் அருவி - குற்றாலத்தில் இருந்து கிழக்கு பகுதியில் 15 கிமீ தொலைவில் அழகனாறு நதியில் அமைந்துள்ளது.
பாலருவி - இது தேனருவி அருகே அமைந்துள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications