ரெட் டாக்ஸிக்கு ஊட்டி சுற்றுலா வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு.. முற்றிய மோதல்.. கொதிக்கும் கோவை
ஊட்டி: கோவையில் இருந்து தினசரி ஏராளமானோர் கால் டாக்ஸி மூலம் ஊட்டிக்கு சுற்றுலா செல்கின்றனர். அப்படி செல்லும் கால் டாக்ஸி ஓட்டுநர்கள், ஊட்டியில் இருந்து திரும்ப செல்லும் போது பயணிகளை ஏற்றி செல்லவிடாமல் சுற்றுலா ஓட்டுநர்கள் சிலர் மிரட்டுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்றும் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
கோவை மாநகரத்திற்கு மிக அருகில் உள்ள உலக புகழ் பெற்ற சுற்றுலா தலம் ஊட்டி. மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்..

சென்னை, பெங்களூர், ஈரோடு, சேலம், வேலூர், திருப்பூர், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருபவர்கள் நேரடியாக திருப்பூர் மாவட்டம் அவினாசி அல்லது கோவை மாவட்டம் அன்னூர் வழியாக செல்கிறார்கள். வெளியூர்களில் இருந்து நீண்ட தூரம் வருபவர்கள் என்பதால் இவர்கள் கார்களிலேயே வந்து, காரிலேயே சுற்றி பார்த்து செல்வார்கள். அதேநேரம் கோவையில் இருந்து செல்பவர்கள் நேரடியாக முழுமையாக சுற்றிபார்க்க வாடகை வாகனங்களை ஏற்பாடு செய்வது இல்லை.
கோவையில் ரெட் டாக்ஸி, கோ டாக்ஸி உள்ளிட்ட தனியார் கால் டாக்ஸில் புக்கிங் செய்து ஊட்டி வந்து இறங்குகிறார்கள்.. அதன்பிறகு அங்கு சுற்றுலா செல்கிறார்கள். இப்படி கோவையில் இருந்து ரெட் டாக்ஸி, கோ டாக்ஸி உள்ளிட்ட தனியார் கால் டாக்ஸி மூலம் தினசரி ஏராளமானோர் ஊட்டி செல்கிறார்கள்.. அப்படி செல்லும் கால் டாக்ஸி ஓட்டுநர்கள், திரும்ப செல்லும் போது, குறைந்த கட்டணத்தில் கோவைக்கு அல்லது திருப்பூருக்கு பயணிகளை பிக்கப் செய்து செல்வதாக, ஊட்டியில் சுற்றுலா டாக்ஸி டிரைவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இப்படி வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களால் சுற்றுலா பயணிகளை மட்டுமே நம்பியுள்ள தங்கள் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்படுவதாக ஊட்டி சுற்றுலா வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகிறார்கள். இது ஒருபுறம் எனில், கோவை மாவட்ட கால் டாக்ஸி ஓட்டுநர்களோ ஊட்டிக்கு போய்விட்டு மீண்டும் தனியாக எப்படி வர முடியும் என்றும், அப்படி வந்தால் பாதிப்பு ஏற்படும் என்று கூறுகிறார்கள்.
இதனால் இரு மாவட்ட டாக்ஸி ஓட்டுநர்கள் இடையே பிரச்னை நிலவி வருகிறது . இதனிடையே ஊட்டி சுற்றுலா வாகன ஓட்டிகள் சிலர், ஊட்டியில் இருந்து திரும்ப செல்லும் போது பயணிகளை ஏற்றி செல்லவிடாமல் ரெட் டாக்ஸி ஓட்டுநரை மிரட்டியதாகவும், வாகனத்தின் ஸ்டிக்கரை கிழித்து , வாகனத்தின் கண்ணாடியை சேதப்படுத்தியதாகவும் புகார் எழுந்தள்ளது. இதனால் கோவை மாநகரில் ரெட் டாக்ஸி, கோ டாக்ஸி ஓட்டுநர்கள் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் இரு மாவட்ட ஆட்சி தலைவர்கள் பேசி தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications