Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவிற்கு போகாதீங்க.. தாஜ்மஹால் முன்பு போட்டோ எடுத்த சுவிட்சர்லாந்து சுற்றுலா பயணி இன்ஸ்டா பதிவு

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பெண், டிஜிட்டல் கிரியேட்டர் தாஜ்மஹாலுக்கு முன்னால் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், அவரது இன்ஸ்டாகிராம் பதிவில் "இந்தியாவுக்கு பயணம் செய்ய வேண்டாம்..." என்று குறிப்பிடப்பட்டுள்ளது ஏன் தெரியுமா?

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பயண வலைப்பதிவாளர் 'நவ் ஆரியா' என்பவரின் வைரல் வீடியோ சமூக ஊடக தளங்களில் பரவி வருகிறது. இந்த டிஜிட்டல் கிரியேட்டர், உலகம் முழுவதும் பயணம் செய்து வீடியோக்களை உருவாக்கி வருகிறார். தற்போது, சிவப்பு லெஹங்கா அணிந்து தாஜ்மஹாலுக்கு முன்பு அவர் நடனமாடுவது போன்ற வீடியோ இணையத்தில் பரவலாகப் பார்க்கப்பட்டு வருகிறது.

taj mahal rajasthan travel

நவ் ஆரியா யார்?: naw.aria என்ற பெயரில் சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமில் இவர் செயல்பட்டு வருகிறார். உலகம் முழுவதும் பயணம் செய்யும்போது பயண வீடியோக்களை உருவாக்கி வருகிறார். தாஜ்மஹாலுக்கு முன்பு சிவப்பு லெஹங்கா அணிந்து நடனமாடுவது போன்ற அவரது வீடியோ இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கான வியூஸ் பெற்றுள்ளது.

Don't travel to India என்ற தலைப்பை இந்த வீடியோவில் அவர் பதிவிட்டதால் இந்திய ரசிகர்கள் ஷாக் ஆகினர். ஆனால் அந்த வீடியோவின் தலைப்பு எதிர்மறையாகத் தோன்றியபோதிலும் முழுமையான பதிவின் தலைப்பு "ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில் வாழ்நாளுக்கான சாகசத்திற்கு நீங்கள் தயாராக இல்லாவிட்டால் இந்தியாவுக்கு பயணம் செய்ய வேண்டாம்" என்று உள்ளது.

இந்தியாவின் மீது காதல்: ஜூன் மாதம் இந்தியாவுக்கு பயணம் செய்த ஆரியா, ஜெய்ப்பூர், ஆக்ரா (தாஜ்மஹால்), டெல்லி (குதுப் மினார்) போன்ற முக்கிய இடங்களை சுற்றிப் பார்த்தார். அவர் ஜெய்ப்பூரின் சுவையான உணவை ருசித்ததோடு, ராஜஸ்தானி நாட்டுப்புற நடனத்தையும் ரசித்துள்ளார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்து, அதன் பன்முகத்தன்மையை உலகிற்கு காட்டியுள்ளார்.

taj mahal rajasthan travel

இந்தியாவின் அனுபவங்கள்: இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட மற்றொரு பதிவில், இந்திய தெருவோர உணவுகளை புகழந்துள்ளார். "இந்தியாவில் தெருவோர உணவு என்பது நீங்கள் கண்டிப்பாக அனுபவிக்க வேண்டிய ஒரு சுவையான பயணம்" என்று அவர் பதிவிட்டுள்ளார். ஜெய்ப்பூரில் உள்ள பிரபலமான Amber Fort ஐ பாரம்பரிய உடையில் அவர் சென்று பார்த்தார். எனவே, வைரல் வீடியோவின் தலைப்பு எதிர்மறையாக இருந்தாலும், முழுமையான பதிவு இந்தியாவின் மீதான அவரது காதலை வெளிப்படுத்துகிறது. வீடியோவின் தலைப்பை பார்த்த அவசரமாக திட்டி கமெண்ட் செய்த பலரும் முழுமையாக வீடியோவை பார்த்த பிறகு அவசரப்பட்டு விட்டோமே என்று வருத்தப்பட்டு பதிவு செய்வதை பார்க்க முடிகிறது.

இன்னும் சொல்லப்போனால், நவ் ஆரியாவின் இந்திய பயணம், இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் அழகை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அவரது வீடியோக்கள், பலரின் பயணத் திட்டங்களை மாற்றி, இந்தியாவை அவரது பாலோவர்கள் மத்தியில், ஒரு பிரபலமான பயண இடமாக மாற்றியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+