விமானத்தில் செல்லும் ஆசையை நிறைவேற்ற சூப்பர் வாய்ப்பு.. வெறும் 600 ரூபாய் இருந்தாலே போதும்!
சென்னை: விமானத்தில் செல்லும் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள வெறும் 585 ரூபாய் இருந்தால் போதும் .. சேலம் டூ பெங்களூர் நகருக்கு ஜூன் மாதம் பயணிக்க இப்போது பேடிஎம்மில் புக்கிங் செய்தால் கட்டணம் மிக குறைவாக உள்ளது. இதை பற்றி இப்போது பார்ப்போம்.
விமானத்தில் செல்ல வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும்.. ஆனால் விமானத்தில் செல்ல குறைந்தது 3000 ரூபாய் முதல் 4000 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியதிருக்கும். இதேபோல் குடும்பத்துடன் வாழ்நாளில் ஒருமுறையாவது விமானத்தில் பயணிக்க ஆசை உள்ளவர்களும் குறைந்தது 10000 ரூபாய் அளவிற்கு செலவு செய்தால் தான் போகவே முடியும். அதற்கும் விமானத்தில் பயணிக்க ஆர்வமே இல்லாத ரூட்களை தேர்வு செய்ய வேண்டும்.

அதுவும் 3 மாதத்திற்கு முன்பே தேர்வு செய்ய வேண்டும்.. எல்லாவற்றுக்கும் மேலாக விமான டிக்கெட் புக்கிங் செய்யும் இணையதளத்தில் ஆஃபர்கள் இருக்க வேண்டும். கிரிடிட் கார்டு, டெபிட் கார்டு ஆஃபர்கள், யூபிஐ ஆஃபர்கள் இருக்க வேண்டும்.. அப்படி இருந்தால் தான் சாத்தியம். குறிப்பாக நமக்கு வேண்டிய ரூட்டில் அந்த ஆஃபர்கள் இருக்க வேண்டும்.. அப்படியான ஆஃபர்கள் எப்போது வரும் என்று காத்திருக்க வேண்டும்.. இந்நிலையில் அப்படியான ஒரு ஆஃபர் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு வந்துள்ளது.
உங்களுக்கு விமானத்தில் செல்லும் ஆசை இருந்தால், அக்கவுண்டில் வெறும் 525 ரூபாய் இருந்தால் போதும் .. சேலம் டூ பெங்களூர் நகருக்கு ஜூன் மாதம் பயணிக்க இப்போது பேடிஎம்மில் புக்கிங் செய்யுங்கள். அதை பற்றி இப்போது பார்ப்போம். உங்கள் மொபைலில் பேடிஎம் ஆப்பை ஓபன் செய்யுங்கள், அதில் விமான டிக்கெட் புக்கிங் செய்ய பிளைட்ஸ் (flights) என்பதை கிளிக் செய்யுங்கள்.
அதில் புறப்படும் நகரம் என்பதில் சேலம் நகரை கிளிக் செய்யுங்கள்.. சேரும் நகரம் என்பதில் பெங்களூர் நகரை செலக்ட் செய்யுங்கள். அதில் சில நாட்களுக்கு டிக்கெட் கட்டணம் வெறும் 275 என குறைவாக காட்டும். உதாரணமாக நான் ஜூன் மாதம் 18ம் தேதியை பயண தேதியாக செலக்ட் செய்தேன். அதில் டிக்கெட் கட்டணம் டிக்கெட் வெறும் 275 ரூபாய் தான் காட்டியது... கன்வீன்ஸ் சார்ஜ் 310 ரூபாய் சேர்த்து Rs.585 வரும். இதை அலியன்ஸ் ஏர் விமான நிறுவனம் வழங்குகிறது. எனவே இப்பவே புக் செய்யுங்கள் விமான பயண ஆசையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். இந்த தகவலை நெட்டிசன் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சென்னை கோவை மற்றும் சென்னை மதுரை, சென்னை பெங்களூர், சென்னை ஹைதரபாத் போன்ற வழித்தடங்களிலும் 3 மாதங்களில் எந்த நாள் குறைவாக உள்ளது என்பதை கண்டுபிடித்து 2500 முதல் 4000க்குள் பயணிக்க முடியும். அதேபோல் சில வங்கிகளின் கார்டுகளுக்கு ஆஃபர்கள் உள்ளது. அதை பயன்படுத்தி பாதிக்கு பாதி கட்டணத்தில் பயணிக்க முடியும்..


-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications