ஆஹா! மைசூர் டூ கடலூர் வரை விரைவு ரயில்.. கோடை காலத்தில் சூப்பர் அறிவிப்பு.. மாஸ் ரயில்வே !
திருச்சி: திருச்சியிலிருந்து பெங்களூரு, சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்க ரயில் வாரியத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம். மேலும் மைசூா் - சென்னை விரைவு ரயில் கடலூா் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் எம்.எஸ். அன்பழகன் தெரிவித்தார்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் மேலும் கூறியது: பிரதமா் நரேந்திர மோடி வரும் 12 ஆம் தேதி காணொலி மூலம் தேசியளவில் ரூ. 89 ஆயிரம் கோடியிலான ரயில்வே உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கிவைத்து, புதிய வந்தே பாரத் ரயில்கள், ஒரு பொருள் ஒரு ரயில் நிலைய கடைகள், புதிய குட்ஷெட்டுகள் ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்.

இதில் திருச்சி கோட்டத்தில் 44 ரயில் நிலையங்களில் 60 ஒரு பொருள் ஒரு ரயில் நிலைய விற்பனைக் கடைகள், பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டியில் தலா ரூ. 7 கோடியில் கட்டப்பட்ட குட்ஷெட்டுகள், திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் மக்கள் மருந்தகம் ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்.
திருச்சி கோட்டத்தில் கூடுதலாக 33 ஒரு நிலையம் ஒரு தயாரிப்புக் கடைகள் அமைக்க இடம் தோ்வு நடைபெறுகிறது. திருச்சியிலிருந்து பெங்களூரு, சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்க ரயில் வாரியத்திடம் கேட்டுள்ளோம். மைசூா் - சென்னை விரைவு ரயில் கடலூா் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக 2 மெமு ரயில்கள், ஏற்கெனவே ஓடிய சில ரயில்களை மீண்டும் இயக்கக் கேட்டுள்ளோம்.
ரயில்வே வாரியம் உரிய முடிவெடுத்து அறிவிக்கும் என நம்புகிறோம். திருச்சி கோட்டத்தில் அனைத்து ரயில் நிலையங்களிலும் யுபிஐ மூலம் பணம் செலுத்தி டிக்கெட் எடுக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் இந்த வசதி இல்லையெனப் புகாரளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
பேட்டியின் போது முதுநிலைக் கோட்ட வணிக மேலாளா் ஐ. செந்தில்குமாா், முதுநிலைக் கோட்ட தொலைத்தொடா்பு மேலாளா் இரப்பா பிருக்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா். மைசூர் முதல் கடலூர் வரை 449 கி.மீ தூரத்தில் உள்ளது. இதற்காகும் பயண நேரம் 9 மணி நேரம் ஆகும்.
தற்போது கோடை விடுமுறை தொடங்கவுள்ள நிலையில் ரயில்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்பதால் ரயில்வே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் மக்களும் எந்த சிரமமும் இன்றி கோடையை கழிப்பர், ரயில்வேக்கு நல்ல வருமானம் கிடைக்கும். கடலூர், அந்த வழித்தடங்களில் உள்ளவர்கள் மைசூருக்கு சென்று அங்கு மைசூர் அரண்மனை, சாமுண்டி மலைத் தொடர்கள், ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம், மணற்கலை அருங்காட்சியகம், லலிதா மஹால் பேலஸ் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று கோடை விடுமுறையை குதூகலமாக்கலாம்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications