Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காதலை கொண்டாடும் பிப்ரவரியில் ஊட்டி, கொடைக்கானலை தாண்டி ஹனிமூன் செல்ல ஏற்ற சுற்றுலா தலங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காதலை கொண்டாடும் மாதமான பிப்ரவரியில் கிளைமேட் வேறலெவலில் இருக்கும். நவம்பரில் முன் பனி என்றால், பிப்ரவரியில் முழுவதும் பின் பனி இருக்கும்.. எனவே வரும் மாதம் ஹனிமூன் செல்ல ஏற்ற சுற்றுலா தளங்களை இப்போது பார்ப்போம்.

ஜனவரி மற்றும் பிப்ரவரியில் அதிக திருமணங்கள் நடைபெறும். புதிதாக திருமணம் ஆன ஜோடிகள் பிப்ரவரியில் ஹனிமூன் செல்ல அதிக ஆர்வம் காட்டுவார்கள். அவர்கள் தமிழ்நாட்டில் ஹனிமூன் செல்ல சிறந்த சுற்றுலா தலங்களை இப்போது பார்ப்போம்.

 Ooty and Kodaikanal are some of the best honeymoon destinations in February that celebrate love

ஊட்டி: ஹனிமூன் என்றாலே அது ஊட்டி தான் முதலிடத்தில் இருக்கம் அதற்கு முக்கிய காரணம் அங்கு இருக்கும் கால நிலை.. அவ்வளவு குளிரான இடங்கள் தமிழ்நாட்டில் வேறு எங்குமே இருக்காது. போக்குவரத்து கட்டமைப்பு வசதிகள். ரயில் வசதி உள்ளிட்ட இடங்கள் எல்லாமே ஊட்டியில் அருமையாக இருக்கும். ஊட்டியில் காணும் இடம் எல்லாம் சுற்றுலா தலம் தான். ஊட்டிக்கு ஹனிமூன் போகிறவர்கள் மலை ரயிலில் சென்று சுற்றி பார்க்கும் அனுபவம் அலாதியானது.

ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கொடநாடு, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான சுற்றுலா தலங்கள் இருக்கின்றன. கடைசி நேரத்தில் புக்கிங் செய்யாமல் முன்கூட்டிய தேர்வு செய்து புக்கிங் செய்தால் குறைந்த விலைகளில் அறைகள் கிடைக்கும். அதேபோல் சுற்றுலா வாகனங்களும் கிடைக்கும். ஊட்டியின் தனிச்சிறப்பு என்னவென்றால் இப்போது உறைபனி நிலவுவது தான்.. அடுத்த மாதம் கொஞ்சம் குறையலாம். ஆனால் கண்டிப்பாக மிகக்கடுமையான குளிர் இருக்கும்

 Ooty and Kodaikanal are some of the best honeymoon destinations in February that celebrate love

கொடைக்கானல்: ஊட்டிக்கு அடுத்தபடியாக அதிகம் பேர் விரும்பும் இடம் என்றால் அது கொடைக்கானல் தான். ஊட்டி என்பது நகரம் அதன்பிறகே அது சுற்றுலா தலம். ஆனால் கொடைக்கானல் அப்படி அல்ல. முழுக்க முழுக்க ஒரு சுற்றுலா நகரம். இங்கு ஏராளமான அருவிகள் அதிகமான இடங்களில் இருக்கின்றன. அங்கு சென்று குளிக்கலாம். சுற்றிபார்க்க ஏராளமான இடங்கள் இருக்கின்றன. படகு சவாரி முதல் டிரக்கிங் வரை பல விஷயங்கள் இங்கு மிகவும் பிரபலம். ஊட்டியில் எப்படி மலை ரயில் தனிச்சிறப்போ அது போல் தனிச்சிறப்பு கொடைக்கானலில் என்னவென்றால், நட்சத்திர ஏரி தான்.. நட்சத்திர ஏரி இயற்கையான ஏரி அல்ல.. முற்றிலும் செயற்கையாக உருவாக்கப்பட்ட மிக பிரம்மாண்டமான ஏரி. இங்கு படகு சவாரி, சைக்கிள் சவாரி செல்வது அலாதியானது.

 Ooty and Kodaikanal are some of the best honeymoon destinations in February that celebrate love

மூணாறு: தேனி மாவட்டத்தின் எல்லையை ஒட்டியுள்ள கேரள மாநிலம் மூணாறில் குளிர் அதிகமாக இருக்கும். கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளாவில் உள்ள மக்களுக்கு மூணாறு தான் சொர்க்கம். இரண்டு நாட்கள் தங்கி சுற்றினாலே உங்களுக்கு மூணாறு மிகவும் பிடித்து போய்விடும். மிகப்பெரிய ஆடம்பரமான ரிசார்ட்டுகள், கண்ணை பறிக்கும் தேயிலை தோட்டங்கள், ஏரிகள் காதல் ஜோடிகளுக்கு சூப்பரான விருந்தாக இருக்கும். தமிழ் நாட்டின் தேனியில் இருந்து 75 கிமீ தூரத்தில் இருக்கிறது. உடுமலைப்பேட்டை வழியாகவும் வரலாம். இரு சக்கர வாகனத்தில் அல்லது எந்தநேரமும் மூணாறு செல்ல விரும்புவோர் தேனி வழியாக மூணாறு வருவதே சிறந்தது.

 Ooty and Kodaikanal are some of the best honeymoon destinations in February that celebrate love

வாகமன்: வானம் தொடும் மலைகளும், ஆழம் அறியா பள்ளத்தாக்குகளும் தான் வாகமனின் அடையாளம். இங்கு மொத்த கேரளாவையும் சின்ன சின்னதாய் வியூபாய்ண்ட் மூலம் பார்க்கலாம். இங்கு பிப்ரவரியில் மிக குளிராக இருக்கும். திரைப்படம் எடுப்போருக்கும் வாகன பிரியர்களுக்கும் பிடித்த ஸ்பாட் என்றால் அது வாகமன் தான். இங்கு டிரக்கிங் சென்றால் அற்புதமான அனுபவமாக இருக்கும். தமிழ்நாட்டில் உள்ளவர்கள் வாகமன் செல்ல ஒரே வழி தேனி தான். தேனியில் இருந்து கம்பம், குமுளி (தேக்கடி) சென்று அப்படியே 45 கிமீ தூரத்தில் வாகமனை அடையாலாம். விரும்பினால் போகும் வழியில் ஒரு நாள் தேக்கடியிலும் தங்கி சுற்றி பார்க்கலாம். தேக்கடியும் மிக அற்புதமான சுற்றுலா தளம் ஆகும்.

 Ooty and Kodaikanal are some of the best honeymoon destinations in February that celebrate love

ஏற்காடு: ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு புதுமணத் தம்பதிகளும், காதலர்களும் பிப்ரவரியில் தேன்நிலவு செல்ல சிறந்த இடங்களில் ஒன்று. ஏற்காட்டில் உள்ள பசுமையான பள்ளத்தாக்குகள், நிலப்பரப்புகள் , பறவைகள், அமைதியான சாலை, பார்க்கவே ரம்மியமாக இருக்கும். கொடைக்கானல், ஊட்டி போல் கடுமையான குளிர் இங்கு இருக்காது. அதே நேரம் மிக இதமான கால நிலை இருக்கும். வெயிலும் இல்லாமல், குளிரும் அதிகம் இல்லாத இடமாக இருக்கும். சேலத்தில் இருந்து வெறும் 30 கிமீ தூரத்தில் இருக்கிறது.

பிப்ரவரியில் இந்த சுற்றுலா தலங்களுக்கு செல்ல போகிறீர்கள் என்றால் கண்டிப்பாக முன்னரே திட்டமிடுங்கள். வாகன வாடகை பிப்ரவரி இறுதியில் எல்லாம் கண்டிப்பாக அதிகரித்துவிடும். அதேபோல் அறை வாடகையும் பிப்ரவரி பிற்பாதிக்கு பிறகு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மார்ச்சில் தொடங்கும் வெயில் பிப்ரவரி இறுதியிலே தொடங்கினால் மேற்கண்ட இடங்களில் உடனடியாக சீசன் தொடங்கிவிடும். அதன்பிறகு அடுத்த ஜூன் வரை அறை வாடகையும், செலவுகளும் கண்டிப்பாக இப்போது உள்ளதைவிட இருமடங்காக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+