பொங்கல் டிரிப்.. சொந்த ஊர்களுக்கு விமான டிக்கெட்டுகள் விலை என்ன? சிறந்த ஆப்ஷன் எது? முழு விபரம்
சென்னை: பொங்கலை முன்னிட்டு பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். நீண்ட விடுமுறை காரணமாக பலரும் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய தொடங்கி உள்ளனர்.
இதற்காக சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்களும் கூட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதே சமயம் அவசரமாக சொந்த ஊர்களுக்கு விமானத்தில் செல்பவர்களும் இருக்கிறார்கள்.

ஒரு நகரத்தில் இருந்து இன்னொரு நகரத்திற்கு பொங்கலுக்கு முன் விமானத்தில் செல்லும் பலர் உள்ளனர். சிலர் பொங்கல் அன்று அதிகாலை கூட செல்வார்கள். அவர்களுக்கான கட்டண வழிகாட்டிதான் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளது.
கீழே நாளை முதல் பொங்கல் வரை விமான கட்டணம் எவ்வளவு உள்ளது என்பது சராசரியாக கொடுக்கப்பட்டு உள்ளது. சராசரியாக குறைந்த பட்ச தொகை எவ்வளவு, அதிக பட்ச தொகை எவ்வளவு என்பதை கீழே பார்த்துக்கொள்ள முடியும். சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் ரூட் ஆகும் இது.
சென்னை டூ திருச்சி - குறைந்தபட்ச டிக்கெட். ரூ. 5,804, அதிகபட்ச டிக்கெட் ரூ. 32111 (எல்லாமே ஒன்வே )
சென்னை டூ மதுரை - குறைந்தபட்ச டிக்கெட். ரூ. 7,804, அதிகபட்ச டிக்கெட் ரூ. 24161 (எல்லாமே ஒன்வே )
சென்னை டூ பெங்களூர் - குறைந்தபட்ச டிக்கெட். ரூ. 8,884, அதிகபட்ச டிக்கெட் ரூ. 34368 (எல்லாமே ஒன்வே )
சென்னை டூ தூத்துக்குடி - குறைந்தபட்ச டிக்கெட். ரூ. 12,083, அதிகபட்ச டிக்கெட் ரூ. 26369 (எல்லாமே ஒன்வே)
பெங்களூர் டூ திருச்சி - குறைந்தபட்ச டிக்கெட். ரூ. 7,884, அதிகபட்ச டிக்கெட் ரூ. 22268 (எல்லாமே ஒன்வே )
சிறப்பு பேருந்துகள்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. 19 ஆயிரத்து 484 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை தகவல் வெளியிட்டு உள்ளது.
பொங்கலுக்கு களமிறக்கப்படும் சிறப்பு பேருந்துகள் மற்றும் மற்ற பேருந்துகள் எந்த பேருந்து நிலையத்தில் இருந்து இயங்கும், எங்கிருந்து பேருந்து பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்று இங்கே விளக்கமாக அளிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டு பணிக்கு திரும்பி உள்ளனர்.
பொங்கலுக்கு முன் 12-01-24 முதல் 14-01-24 2 (சிறப்பு பேருந்துகள் இயக்கம்) செய்யப்படும்.
பொங்கல் பண்டிக்கைக்காக தமிழ்நாடு முழுவதும் 19,484 பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து 11,006 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
பொங்கல் பண்டிகைக்கு பிறகு 17,589 பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்ட பேருந்துகள் பொங்கலுக்காக கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும்.
பொங்கலுக்கு பின் 16-01-24 முதல் 18-01-24 வரை (சிறப்பு பேருந்துகள் இயக்கம்) இயக்கப்படும்.
ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து 94450 14450, 94450 14436 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்.
பொங்கலுக்கு பிறகு வெளியூரில் இருந்து வரும் பேருந்துகள் கிளாம்பாக்கம் வரைதான் இயக்கப்படும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications