Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடேங்கப்பா.. சுற்றுலாவில் கெத்து காட்டும் மதுரை.. குவியும் வெளிநாட்டினர்.. இத்தனை கோடி பேரா!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் உள்ள சுற்றுலாத்தலங்களை பார்க்க வருவோரின் எண்ணிக்கை 2.75 கோடியை கடந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதில் தேசிய அளவில் மட்டும் 2.74 கோடி பேரும், வெளிநாடுகளில் இருந்து வருவோரின் எண்ணிக்கை சுமார் 1 லட்சமாக உயர்ந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இதனால் மதுரை இந்தியாவின் முக்கிய சுற்றுலாத்தளங்களில் ஒன்றாக முன்னேறி இருக்கிறது.

மதுரை சித்திரைத் திருவிழா கொண்டாட்டமாக முடிவடைந்துள்ள நிலையில், அதன் பேச்சும், பரபரப்பும் இன்னும் அடங்கவில்லை. அதேபோல் இந்த சித்திரை திருவிழாவை பார்க்க கூடுதலாகவே வெளிநாட்டினர் பலரும் குவிந்திருந்தனர். மதுரை மீனாட்சியம்மன் கோயில், அழகர் கோயில், திருப்பரங்குன்றம், சுவாமி மலை என்று கோயில் நகரமாகவும், திருவிழா நகரமாகவும் அமைந்துள்ளது.

2 74 Crores Domestic and 1 Lakh Foreign tourist arrivals Madurai and City shines as a top tourist spot

அதேபோல் கீழடி அருங்காட்சியகம், தெப்பக்குளம், பழங்கால தெருக்கள், ஆர்ட்-கள் என்று பழமையான நகராகவும் அமைந்துள்ளது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2022, 2023 ஆகிய ஆண்டுகளை விடவும் 2024ஆம் ஆண்டு அதிகளவில் சுற்றுலா செல்வோர் மதுரைக்கு வந்திருப்பது தெரிய வந்துள்ளது.

அதன்படி 2022ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து 50 ஆயிரம் பேரும், தேசிய அளவில் 2 கோடி அளவிலும் மதுரைக்கு, ராமேஸ்வரம், கன்னியாகுமரி நகரங்களுக்கு சுற்றுலா வந்திருக்கின்றனர். இதன் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து வருவோர் 57 ஆயிரமாகவும், தேசிய அளவில் 2.5 கோடியாகவும் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் 2024ஆம் ஆண்டில் வெளிநாட்டில் இருந்து வருவோர் எண்ணிக்கை 98,770 ஆகவும், தேசிய அளவில் 2.74 கோடியாகவும் உயர்ந்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து வரும் பலரும் மீனாட்சியம்மன் கோவில், ஜல்லிக்கட்டு அரங்கம், கீழடி அருங்காட்சியம், திருமலை நாயக்கர் மகால், காந்தி அருங்காட்சியகம் உள்ளிட்டவற்றை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவில் இருந்து மதுரைக்கு அதிகளவில் சுற்றுலா வருகின்றனர். அதேபோல் வடமாநிலங்களை பொறுத்தவரை மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

மதுரையின் உணவுகளை அதிகளவில் ருசிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேபோல் மதுரையில் இருந்து ராமேஸ்வரம், கன்னியாகுமரி, கொடைக்கானல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்வதும் எளிதாக அமைகிறது. இதனால் தென் மாவட்டங்களுக்கு சுற்றுலா செல்வதற்கு மதுரை சிறந்த கேபிட்டல் மாவட்டமாகவும் அமைந்துள்ளது. இதனால் வரும் நாட்களில் சுற்றுலாவை மேம்படுத்த தமிழக அரசு கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சில கோரிக்கைகள் எழுந்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+