மாலத்தீவு vs லட்சத்தீவு.. எங்கு சுற்றுலாவுக்கு செல்வது ஈஸி.. எவ்வளவு செலவாகும்? உண்மையில் எது பெஸ்ட்
டெல்லி: மாலத்தீவு சர்ச்சையைத் தொடர்ந்து இப்போது பலரும் லட்சத்தீவுக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். இரண்டிற்கும் என்ன வித்தியாசம்.. எது பெஸ்ட் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
மாலத்தீவைச் சேர்ந்த அமைச்சர்கள் பதிவிட்ட சில ட்வீட்களை மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. மாலத்தீவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்த இந்தியர்கள் பலரும் தங்கள் புக்கிங்களை கேன்சல் செய்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து தான் மாலத்தீவுக்கு அதிகபட்ச சுற்றுலாப் பயணிகள் செல்கிறார்கள். இதனால் மாலத்தீவு பொருளாதாரத்திற்கே இது மிகப் பெரிய அடியாக மாறியது.

மாலத்தீவு vs லட்சத்தீவு: அதேநேரம் இப்போது இந்தியர்கள் பலரது பார்வையும் மாலத்தீவு பக்கம் திரும்பியுள்ளது. இந்தியர்கள் பலரும் இப்போது அரபிக்கடலில் அமைந்துள்ள மாலத்தீவுக்குச் செல்ல விருப்பம் காட்டி வருகின்றனர். அதேநேரம் மாலத்தீவில் இருக்கும் உட்கட்டமைப்பு என்பது லட்சத்தீவுக்கு இணையாக இருக்காது. ஆனால், நாம் நினைத்தால் கொஞ்சக் காலத்திலேயே மாலத்தீவுக்கு இணையான உட்கட்டமைப்பை ஏற்படுத்த முடியும். அதற்கு முன்பு இப்போது இரு தீவுகள் குறித்தும் நாம் பார்க்கலாம்.
இந்தியர்கள், குறிப்பாகப் புதிதாகத் திருமணமானவர்கள் பல காரணங்கள் உள்ளன, அங்கே இருக்கும் தனிமையான எந்தவொரு வெளியுலக தொந்தரவும் இல்லாத ரிசார்ட்கள், விசா தேவை இல்லை மற்றும் குறுகிய விமான பயணம். இந்த மூன்றும் தான் இந்தியர்கள் மாலத்தீவுக்கு விரும்பி செல்ல காரணமாக இருக்கிறது. இப்போது மாலத்தீவு அரசு இந்தியர்களைத் தாண்டி ஐரோப்பியர்களை அதிகம் ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
மாலத்தீவு: ஐரோப்பியர்களை ஈர்க்க முயன்றாலும் இந்தியச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அவர்களால் மேட்ச் செய்ய முடியாது. இந்தியா அளவுக்குச் சீனாவால் மட்டுமே சுற்றுலாப் பயணிகளை அனுப்ப முடியும். ஐரோப்பியர்கள் தற்போது விரும்பி செல்லும் இடங்களாக சீஷெல்ஸ் மற்றும் மொரிஷியஸ் உள்ளன. இந்த நாடுகளைக் காட்டிலும் அதிக சலுகைகளை வழங்கினால் மட்டுமே ஐரோப்பியர்களை மாலத்தீவால் கவர முடியும்.
விமானச் சேவை: கடந்த ஆண்டு மட்டும் 2 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் மாலத்தீவுக்குச் சென்றுள்ளனர். இது மாலத்தீவுக்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளில் 11% ஆகும். விமானங்கள் என்று வரும் போது மாலத்தீவில் இருந்து ஒரு வாரத்திற்கு 325 சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகிறது. இண்டிகோ, கத்தார் ஏர்வேஸ் எனப் பல விமானச் சேவை உள்ளன.
இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே வாரத்திற்கு 58 விமானங்கள் உள்ளன, நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும் மாலத்தீவுக்கு நாம் சென்றடைய முடியும். நேரடியாக இல்லையென்றாலும் கனெக்ஷன் விமானம் மூலம் அங்கே சென்று சேரலாம்.
லட்சத்தீவு: இப்போது நாம் லட்சத்தீவுக்கு வருவோம். லட்சத்தீவுக்கு செல்ல விமானச் சேவை ரொம்பவே மோசமாக இருக்கிறது. தற்போது அலையன்ஸ் ஏர் என்ற நிறுவனம் மட்டுமே விமானச் சேவையை வழங்குகிறது. அதுவும் கொச்சியில் இருந்து மட்டுமே... இந்த ATR 72-600 விமானத்தில் மொத்தம் இருப்பதே 19 சீட்கள் தான். எனவே, இதில் டிக்கெட் புக் செய்வது கடினம்தான். லட்சத்தீவு சுற்றுலாவை மேம்படுத்த அதன் விமானச் சேவையை நாம் உடனடியாக மேம்படுத்தியே தீர வேண்டும்.
மாலத்தீவுக்கு இந்தியர்கள் செல்ல விரும்பினாலும் கூட விமானச் சேவை தொடங்கிப் பல நாம் பல விஷயங்களில் உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டி உள்ளது. மேலும், சுற்றுலாப் பயணியின் பார்வையில் குறைந்த செலவில் எங்கே அதிகம் சுற்றிப் பார்க்கலாம் என்பதையும் பார்ப்பார்கள். மாலத்தீவுக்குச் செல்லும் விமான டிக்கெட் குறைவாக இருந்தாலும், அங்கே சொகுசு விடுதிகள் விலை ரொம்பவே அதிகம். எனவே, மாலத்தீவு செல்ல சற்று அதிகமாகவே செலவாகும்.
உட்கட்டமைப்பு தேவை: லட்சத்தீவு மிகச் சிறந்த சுற்றுலா சொர்க பூமியாக மாறும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், அதற்கு முன்பு நாம் அங்கே பல உட்கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். அப்போது தான் மாலத்தீவு மட்டுமின்றி பல சர்வதேச சுற்றுலாத் தலங்களுடன் நம்மால் போட்டிப்போட முடியும்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications