பாக்கெட்டை கடிக்காத பட்ஜெட் சுற்றுலா! இருக்கவே இருக்கு சின்ன இளவரசி சிறுமலை..! இவ்வளவு தான் செலவா?
திண்டுக்கல்: நாடாளுமன்ற தேர்தலுக்காக தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், பலரும் கொடைக்கானல், நீலகிரிக்கு சுற்றுலா சென்று வருகின்றனர். ஆனால் அங்கு அதிகம் செலவு பிடிக்கும் என நினைப்பவர்கள் குறைந்த பட்ஜெட்டில் திண்டுக்கல் சிறுமலைக்கு சுற்றுலா செல்லலாம்..
மேலும் சிறுமலை வனப் பகுதியில் காட்டுமாடு , குரங்குகள், கடமான், கேளையாடு , முயல், கழுதை, காட்டு அணில், போன்ற வனவிலங்குகள், மற்றும் பலவகையான பறவைகள், பல்வேறு விதமான மூலிகை செடிகளும் உள்ளன.

இப்படிப்பட்ட இயற்கை சூழ்ந்த சிறுமலை வனப்பகுதிக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் , குடும்பத்துடனும் குழந்தைகளுடனும், வந்து செல்கின்றனர்.
இவ்வாறு சுற்றுலா பயணம் செய்யும் பொதுமக்கள் இயற்கை அழகை ரசித்துக் கொண்டு, சிறுமலை அகஸ்தியர் புரம் பகுதியில் உள்ள வெள்ளிமலை சிவன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு, அப்பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் சிறிது நேரம் பொழுதைக் கழித்துவிட்டு வீடு திரும்புகின்றனர். பொதுவாகவே மலைப்பகுதிகள் என்றாலே இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளாகவே இருக்கும். இதற்கு எடுத்துக்காட்டாக திண்டுக்கல் சிறுமலை அமைந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாலையில் அமைந்துள்ள சிறுமலைக்கு திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தென்மலை செல்லும் பேருந்து பயணிகளை ஏற்றி செல்கிறது. இவ்வாறு பேருந்தில் செல்லும் பயணிகள் நத்தம் சாலையில் உள்ள மேம்பாலத்தை கடந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் வலது புறமாக சென்று சிறுமலை நோக்கி பயணிக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான பயணிகள் பேருந்தில் செல்ல விரும்ப மாட்டார்கள், ஏனென்றால் பேருந்தில் சென்றால் சிறுமலை இயற்கை அழகினை முழுவதிலும் ரசிக்க முடியாது.

எனவே சிறு மலையை சுற்றிப் பார்க்கச் செல்லும் நபர்கள் தங்களது சொந்த வாகனங்களில் செல்வதே நல்ல அனுபவத்தை தரும். சிறுமலையை நோக்கி இரு சக்கர வாகனம் மற்றும் கார்களில் செல்பவர்கள் சிறுமலை சோதனை சாவடியை கடந்த உடன் மலைப்பாதை துவங்கிவிடும். இந்த மலைப்பாதை உச்சியை அடைய 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது. இதில் நான்காவது கொண்டை ஊசி வளைவை கடந்தவுடன், ஜில் என்ற குளிர் காற்றும், காற்றுடன் கூடிய மூலிகை நறுமணத்தை உணரலாம். மேலும் அங்கு ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியான அதே நேரத்தில் குளிர்ச்சியான காலநிலையே நிலவும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுமலையின் 17வது கொண்டை ஊசி வளைவில் அமைந்துள்ள உயர் கோபுரத்தின் மேலே சென்று மலையின் இயற்கையின் பிரமிக்க வைக்கும் காட்சிகளை காணலாம். அதனை தொடர்ந்து சிறுமலை புதூர் கிராமத்திற்கு முன்பு 2010ம் ஆண்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட சிறிய நீர் தேக்கம் அமைந்துள்ளது. இதில் வாரம் இறுதியில் போதுமான நீர்வரத்து இருந்தால் மட்டும் படகு சவாரி அனுமதிக்கப்படும்.
இந்த புதூர் கிராமத்தை கடந்து செல்லும் வழியில் அப்பகுதி மக்கள் அதிக அளவில் விளைவிக்கப்படும் பலாப்பழம், சிறுமலை வாழை, மிளகு போன்றவற்றை காணலாம். இதனைத் தொடர்ந்து மலை உச்சியில் அமைந்துள்ள அகஸ்தியர்புரம் சென்றால் மலை உச்சியில் உள்ள வெள்ளிமலை சிவன் கோவிலில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் உள்ளது.
அகஸ்தியர்புரத்தில் சிவசக்தி சித்தர் பீடம் என்ற ஆசிரமம் அமைந்துள்ளது, இந்த ஆசிரமத்தில் வெள்ளிமலை சிவன் கோவில் தோன்றிய வரலாறு, மற்றும் பொதுவாகவே கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் முன்பும், சென்ற பின்பும் எப்படிப்பட்ட வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்ற வாசகங்களும் எழுதி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆசிரமத்தில் காலை, மதியம், மாலை என அனைத்து வேளைகளிலும் அன்னதானம் வழங்கப்படுவது சிறப்பு.
இங்கிருந்து சிவபெருமானை தரிசனம் செய்ய சுமார் அரை மணிநேரம் காட்டுப்பகுதியில் மலை ஏறிச்செல்ல வேண்டும். இக்கோவிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மலையேறி செல்லும் வழியில் செல்பி எடுத்து மகிழ்ந்து வருவதுடன், மலை உச்சியில் உள்ள வெள்ளிமலை கோவில் பின்புறம் சென்று இயற்கை காட்சிகளை ரசித்து புகைப்படம் எடுத்துக் கொள்வது வழக்கமான ஒன்று. மேலும் இக்கோவிலில் வாரம் செவ்வாய் வெள்ளி கிழமைகளில் சுற்றுவட்டார பொதுமக்கள் பொங்கல் வைத்து பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.
இதற்காகவே இங்கு தங்கும் அறைகள், ரிசார்ட்டுகள் என தனித் தனியே உள்ளன. 700 ரூபாயிலிருந்து 2000 ருபாய் வரை உங்கள் வசதிக்கு ஏற்றவாறு அறைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஒரு குடும்பத்திற்கு அறை, உணவு என மொத்தமே 5 ஆயிரம் இருந்தால் அது அதிகம் தான். தூரத்தைப் பொறுத்து பயண செலவு மட்டும் சற்றே மாறுபடும். மேலும் முன்னரே சொல்லிவிட்டால் உணவு வசதியும் உண்டு. மேலும் சிறுமலை பழையூர், புதூரில் உணவகங்கள், தேனீர் கடைகளும் உண்டு என்பதால் உணவுக்கு கவலைப்பட வேண்டியதில்லை, மேலும் படகு சவாரியோடு, நீச்சல் குளம், ப்யர் கேம்ப் வசதி கொண்ட ரிசார்ட்டுகளும் உள்ளதால் பட்ஜெட் சுற்றுலா பிரியர்களுக்கு சிறுமலை ஒரு வரப்பிரசதம் தான்..
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications