பக்தர்களுக்கு தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு..குறைந்த கட்டணத்தில் திவ்யதேச பெருமாள் கோவில் சுற்றுலா!

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பயணத்திட்டத்தின் திவ்யதேசம் பெருமாள் திருக்கோயில்கள் ஒரு நாள் சுற்றுலாவிற்கு சென்னை வாலாஜா சாலை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக முன்பதிவு மையத்தில் நேரடியாகவும், வலைதள முகவரி www.ttdconline.com மூலமாகவும் முன்பதிவு நடைபெற்று வருகின்றது எனவும், இதனை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்,” சென்னையில் திவ்யதேசம் பெருமாள் திருக்கோயில்கள் ஒரு நாள் சுற்றுலா பயணத்திட்டம் -1 ல் சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும்.

tamil nadu govt spirituality


இந்த பேருந்து திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில், பெசன்ட் நகர் அருள்மிகு அஷ்டலெஷ்மி திருக்கோயில், திருவிடந்தை அருள்மிகு நித்ய கல்யாண பெருமாள் திருக்கோயில், மாமல்லபுரம் அருள்மிகு ஸ்தல சயன பெருமாள் திருக்கோயில், சிங்கபெருமாள்கோவில் அருள்மிகு பாடலாத்ரி நரசிம்மர் திருக்கோயில், திருநீர்மலை அருள்மிகு நீர்வண்ண பெருமாள் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு சென்று மாலை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தை வந்தடையும். .
சென்னையில் திவ்யதேசம் பெருமாள் திருக்கோயில்கள் ஒரு நாள் சுற்றுலா பயணத்திட்டம் -2 ல் சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் பேருந்து திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில், திருநீர்மலை அருள்மிகு நீர்வண்ண பெருமாள் திருக்கோயில், திருமழிசை அருள்மிகு ஜகன்னாத பெருமாள் திருக்கோயில், திருவள்ளூர் அருள்மிகு வைத்திய வீர ராகவ பெருமாள் திருக்கோயில், ஸ்ரீபெரும்புதூர் அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில், பூந்தமல்லி அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு சென்று மாலை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தை வந்தடையும்.

மதுரை மாவட்டத்தில் திவ்யதேசம் பெருமாள் திருக்கோயில்கள் ஒரு நாள் சுற்றுலாவில் மதுரை – அழகர்கோவில் சாலையில் உள்ள ஓட்டல் தமிழ்நாடு மதுரை - 2 வளாகத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் பேருந்து அழகர்கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், ஒத்தகடை அருள்மிகு ஸ்ரீ யோக நரசிம்ம பெருமாள் திருக்கோயில், திருமோகூர் அருள்மிகு காளமேக பெருமாள் திருக்கோயில், திருகோஷ்டியூர் அருள்மிகு சௌம்ய நாராயண பெருமாள் திருக்கோயில், மதுரை அருள்மிகு கூடலழகர் பெருமாள் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு சென்று மதுரை ஓட்டல் தமிழ்நாடு வளாகத்தை மாலை வந்தடையும்.

திருச்சி மாவட்டத்தில் திவ்யதேசம் பெருமாள் திருக்கோயில்கள் ஒரு நாள் சுற்றுலாவில் திருச்சி ஓட்டல் தமிழ்நாடு வளாகத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் பேருந்து உறையூர் அருள்மிகு அழகிய மணவாள பெருமாள் திருக்கோயில், ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதசுவாமி திருக்கோயில், உத்தமர் கோவில் அருள்மிகு புருஷோத்தம பெருமாள் திருக்கோயில், குணசீலம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாசல பெருமாள் திருக்கோயில், தான்தோன்றி மலை அருள்மிகு கல்யாண வெங்கடராம பெருமாள் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு சென்று மாலை 5.00 மணிக்கு திருச்சி ஓட்டல் தமிழ்நாடு வளாகத்தை வந்தடையும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் திவ்யதேசம் பெருமாள் திருக்கோயில்கள் ஒரு நாள் சுற்றுலாவில் தஞ்சாவூர் ஓட்டல் தமிழ்நாடு வளாகத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் பேருந்து திருகண்டியூர் அருள்மிகு சாபவிமோச்சன பெருமாள் திருக்கோயில், கும்பகோணம் அருள்மிகு சாரங்கபாணி பெருமாள் திருக்கோயில், திருநாகேஸ்வரம் அருள்மிகு உப்பிலியப்பன் பெருமாள் திருக்கோயில், நாச்சியார் கோவில் அருள்மிகு சீனிவாச பெருமாள் திருக்கோயில், திருச்சேறை அருள்மிகு சாரநாத பெருமாள் திருக்கோயில், மன்னார்குடி அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோயில், வடுவூர் அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு சென்று இரவு ஓட்டல் தமிழ்நாடு வளாகத்தை வந்தடையும்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பயணத்திட்டத்தின் திவ்யதேசம் பெருமாள் திருக்கோயில்கள் ஒரு நாள் சுற்றுலாவிற்கு சென்னை வாலாஜா சாலை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக முன்பதிவு மையத்தில் நேரடியாகவும், வலைதள முகவரி www.ttdconline.com மூலமாகவும் முன்பதிவு நடைபெற்று வருகின்றது. திவ்யதேசம் பெருமாள் திருக்கோயில்கள் ஒரு நாள் சுற்றுலா குறித்த மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கட்டணமில்லா தொலைபேசி எண்.180042531111 மற்றும் தொலைபேசி எண்கள் 044-25333333, 044-25333444 ஆகிய எண்களை தொடர்பு கொண்டும், வலைதள முகவரி www.ttdconline.com மூலமாகவும் விவரங்களை பெறலாம்.” என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+