ஊட்டி, கொடைக்கானல் இல்லாமல்.. புதுமணத் தம்பதிகள் டிசம்பரில் ஹனிமூன் செல்ல சூப்பர் இடங்கள்
சென்னை: தேன் நிலவு தம்பதிகள் அல்லது புதுமணத் தம்பதிகள் டிசம்பர் மாதம் சுற்றுலா போக சிறந்த இடங்களை பற்றி இந்த பதிவில் நாம் பார்ப்போம்.
பொதுவாக நம்ம ஊர்களில் ஹனிமூன் என்றாலே ஊட்டி, கொடைக்கானல் தான் பரிந்துரைப்பார்கள். இது சிறந்த இடங்கள் என்றாலும், இந்த இடங்களுக்கு பலரும் போய் இருப்பார்கள். போகாத சில இடங்களை இதில் பார்ப்போம்.

முதலில் நாம் பார்க்க போவது ஏற்காடு: ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடுதான் பரிந்துரை செய்ய விரும்பும் முதல் இடம். இந்த இடம் டிசம்பர் மாதத்தில் புதுமணத் தம்பதிகளும், காதலர்களும் தேன்நிலவு செல்வதற்கு சிறந்த இடமாக உள்ள. ஏற்காட்டில் உள்ள பசுமையான பள்ளத்தாக்குகள், நிலப்பரப்புகள் , பறவைகள், அமைதியான சாலை, பார்க்கவே ரம்மியமாக இருக்கும். கொடைக்கானல், ஊட்டி மூலம் கடுமையான குளிர் இருக்காது. அதே நேரம் மிக இதமான குளிர்கால நிலை இருக்கும். இந்த இடம் டிசம்பரில் ஹனிமூன் செல்வோருக்கு சிறந்த இடம் ஆகும். சேலத்தில் இருந்து வெறும் 30 கிமீ தூரத்தில் இருக்கிறது.

அடுத்தாக நாம் பார்க்க போகும் இடம் மூணாறு.. ஏற்காட்டை ஒப்பிடும் போது இந்த இடம் குளிர் அதிகமாக இருக்கும். ஆனால் பெரிய அளவில் மழை பாதிப்பு இருக்காது. கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளாவில் உள்ள மக்களுக்கு மூணாறு தான் சொர்க்ம். ஆஹா என்பார்கள் அடடா என்பார்கள் மூணாறை பார்த்த எல்லோரும்.. இரண்டு நாட்கள் தங்கி சுற்றினாலே உங்களை இதயத்தையே சொக்க வைத்துவிடும். மிகப்பெரிய ஆடம்பரமான ரிசார்ட்டுகள், தேயிலை தோட்டங்கள், ஏரிகள் காதல் ஜோடிகளுக்கு விருந்தாக இருக்கும். தமிழ் நாட்டின் தேனியில் இருந்து 75 கிமீ தூரத்தில் இருக்கிறது. உடுமலைப்பேட்டை வழியாகவும் வரலாம். அப்படி வந்தால் 86 கிமீ வர வேண்டும். இரு சக்கர வாகனத்தில் அல்லது எந்தநேரமும் மூணாறு செல்ல விரும்புவோர் தேனி வழியாக மூணாறு வருவதே சிறந்தது.

அடுத்தாக நாம் பார்க்க போகும் இடம் வாகமன்.. தேன்நிலவு தம்பதிகளுக்கு வானம் தொடும் மலைகளும், ஆழம் அறியா பள்ளத்தாக்குகளும்தான் நிச்சயம் புது அனுபவத்தை தரும். மொத்த கேரளாவையும் சின்ன சின்னதாய் வியூபாய்ண்ட் மூலம் பார்க்கலாம். மிக குளிராக இருக்கும். பல சினிமா இயக்குனர்களுக்கு பிடித்த ஸ்பாட் என்றால் அது வாகமன் தான். இங்கு டிரக்கிங் சென்றால் அற்புதமான அனுபவமாக இருக்கும்.
அக்கம் பக்கம் யாருமில்லா அருவி வேண்டும் என்று ஆசைப்பட்டால் வாகமன் அருவிக்கு போகலாம். அற்புதமான இடத்திற்கு டிரக்கிங் செய்து தான் போக வேண்டும். உச்சிப் பாறைகள், பச்சைத் தாவரங்கள், நீரோடைகள் என எல்லா இடமும் தம்பதிகளுக்கு பிடிக்கும். தமிழ்நாட்டில் உள்ளவர்கள் வாகமன் செல்ல ஒரே வழி தேனி தான். தேனியில் இருந்து கம்பம், குமுளி (தேக்கடி) சென்று அப்படியே 45 கிமீ தூரத்தில் வாகமனை அடையாலாம். விரும்பினால் போகும் வழியில் ஒரு நாள் தேக்கடியிலும் தங்கி சுற்றி பார்க்கலாம். தேக்கடியும் மிக அற்புதமான சுற்றுலாத் தலம் ஆகும்.
நான் சொன்ன இந்த மூன்று இடங்களுக்குமே டிசம்பரில் போனால் பெரிய அளவில் சிக்கல் இருக்காது. பட்ஜெட்டும் குறைவாகவே ஆகும். லாட்ஜ் வாடகை, சுற்றிப்பார்க்க வாகனங்களின் கட்டணம் எல்லாமே சீசனை விட குறைவாகவே இருக்கும். வாகன நெரிசல் இல்லாமல், மக்கள் பெரிய அளவில் வராமல் அமைதியாக இடங்களை சுற்றிபார்க்க மேற்கண்ட இடங்கள் சிறப்பாக இருக்கும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications