ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி! ரூ.100 போதும்! மொத்த ஊரையும் சுற்றலாம்.. சூப்பர் பிளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஊட்டியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இங்கு பல்வேறு முன்னெடுப்புகளையும் சுற்றுலாத்துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சுற்றுலா பயணிகள் வசதிக்காக ஊட்டியில் சர்கியூட் பேருந்து சேவை பேருந்து சேவை கடந்த சில ஆண்டுகளாக இயக்கப்பட்டு வருகிறது. சீசன் காலங்களில் இந்த பேருந்துகள் தமிழக அரசின் போக்குவரத்து துறையால் இயக்கப்படுகின்றன.

இதன் மூலம் ஊட்டியில் ஒரே கட்டணத்தில் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்றுவிட்டு வரமுடியும். இந்த பேருந்தில் பயணம் செய்ய பெரியவர்களுக்கு ரூ.100-ம், சிறியவர்களுக்கு ரூ.50-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

Ooty Tour Circuit bus services launched in Ooty at a fare of 100 for the convenience of tourists

சுற்றுலா தளம்

தமிழகத்தில் தலைசிறந்த மலைவாசஸ்தலமாக ஊட்டி உள்ளது. மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் நீலகிரி மலைத்தொடரில் அமைந்துள்ள ஊட்டி கடல் மட்டத்தில் இருந்து 2,240 மீட்டர் (7,350 அடி) உயரத்தில் உள்ளது. அங்குள்ள குளுமையான சூழல் சுற்றுலா பயணிகளை பரவசப்படுத்தும்.

இதனால் கோடைக்காலத்தில் இங்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கிய பிறகு கூட்டம் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதே அங்குள்ள விடுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோத தொடங்கியுள்ளது. ஊட்டியின் புகழ்பெற்ற ஏரிக்கரை, ரோஜா பூங்கா, அரசு தாவரவியல் பூங்கா, பைக்காரா மற்றும் ஊட்டி படகு இல்லம் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தளங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

சர்கியூட் பேருந்து சேவை

பச்சைப்பசேலென விரிந்த மடிப்பு மலைகளில் மேகம் தவழ்ந்த காட்சிகள் பயணிகளை மெய்மறக்க செய்தன. ஊட்டியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இங்கு பல்வேறு முன்னெடுப்புகளையும்ம் சுற்றுலாத்துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது சுற்றுலா பயணிகள் வசதிக்காக ஊட்டியில் சர்கியூட் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழகம் இந்த சேவையை கடந்த சில ஆண்டுகளாகவே மேற்கொண்டு வருகிறது.

இந்த பேருந்துகள் ஊட்டியில் உள்ள முக்கிய சுற்றூலா இடங்களுக்கு சென்று வரும். அரை மணி நேரத்திற்கு ஒருமுறை பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்தில் பயணம் செய்ய பெரியவர்களுக்கு ரூ.100-ம், சிறியவர்களுக்கு ரூ.50-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் இந்த பேருந்துகளில் செல்பவர்களுக்கு டிக்கெட்டுக்கு பதிலாக 'பாஸ்' வழங்கப்படுகிறது. இந்த பாஸ் வைத்து உள்ள பயணிகள் சர்க்கியூட் பஸ்களில் ஏறி, ஒரே கட்டணத்தில் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்றுவிட்டு வரமுடியும்.

எந்தெந்த இடங்கள்:

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா சந்திப்பு, படகு இல்லம், மரவியல் பூங்கா மற்றும் தொட்டபெட்டா ஆகிய பகுதிகளுக்கு தற்போது 4 சர்க்கியூட் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து இந்த பேருந்துகளை கூடுதலாக இயக்க போக்குவரத்து கழகம் திட்டமிட்டு இருக்கிறது

பயணிகளுக்கு என்ன பயன்?

ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்லும் போது கார் மற்றும் வேன்களில் அதிக கட்டணம் கேட்கப்படுவதால், பல இடங்களுக்கு செல்ல முடியாமல் ஏமாற்றம் அடையும் பயணிகளுக்கு இந்த சர்கியூட் பேருந்து மிகுந்த பயனாக இருக்கும். ரூ.100 கட்டணத்தில் சுற்றுலா இடங்களுக்கு எளிதாக சென்றுவிட்டு வரலாம்.

ஊட்டியில் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் தனியார் வாகனங்களில் வருவதால் நகரின் அனைத்து சாலைகளிலும் கடும் நெரிசல் நிலவியது. இதனால் லவ்டேல் சந்திப்பு-மஞ்சனக்கொரை மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. பூங்கா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தபோதிலும் வாகன நெரிசல் குறையவில்லை.

போதிய பார்க்கிங் வசதி இல்லாததால் வாகனங்களை நிறுத்த இடமில்லை என்பதால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர். ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக சாலை விரிவாக்கம் மற்றும் பார்க்கிங் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் அரசு நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+