ஊட்டியை விடுங்க.. கொடைக்கானல் இன்னைக்கு எப்படி இருக்கு தெரியுமா? மிரள வைத்த வீடியோ
கொடைக்கானல்: கொள்ளை அழகு கொண்ட கொடைக்கானலை சுற்றி பார்க்க இரண்டு கண்கள் போதாது.. இப்போது கொடைக்கானல் மிக அருமையான கால நிலையும், பனிமூட்டமும் மழையும் உங்களை மெய் சிலிர்க்க வைக்கும். இந்த வீடியோவை பாருங்கள் எவ்வளவு அழகாக கொடைக்கானல் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும்.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அருமையான நகரம் கொடைக்கானல்.. இந்த கொடைக்கானல் நகரத்தை பற்றி வார்த்தைகளால் சொல்வதை விட அங்கு போய் பார்த்து அதை உணர்ந்தவர்களிடம் கேட்பது நன்றாக இருக்கும்.. தமிழ்நாட்டின் மிகப் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் கொடைக்கானல் முக்கியமான இடத்தில் இருக்கிறது..

எங்கும் பசுமையான காடுகளும் எங்குமே பார்க்க முடியாத சில அற்புதங்களும் ஒன்றாக இருக்கும் ஒரே இடம் என்றால் அது கொடைக்கானல் தான்.. கொடைக்கானலில் தான் செயற்கையாக உருவாக்கப்பட்ட நட்சத்திர ஏரி அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 6 கிலோமீட்டர் பரப்பளவில் பறந்து விரிந்து கிடக்கும் இந்த கொடைக்கானல் ஏரி ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டது. இதேபோல் பேரிஜம் லேக் எரியும் செயற்கையாக உருவாக்கப்பட்டது தான்.

கொடைக்கானல் நகரம் இந்த பொங்கலுக்கு போக மிக அருமையான இடங்களில் ஒன்று.. கொடைக்கானல் மலை ஏறும்போது இளையராஜா பாடல் மனிதில் எழுந்து உங்களுக்கு ஓங்கி ஒலிக்கும்.. மஞ்சளாறு பாயும் அந்த ஊர் என்று வைரமுத்து பாடிய வரிகளை, மஞ்சளாறு வியூ பாயிண்ட் உங்களுக்கு காண்பிக்கும். அப்படியே மேலே ஏறி ஏறி செல்ல செல்ல எலிவால் அருவி , கும்பரை, ஊத்துக்காடு, பெருமாள் மலை என்ன ஒவ்வொரு இடமும் உங்களுக்கு இளைப்பாறுவதற்கும் இயற்கையோடு இன்பமாய் இருப்பதற்கும் புத்துணர்ச்சியாக இருக்கும். கொடைக்கானல் நகரத்தில் நுழையும் போது வெள்ளியை உருப்புவது போல் கொட்டும் வெள்ளி நீர்வீழ்ச்சி அப்படியே உங்களை மெய்சிலிர்க்க வைக்கும்..
Kodaikanal as of now. pic.twitter.com/2z1qCSwbNh
— மேகமலைக்காதலன் ( A true lover of Megamalai ) (@MegamalaiS) January 7, 2024
அங்கு இறங்கி மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டீர்கள் என்றால் அந்த கிளைமேட்டுக்கும் உங்கள் கண்களில் மட்டுமல்ல காதுகளிலும் புகை வரலாம் .. அப்படியே சுங்கச்சாவடியை தாண்டி சென்றால் பார்க்கும் இடமெல்லாம் அருமையாக இருக்கும்.. மேயர் பாயிண்ட், நட்சத்திர ஏரி, சிறுவர் பூங்கா , குணா குகை, மன்னவனூர் ஏரி, பூம்பாறை முருகன் கோவில், கோக்கர்ஸ் வாக், குறிஞ்சி ஆண்டவர் கோயில் , வில்பட்டி, கூக்கால் ஏரி , பிரையண்ட் பூங்கா , டால்பின் நோஸ், பேரிஜம் ஏரி உள்படை ஏராளமான வியூ பாய்ண்டுகள் இருக்கின்றன.
கொடைக்கானல் பொறுத்தவரை சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பகுதிகளில் இரண்டு வானங்கள் சென்று வரக்கூடிய வகையில் இருப்பதால் வாகனங்களை யாராவது மெயின் சாலைகளில் பார்க்கிங் செய்யும்போது பெரிய அளவில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. அதனால் கொடைக்கானலில் செல்வோர் பார்ட்டி விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது . அது உங்களை மட்டுமல்ல அங்கு வரும் மக்களையும் பாதிக்கும்.
மோயர் சதுக்கம், குணா குகை, பைன் மரக்காடுகள் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் என்பதால் அந்த பகுதிகளில் கட்டணம் வசூலிப்பார்கள். கொடைக்கானலில் தற்போது நிலவும் கால நிலை குறித்த வீடியோ காண்போரை பரவசத்தில் ஆழ்த்தி உள்ளது. பொங்கலுக்கு என்ஜாய் பண்ண நிச்சயம் கொடைக்கானல் சூப்பரான இடம் ஆகும். அதேநேரம் கண்ட இடத்தில் வாகனங்களை பார்க்கிங் செய்யாமல் சுற்றி பார்த்தால் நிச்சயம் சுற்றுவது நல்லது.












Click it and Unblock the Notifications