'எனக்கு ராஜாவாக நான் வாழுறேன்'.. 61 வயதில் 40,000 கி.மீ பயணம்.. சைக்கிளில் உலகம் சுற்றும் தாத்தா
கரூர்: "என்ன வேணா நடக்கட்டும்; நான் சந்தோசமா இருப்பேன்; உசுரு இருக்கு வேறென்ன வேணும்.; உல்லாசமா இருப்பேன், எனக்கு ராஜாவா நான் எனக்கு ராஜாவா நான், எனக்கு ராஜாவா நான் வாழுறேன்; எதுவும் இல்லனாலும் ஆளுறேன்" என்று அமெரிக்கர் ஒருவர் 61 வயதில் உலகத்தை சுற்றியபடி வாழ்கிறார். சைக்களில் உலக நாடுகளை சுற்றிவரும் அவரை பற்றி பார்ப்போம்.
பலருக்கும் உலகத்தை சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆசை உள்ளது. ஆனால் உலகத்தை ஒருமுறை விமானத்தில் சுற்றிவர பல நாட்கள் ஆகும். இந்நிலையில் காரில் சுற்றினாலோ, பைக்கில் சுற்றினாலோ சில வருடங்களே ஆகும். சைக்கிளில் சுற்றினால்,நிச்சயம் பல வருடங்கள் ஆகும். எத்தனை வருடங்கள் ஆகும் என்பதை சுற்றி வந்தவர்கள் தான் சொல்ல வேண்டும். பலருக்கும் மன அழுத்தம் காரணமாக இப்போது உலகத்தை சுற்றுவது அதிகரித்துள்ளது.

நம்மூரில் பலருக்கும் சென்னையில் இருந்து லடாக்கிற்கு பைக்கில் செல்ல வேண்டும் என்று ஆசை உள்ளது. அதை பலரும் நிறைவேற்றி வருகிறார்கள். முன்பெல்லாம் 100 கிமீ தூரம் என்றாலே பேருந்துகளில் தான் செல்வார்கள். இன்று சர்வ சாதாரணமாக சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கே இருசக்கர வாகனங்களில் மக்கள் செல்கிறார்கள். பலரது வாழ்வியல் முறையும் மாறி உள்ளது. .
அந்த வகையில், அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியை சேர்ந்த ரிச் ஹேகெட் என்பவருக்கு உலகத்தை சைக்களில் சுற்ற வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. உலகத்தை சைக்கிளில் சுற்ற நிறைய செலவாகும் என்பதை தாண்டி, அதற்கு உடல் ரீதியாகவும்,மன ரீதியாகவும் தைரியம் வேண்டும். இந்நிலையில் துணிச்சலாக சைக்கிளில் உலகத்தை சுற்ற முடிவு செய்தார். இப்போது அல்ல.. 1991ம் ஆண்டே இதற்கான முடிவினை எடுத்துவிட்டார் ரிக் ஹேகெட்.. ஆனால் பணம் காசு சேர்த்தவரின் பயணம் என்பதே 2013ல் தான் ஆரம்பம் ஆகி உள்ளது..
2013ம் ஆண்டு சைக்கிளில் பயணிக்க தொடங்கிய ரிச் ஹேகெட், 10 ஆண்டுகளில் 40,000 கி.மீ-க்கு மேலாக பயணித்துள்ளார்.. தினசரி சராசரியாக ஒரு நாளைக்கு 80-125 கிமீ பயணம் மேற்கொண்டு வரும் அவர், தற்போது கரூர் வழியாக பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருக்கிறார். இவரது பயணத்தை பலர் வியந்து போய் பார்க்கிறார்கள். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இதேபோல் உலகம் சுற்ற ஆசை தான். .ஆனால் அவ்வளவு பணம் என்னிடம் இல்லை என்று கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications