பிலிப்பைன்ஸ் செல்ல இனி விசா தேவையில்லை.. இந்திய சுற்றுலா பயணிகள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்

Subscribe to Oneindia Tamil

மணிலா: உலகப்புகழ் பெற்ற ஏராளமான கடற்கரைகளைக் கொண்ட பிலிப்பைன்ஸ் நாடு இந்தியர்கள் அதிகம் பேர் சுற்றுலா வர வேண்டும் என்ற நோக்கத்தில் இரண்டு வகையான விசா இல்லாத கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி இந்திய பாஸ்போர்ட் உள்ள எவரும், 14 நாட்கள் வரை விசா இல்லாமல் பிலிப்பைன்ஸ் நாட்டில் சுற்றிப்பார்க்க முடியும். அதேபோல் 30 நாட்கள் விசா இல்லாமல் சுற்றி பார்க்கும் வசதியை வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு பிலிப்பைன்ஸ் அறிவித்துள்ளது.

இந்தியர்கள் பலர் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதில் இப்போது அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். தாய்லாந்து, துபாய், சிங்கப்பூர், மலேசியா, கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவின் பல்வேறு நாடுளுக்கு சுற்றுலா செல்ல ஆர்வம் காட்டுகிறார்கள்.

Philippines to introduce visa-free entry for Indian tourists 5 things should know

இதனால் இந்தியர்கள் சுற்றுலா வருவதை ஊக்குவிக்கும் பொருட்டு இலங்கை, தாய்லாந்து, மலேசியா, பூட்டான், கென்யா, அங்கோலா, டொமினிக் உள்ளிட்ட 32 நாடுகள் விசா இல்லாமல் தங்க அனுமதிக்கின்றன. அந்த வரிசையில் தற்போது பிலிப்பைன்ஸ் நாடும் இந்திய சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்கும் முயற்சியாக விசா இல்லாமல் தங்க அனுமதிக்கும் முடிவினை எடுத்துள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டை பொறுத்தவரை மிகவும் அழகிய கடற்கரைகளுக்கு பெயர் பெற்றது . ஆசியாவின் மிகவும் அழகிய கடலோரப் பகுதிகளுக்கு தாயகம் என்று போற்றப்படுகிறது. உலகின் பல்வேறு நாட்டு மக்களை வியக்க வைக்கும் வகையில், பல்வேறு வகையான மணல் நிறைந்த கடற்கரைகள் உள்ளன. மனதை மயக்கும் வகையில் நீலக்கடலும், நீளக்கடற்கரையும் இருக்கும் ஏராளமான தீவுகளையும், அபூர்வமான ஆயிரக்கணக்கான கடல்வாழ் உயிரினங்களும் வாழும் பிலிப்பைன்ஸ் உண்மையில் கடல் அன்னையின் விருப்பமான நாடாக உள்ளது. மாலத்தீவுக்கு செல்லும் பலர் இப்போது பிலிப்பைன்ஸ் செல்கிறார்கள்.

பிலிப்பைன்ஸ் செல்லும் இந்திய பயணிகள் தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து முக்கிய விஷயங்கள்:

இந்திய குடிமக்கள் 14 நாள் விசா இல்லாமல் போகலாம்: இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இப்போது 14 நாட்கள் வரை விசா இல்லாமல் பிலிப்பைன்ஸுக்குச் செல்லலாம். 14 நாள் தங்குவதற்கு விசா இனி தேவையில்லை என்றாலும், இந்திய பயணிகள் சில அடிப்படை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்:

வந்த தேதிக்குப் பிறகு குறைந்தது ஆறு மாதங்கள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் இருக்க வேண்டும்.
ஹோட்டல் முன்பதிவுகள் விவரங்களை சமர்பிக்க வேண்டும்.
தங்குவதற்கு போதுமான நிதி ஆதாரம் உள்ளதை காட்ட வேண்டும்.
ரிட்டன் டிக்கெட் எடுத்த விவரத்தையும் காட்ட வேண்டும்.

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் 30 நாட்கள் விசா இல்லாமல் தங்க முடியும்

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர் அல்லது ஷெங்கன் பகுதி நாடு போன்ற நாடுகளில் செல்லுபடியாகும் விசா அல்லது அங்கு வசிப்பிடத்தை கொண்ட இந்திய குடிமக்கள் 30 நாள் விசா இல்லாத தங்குதலுக்கு தகுதியுடையவர்கள் ஆவர். அதே ஆவணத் தேவைகள் பொருந்தும். வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களை ஈர்க்க இந்த முயற்சியில் பிலிப்பைன்ஸ் இறங்கி உள்ளது.

புதிய மின்-விசா அறிமுகம்

சுற்றுலா அல்லாத காரணங்களுக்காக நீண்ட காலம் தங்க அல்லது பயணம் செய்யத் திட்டமிடுபவர்களுக்கு, பிலிப்பைன்ஸ் மின்-விசா முறையை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை மின்னல் வேகத்தில் நடக்கும். எனவே எளிதாக பிலிப்பைன்ஸுக்கு விசா வாங்கிவிடவும் முடியும்.

டிஜிட்டல் நாடோடி விசா

பிலிப்பைன்ஸ் நாடு தற்போது டிஜிட்டல் நாடோடி விசாவை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. அந்நாட்டு அதிபர் பாங்பாங் மார்கோஸ் அறிவித்த இந்த புதிய விசா, வெளிநாட்டு நிறுவனங்களுக்காக தொலைதூரத்தில் பணிபுரியும் நிபுணர்கள் பிலிப்பைன்ஸில் வசிக்கவும் வேலை செய்யவும் அனுமதிக்கும் என்று கூறுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+