பிறந்தால் கன்னியாகுமரியில் பிறக்கனும், வாழ்ந்தால் நாகர்கோவிலில் வாழனும்.. அற்புதமான சுற்றுலா தலங்கள்
கன்னியாகுமரி: தமிழ்நாட்டில் கடலும், மலையும் உள்ள ஒரே மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம் தான். கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான அகத்தியர் மலைத்தொடர் இருக்கிது. அதே சமயம், கன்னியாகுமரியில் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வங்காள விரிகுடா, அரபிக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகிய மூன்று கடல்களும் ஒரே இடத்தில் சங்கமிக்கின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலா தலங்கள் பற்றி பார்ப்போம்.
பிறந்தால் கன்னியாகுமரியில் பிறக்கனும்.. வாழ்ந்தால் நாகர்கோவிலும் வாழனும் என்று ஏங்க வைக்கும் அளவிற்கு கன்னியாகுமரி அதிசயம் நிறைந்த சர்வதேச சுற்றுலா தலங்கள் உள்ள சிறிய மாவட்டம் ஆகும். தமிழ்நாட்டில் இருந்தாலும் கேரளாவை போல் அள்ள அள்ள குறையாத இயற்கை வளங்கள் உள்ள மாவட்டம். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், என ஐந்து வகை நிலமும் உள்ள மாவட்டம் என்று கூறலாம். ஆனால் பாலை நிலம் மட்டும் இருப்பதாக கூற முடியாது. அதாவது வறண்ட நிலமே இல்லை. அவ்வளவு பசுமையான மாவட்டம்.

முக்கடல் சந்திப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தரை கன்னியாகுமரி முக்கடல் சந்திக்கும் கடற்கரை, திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிப்பாலம், பத்மநாபபுரம் அரண்மனை,உலக்கை அருவி என பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. கன்னியாகுமரி சென்றால் மூன்று கடல்களின் சங்கமத்தைக் காணலாம். கன்னியாகுமரி வரும் சுற்றுலாப் பயணிகள் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் ஆகியவற்றைக் காண பெரிதும் விரும்புவார்கள். கடற்கரைக்கு அருகில் உள்ள கலங்கரை விளக்கத்தில் கடற்கரையின் அழகை முழுமையாகக் காண முடியும்.

விவேகானந்தர் பாறை
விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையும் இன்றும் பிரம்மிப்பை தரும். கடலுக்குள் அமைந்துள்ள ஒரு பாறை மீது விவேகானந்தர் பாறை நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. அதைச் சுற்றி, 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளது. படகுப் பயணம் மூலம் இங்குச் சென்று இந்த நினைவுச் சின்னங்களை ரசிக்கலாமல் கன்னியாகுமரி சுற்றுலா முழுமையடையாது. கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபம் சூரிய ஒளி படும் விதமாக ஒரு சிறப்பு அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலை கடற்கரைக்கு வரும் அனைவரும் செல்வார்கள்.
திருநந்திக்கரை குகைக் கோயில்
கன்னியாகுமரியிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருநந்திக்கரை குகைக் கோயிலில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சிற்பங்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடிக்கும்.
பத்மநாபபுரம் அரண்மனை
கன்னியாகுமரியிலிருந்து சுமார் 64 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த அரண்மனை, திருவிதாங்கூர் மன்னர்களின் முன்னாள் தலைநகராக இருந்து வந்தது. இது கேரள கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது. இந்த அரண்மனை காண்போரை திகைப்பில் ஆழ்த்தும்

திருபரப்பு நீர்வீழ்ச்சி
கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குதொடர்ச்சி மலையில் கோதையாற்றின் கரையில் அமைந்துள்ள திருபரப்பு நீர்வீழ்ச்சி புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு குளிக்காமல் போனால் கன்னியாகுமரி வருவதே வீண் என்று தோன்றும். அந்த அளவிற்கு அழகான இடம் ஆகும்.
மாத்தூர் தொட்டிப்பாலம்
இது ஆசியாவிலேயே மிகப்பெரிய தொட்டிப்பாலம் ஆகும். இது கன்னியாகுமரியிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த தொட்டிப்பாலம் அருவி கிடையாது. ஆனால் அருவிக்கு நிகரான பிரம்மிப்பை தரும். ஒரு மலைக்கும் மற்றொரு மலைக்கும் இடையே கட்டப்பட்டு, தண்ணீர் கொண்டு செல்லும் பாலமாக இருக்கிறது.இந்த பாலத்தில் குளிப்பதை பலரும் விரும்புகிறார்கள்.
உலக்கை அருவி
நாகர்கோவிலில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவிலும், அழகியபாண்டியபுரம் ஊரில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ள அருவி உலக்கை அருவி. இந்த அருவிக்கு அடர்ந்த காடு இடையே குறுகலான பாதை வழியாக போக முடீயும்.போகும் வழியில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை பசேல் என காட்சி அளிக்கும் பசுமை மாறாத காடுகள் இருக்கும். வெள்ளியை உருக்கியது போல் இயற்கையாக உருவான இந்த அருவியில் ஆண்டு முழுவதும் குளிர்ந்த தண்ணீர் கொட்டும். இந்த தண்ணீர் மலையில் இருந்து வருவதால் அதில் குளிக்கும் போது மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்வு ஏற்படும்.

காளிகேசம் அருவி
இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் பசுமை சூழலில் அமைந்துள்ள மற்றொரு சுற்றுலாத்தலம் காளிகேசம். இது பூதப்பாண்டியில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது. இங்கு குளிர்ந்த நீருடன் ஓடும் காட்டாற்றில் குளிப்பதை இயற்கை விரும்பிகள் பெரிதும் விரும்புகிறார்கள். அடர்ந்த காடுகள் மற்றும் பசுமையின் பின்னணியில் பாறைகளில் இருந்து தண்ணீர் ரம்மியாக வரும். இங்கு ஆற்றின் கரையில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இவர்கள் அங்குள்ள ஆற்றில் புனித நீராடி அம்மனை வழிபடுவார்கள். இந்த கோவிலுக்கு காட்டாற்றை கடந்து தான் செல்ல வேண்டும். மழைக்காலங்களில் காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு வரும் போது கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். உலக்கை அருவி, காளிகேசம் ஆகிய இரண்டு இடங்களுக்கு செல்ல வேண்டும் எனில் வனத்துறையின் அனுமதி வேண்டும்.
வட்டப்பாறை அருவி
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீரிப்பாறை வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி, அமைதியான சூழலை விரும்புபவர்களுக்கு ஏற்ற இடமாக பார்க்கப்படுகிறது.இங்கு சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைவாக இருக்கும் என்பதால், இயற்கையை ரசிக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வு என்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டமே இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டம் என்பதால், மொத்த மாவட்டத்தையும் இரண்டு நாள் இருந்து அழகாக சுற்றி பார்த்து வரலாம்.. அப்படியே இறுதியாக திருவனந்தபுரம் தேசிய பூங்கா சென்று வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவை போல் ரசித்துவிட்டு திரும்பலாம்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications